வெளுத்துக்கட்டு படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்ததோ இல்லையோ, படத்தில் நடித்த அருந்ததிக்கு லட்சுமி கடாட்சம் ரொம்பவே கிடைத்திருக்கிறது.
இன்றைய தேதியில் இவரும் களவாணி ஓவியாவும்தான் அதிக படங்களில் நடித்து வருகிறார்கள். அருந்ததியின் கைவசம் தற்போது இருப்பது மூன்று படங்கள்.
போடி நாயக்கனூர் கணேசன் படத்தில் ஹரிக்குமாருக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் கருப்பர் நகரம், வவ்வால் ஆகிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர வேறு சில படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக