சென்னை:மாஜி அமைச்சர் ராஜா வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது. இப்படிப்பட்ட பூதாகர சர்ச்சையில் சிக்கியதால் தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியை இழந்தார் ராஜா. சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு என அடுத்தடுத்துநெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இந்த வரிசையில் இன்று ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்த துவங்கினர்.
காலை 7.30 மணிக்கு ரெய்டு தொடங்கியது. டில்லியில் இருக்கும் அவரது அதிகாரப்பூர்வ வீடு மற்றும் சென்னை பெரம்பலூரில் இருக்கும் அவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. சென்னை ஆர். ஏ.புரம்,ஆல்வார்பேட், நந்தனம்,பெரம்பலூர்,கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், பினாமியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.4 அதிகாரிகள் : ராஜாவின் வீடுகள் தவிற அவர் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகிய 4 அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது. டில்லியில் இருக்கும் தொலைதொடர்பு அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறுகிறது.
தி.மு.க., அதிர்ச்சி : மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க., வின் முக்கிய தலையான ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தப்படுவது தி.மு.க., மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் - மதுரை,இந்தியா
2010-12-08 09:42:17 IST
அப்படியே மஞ்சத்துண்டு வீட்டையும் ரெய்டு பண்ணுங்க, நிறைய கிடைக்கும்.......
நக்கீரர் - மதுரை,இந்தியா
2010-12-08 09:41:01 IST
வரவேற்கிறோம். சி.பி.ஐ., ரெய்டு மட்டும் போதாது. கூட்டுக்குழு விசாரணை கண்டிப்பாக தேவை....
தேவி - சென்னை,இந்தியா
2010-12-08 09:40:02 IST
சூப்பர் அப்பு...
அன்பு - சென்னை,இந்தியா
2010-12-08 09:39:56 IST
சாமி, அவருக்கு மொத்தம் எத்தன வீடு சாமியோவ்...
கனிமொழி - சேலம்,இந்தியா
2010-12-08 09:39:45 IST
நெருப்பில்லாமல் புகையாது ராசா...இதில் உமக்கும் கழகத்துக்கும் அதிர்ச்சி.பொது ஜனங்கள் ஆகிய எங்களுக்கு அதிர்ச்சி இல்லை..ஒரு நல்ல வேட்டை தான் இந்த ரிட்...இது பற்றிய உண்மைகள் முழுவதும் வெளியே வரட்டும்.......
venkat - ஜூரோங்வெஸ்ட்singapore,இந்தியா
2010-12-08 09:39:33 IST
நன்று .அவரது கட்சியை தேசிய அளவில் தடை செய்ய வேண்டும்.இப்படி செய்தால் தான் அரசியல் வாதிகள் திருந்துவார்கள் .அவர்களுடைய சொத்துக்கள் முடக்கவேண்டும் ....
அருண் சென்னை - சென்னை,இந்தியா
2010-12-08 09:39:21 IST
நீதி இன்னும் செத்து விடவில்லை. கடவுளுக்கு நன்றி....
ராஜசேகர் - salem,இந்தியா
2010-12-08 09:37:27 IST
என்னதான் ரெய்டு பண்ணினாலும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கிடைக்கவா போவுது...
எம் ஜி லக்ஷ்மன் - சென்னை,இந்தியா
2010-12-08 09:36:33 IST
மத்திய அரசு கவனத்துக்கு வராம சி பி ஐ ரெய்டு நடக்க வாய்ப்பு இல்ல..கூட்டணிக்கு ஆப்பு.. மக்களை சோம்பேறி ஆக்கும் இலவச ஆட்சி மாறினால் சந்தோசம்..கடந்த நூற்றாண்டுல 300 % விலைவாசி ஏறியது கடந்த மூன்று ஆண்டுகளில்தான்..வயிறு எரியுது....
அம்பி - சென்னை,இந்தியா
2010-12-08 09:34:49 IST
நல்ல move. என்ன செய்ய போகிறார்கள் கரை வேட்டிகள். இதில் காங்கிரஸ் க்கும் கூட்டு உண்டு. தவறு செய்த அனைவரும் தண்டிக்க பட வேண்டும். இது இந்தியா. கனவு காண்போம்....
gvass - chennai,இந்தியா
2010-12-08 09:32:07 IST
அழிவு ஆரம்பம். மஞ்ச துண்டு என்ன சொல்ல போகிறது...
மீனா - சிகாகோ,இந்தியா
2010-12-08 09:31:32 IST
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி! நீதி தேவனின் அரசாட்சி! அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி! உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியலே! நம்ம கண்ணா நம்மாலே நம்ப முடியலே! எல்லாமே கண்துடைப்பு! காங்கிரஸ் செய்யும் ஒரு உன்னத நாடகம்! பணம் பத்திரமாக சுவிஸ்இல் இருக்கு! மக்கள் பாவம்! எதையும் நம்பி விடுவார்கள்! கருவுக்கு தெரியாத அரசியல் ஞானமா!...
தமிழழகன் - Puducherry,இந்தியா
2010-12-08 09:31:21 IST
அப்படி போடு சபாஷு......
கா.பெரியசாமி - தோஹாQatar,இந்தியா
2010-12-08 09:30:31 IST
very good action by Central Govt....
விஜய் - chennai,இந்தியா
2010-12-08 09:29:36 IST
dmk வை கண்டிப்பா காங்கிரஸ் கழட்டி விடப்போகுது..........
pandiyan - chennai,இந்தியா
2010-12-08 09:29:30 IST
தி மு க குடும்பத்துல எல்லார் வீட்டுலயும் தேடினாதான் ஏதாவது வாய்பிருக்கு....
ராஜா - singapore,இந்தியா
2010-12-08 09:27:37 IST
இனி தி.மு.க விற்கு சங்குதான். வாழ்க ஜனநாயகம். நல்லதொரு முடிவாக இருந்து இந்த தமிழ்நாட்டை காப்பாற்றினால் போதும்....
மயூர siva - மயூரவிகார்Delhi,இந்தியா
2010-12-08 09:26:11 IST
எத்தனை ரெய்ட் நடந்தால் என்ன சுருட்டிய பணம் வெளி வருமா ? இந்த ரெய்ட் ரொம்ப லேட். கொஞ்ச நாள் நாம் எல்லாம் மறந்து விடுவோம். இது வரைக்கும் எந்த அரசியல்வாதியாவது ஊழலுக்காக சிறை வாசம் அனுபவித்திருக்கிறார்களா ?...
Vicky - chennai,இந்தியா
2010-12-08 09:21:36 IST
சுப்ப்பர்ர்ர்ர்..... காலையில் ஒரு இனிய செய்தி...... வாழ்க சிபிஐ :) :) :) :)......
PRADEEP - Dubai,இந்தியா
2010-12-08 09:17:51 IST
only for eye wash....
karthik - s,சிங்கப்பூர்
2010-12-08 09:10:57 IST
just for fun........
ஜோசப் P K - சென்னை,இந்தியா
2010-12-08 09:03:40 IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக