ஞாயிறு, 5 டிசம்பர், 2010

லண்டன் தமிழர் ஆர்ப்பாட்டம் முட்டாள்தனம்; பிரபா, திகா கண்டனம்

ஜனாதிபதி ராஜபக்ஷ்வுக்கு எதிராக ஒருசில லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமை முட்டாள்தனமான ஒரு விடயம் எனவும் இதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், சற்றுமுன்பு இடம்பெற்ற ஊடகவியலாளர்    மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே   அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினை உரையாற்றவிடாது, புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முட்டாள் தனமானதொரு விடயம். இதனால் இலங்கையில் ஏதும் நடந்துவிடப்போவதில்லை.
இந்த போராட்டத்தினால் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வெறுப்பு ஏற்படும். அதனால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கிடைக்கும் நிவாரணம்கூட கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.  யுத்தம் முடிந்து சமாதானம் நிலவிவரும் இக்காலகட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்ந்துகெட்ட தமிழ் மக்களுக்கென அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வேளையில், புலம் பெயர் தமிழர்கள் அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்காது, அவர்களுடன் இணைந்து அபிவிருத்தி திட்டத்தில் பங்கு கொள்ளவேண்டும்.
லண்டனில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளவில்லை, ஒருசில தமிழர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர், ஆனாலும் அனைத்து தமிழர்களுக்கும் தற்போது அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டிலே நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரமும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: