செவ்வாய், 7 டிசம்பர், 2010

சீனாவில் கூகுள் தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது!


பிரபல தேடுபொறி இணையதளமான கூகுள் சீனாவில் தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.சீனாவில் தனது இணையதளம் தொடர்ந்து சில விஷமிகளால் சிதைக்கப்பட்டதாலும், இணையதள தகவலுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் சீனாவுக்கான தனது சேவையை கூகுள் மூடிவிட்டது.

ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி காரணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோவில் 5-வது முக்கியத் தலைவராக இருப்பவர் லீ சங்சன். கூகுள் இணையதளத்தில் அவர் தனது பெயரை டைப் செய்து தேடியபோது அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஏராளமான இணையதளப் பக்கங்களின் தொடர்புகள் வந்துள்ளன. இதனால், கோபமடைந்த அவர் கூகுள் இணையதளத்தை சட்டவிரோதமாக சிதைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், விக்கிலீக்ஸை மேற்கொள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளிவரும் “கார்டியன்” நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: