புதன், 8 டிசம்பர், 2010

GCE(OL) Vembadi வேம்படி 3 ஏ யில் முன்னணிப் பெறுபேறுகள்

க.பொ.த. (உ/த) பெறுபேறு வெளியானது - யாழ்.இந்து, வேம்படி மகளிர் கல்லூரி 3 ஏ யில் முன்னணிப் பெறுபேறுகள்
க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறு திருப்திகரமாக இல்லை; யாழில் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி
க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பேறுபேறுகள் நேற்று வெளியாகின. இதில் யாழ். மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி என்பன முன்னணி பெறுபேறுகளை பெற்றன.

இதில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கு.நிருஜன் பெற்றுக்கொண்டார்.

கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன், ஹாட்லிக் கல்லூரி மாணவன் தெய்வேந்திரன் பிரணவன், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் சின்னக்கோன் சிந்துஜன் ஆகியோர் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருசோத்தம குருக்கள் ராஜாராம் 3 ஏ சித்திபெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தையும் மூன்றாம் இடத்தை வேம்படி மகளிர் கல்லூரி மாணவி லக்ஸ்ரெலா மரியதாஸும் பெற்றுக்கொண்டனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து. 3 ஏ-12, வேம்படி மகளிர் கல்லூரி 3 ஏ-11, ஹாட்லிக் கல்லூரி 3 ஏ-8, சாவகச்சேரி இந்து 3 ஏ-5, கொக்குவில் இந்து 3 ஏ-4 பெற்றுள்ளனர்.
க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறு திருப்திகரமாக இல்லை; யாழில் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி
க.பொ.த உயர்தர பரீட்சையில் திருப்திகரமான பெறுபேறு கிடைக்காத நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட  மாணவிகள் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையைச் சேர்ந்த  மாணவிகளான இவர்கள் இருவரும், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை முடிவுகளை நேற்றுக் காலையில் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் எதிர்பார்த்தபடி பரீட்சை பெறுபேறுகள் திருப்திகரமாக அமையாததால் மனமுடைந்த இம்மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
பின்னர் இம்மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
2010ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்  நேற்று வெளியாகின.

கருத்துகள் இல்லை: