
இராணுவத்தினரது பெயரினை பயன்படுத்தி சில குழுக்கள் நன்கொடையென கூறி சட்டவிரோதமாக பணம் சேகரிப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியம் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு இன்றி தனியார் அல்லது தன்னிச்சையான அமைப்புகள் இவ்வாறு இராணுவத்தினரது பெயரை பயன்படுத்தி பணம் சேகரிப்பது சட்டவிரோதமானதும் எனவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியம் நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு அவர்கள் இராணுவத்தினரது நிதி சேகரிக்க வேண்டுமாயின் அது குறித்து அவர்கள் குறித்த அமைச்சிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இராணுவத்தினர் பெயரை பயன்படுத்தி சட்டவிரோத பணசேகரிப்புகளில் ஈடுபட்டால் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக