புலி ஆதரவாளரின் லண்டன் ஆர்ப்பாட்டம்
ஜனநாயகத்தை மதிக்கும் எந்தவொரு நாடும் மெளனமாக இருக்க முடியாது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்து பிரிட்டனில் புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடி க்கையையிட்டு ஜனநாயகத்தை மதிக்கும் உலகின் எந்தவொரு நாடும் மெளனமாக இருக்க முடியாது என்று பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறியுள்ளார். மக்கள் அபிமானத்துடன் கூடிய தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்க ழகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டதே அந்த பல்கலைக் கழகத்துக்கு பெருமை தருவதாகும். எனினும் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இடைஞ்சல் மூலம் பயங்கரவாதத்துக்கு துணை போகும் சிலர் சர்வதேச ரீதியில் இருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறான செயல்கள் மூலம் இலங்கையர்கள் என்ற வகையில் நாம் மேலும் வலுப்பெறுகிறோம் எமது சிந்தனைகளை எந்தவொரு சக்தியாலும் பணியவைக்க முடியாது.
பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்து அதனை முற்றிலும் ஒழித்துக்கட்டிய உலகிலுள்ள ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். ஜனாதிபதி இந்த நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இங்கு வசிக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனங்களும் கெளரவமாக வாழும் உரிமையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் நிலையில் பிரிட்டனில் புலி ஆதரவாளர்களின் இந்த செயலை சிறியது என்று கருதமுடியாது. ஜனநாயகத்தை மதிக்கும் உலகின் எந்தவொரு நாடும் இதனை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பயங்கரவாதம் தொடர்பான தமது நிலைப்பாடு என்ன என்பதை ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகள் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக