ஒருவன் கண்களினூடாக மற்றவர் காட்சியை காணும் அதிசய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கனடாவில் வாழ்கின்றனர். இது தொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வேர்னன் எனும் இடத்தைச் சேர்ந்த டரியானா மற்றும் கிறிஸ்டா ஹொகன் ஆகிய இந்த ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் ( இரட்டைப் பெண் குழந்தைகள் (4 வயது) இருவேறு உடல்களையும் இரு முகப் பகுதிகளையும் ஒரே மூளையையும் கொண்டு அபூர்வமான முறையில் பிறந்துள்ளனர்.
எனினும் அவர்களது பார்வைப்புல ஆற்றல் குறித்து இதுவரை அறியப்படாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது மேற்படி இரட்டையர்கள் தமது சொந்தக் கண்களினூடாக பார்க்கும் ஆற்றலுக்கு மேலதிகமாக, ஒருவருக் கொருவர் மற்றவன் கண்களினூடாக பார்க்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்படி குழந்தைகளை பரிசோதனைக்குட்படுத்திய நரம்பியல் மருத்துவ நிபுணரான டக் கோச்ரேன் விபரிக்கையில், ‘இந்த குழந்தைகளின் தலையிலுள்ள குருதிக் குழாய்களிலும் நரம்புக் கலங்களிலும் இணைப்பு காணப்படுகிறது. இதனால், தனியொரு மூளையைக் கொண்ட இந்த இரட்டையர்களுக்கு இரு ஜோடிக் கண்களின் பார்வைப்புலத்தையும் ஒருங்கே பெறுவது சாத்தியமாகியுள்ளது’ என்று கூறினார். மேலும் இந்த இரட்டையர்கள் தம் மிடையே மற்றவர் என்ன செய்கிறார் என்பதை உணரும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை அறியக்கூடியவர்களாகவும் உள்ளனர். இந்த இரட்டை சிறுமிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உணராதவர்களாக விளையாடி மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் எத்திசையில் செல்வது என்பது குறித்து இருவடையேயும் முரண் பாடு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் டயானாவை விட கிறிஸ்டா சிறிது உயரமாக வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருவருக்கும் பொதுவான தனியொரு மூளையுடன் இரட்டையர்கள் பிறப்பது 2.5 மில்லியன் பிறப்புக்களில் ஒரு பிறப்பு என்ற வீதத்தில் நடைபெறுவது அபூர்வ நிகழ்வாகும். ஆனால் இத்தகைய குழந்தைகள் இறந்தே பிறப்பது வழமை யாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக