செவ்வாய், 7 டிசம்பர், 2010

சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராகும் பிரித்தானியர்கள்


இங்கிலாந்து நாட்டு மக்கள் தொகையில்; வெள்ளை நிற பிரித்தானியர்கள் எண்ணிக்கை 84 சத வீதம் தான். இன்னும் 56 ஆண்டு களில் அவர்கள் சிறுபான்மையின ராகி விடுவார்கள் என்பது சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் கோல்மன் ஒரு ஆய்வு நடத்தினார். இப்போது உள்ள அளவில் பிறநாட்டினர் குடியேறுவது நீடித்தால் இன் னும் 56 ஆண்டுகளில் வெள்ளைக்கார பிரித்தானியரை விட மற்ற இனத்தினர் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
தொழிற்கட்சி ஆட்சியின்போது ஆண்டு தோறும் 2 இலட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டு வந்தது. இதை ஒரு இலட்சமாக குறைக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. குடியேறுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரமாக நீடித்தால் 2051ம் ஆண்டு வெள்ளை பிரித்தானிய இன மக்கள் தொகை 59 சதவீதமாக குறைந்து விடும் என்று தேசிய புள்ளிவிவர இலாகா மதிப்பீடு செய்துள்ளது

கருத்துகள் இல்லை: