வெள்ளி, 27 மே, 2011

சாய்பாபா படத்தில் விபூதி கொட்டுகிறதா?

வேலூரில் வைக்கப்பட்டுள்ள சாய்பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக தகவல் பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு புட்டபர்த்தி சாய்பாபா மறைந்தார். அவரது பக்தர்கள், பாபா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
வேலூர் கொசப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் சத்ய சாயி சேவா சமிதி மண்டலி உள்ளது. இங்கு புட்டபர்த்தி சாய்பாபா படம் வைக்கப்பட்டுள்ளது. 
 இந்த படத்தில் இருந்து விபூதி கொட்டுவதாக தகவல் பரவியது. இதையறிந்த பக்தர்கள் குடும்பம் குடும்பமாக பரவசத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

‘கடந்த வாரம் பவுர்ணமி தினத்தில் பாபா படத்தில் கொஞ்சம் விபூதி படர்ந்திருப்பதை பார்த்தோம். அதை துடைக்காமல் அப்படியே விட்டுவிட்டோம். நாளடைவில் அந்த விபூதி படலம் பாபா படம் முழுவதும் வேகமாக பரவி கொட்டுகிறது.
பாபா படத்தில் கொட்டும் விபூதியை பார்க்க இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சென்றுள்ளார்கள்.

வாரம் ஒரு நாள் மட்டும் பஜனைகள் நடைபெற்று வந்த இங்கு இப்போது தினமும் பஜனைகள் நடைபெறுகிறது’ என்றார் மண்டலியின் ஒரு

கனிமொழியிடம் சின்னக் கலக்கம் கூட இல்லை. அசாதாரண தைரியத்துடன்

அடுக்கடுக்கான சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க.மே 13-ந் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த தி.மு.க.வினரையும் மனதளவில் புரட்டிப்போட்டுவிட்டது என்றால், மே 20-ந் தேதியோ, அவர்களை உச்சபட்சமாய் பதறவைத்துவிட்டது.அன்றுதான் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியானது. தீர்ப்புக்கு முதல் நாளான 19-ந் தேதி டெல்லியில் இருந்து கலைஞரைத் தொடர்புகொண்ட தி.மு.க.நாடாளுமன்ற கட்சித் தலைவரான டி.ஆர்.பாலு "கனிமொழிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைத்துவிடும். ராம்ஜெத்மலானி யின் வாதம், புதிய கோணத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. நான் இங்கு பலரையும் சந்தித்துக் கேட்டபோது ஜாமீன் கிடைத்துவிடும் என்று உறுதிபடக் கூறுகிறார்கள்' என தான் சந்தித்த சிலரது பெயரையும் குறிப்பிட்டு நம்பிக்கையூட்டினார்.கனிமொழியின் தாயாரான ராஜாத்தியம்மாள், ஜாமீன் கிடைத்ததும் கனிமொழி சென்னைக்குத்தானே வரப்போகிறார் என்று, டெல்லிக்குக் கூட போகாமல் மகளின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார். நாம் அன்றே கனிமொழிக்காக வாதிடும் டீமில் இருக்கும் வழக்கறிஞர்களிடம் கேட்டபோது "சட்டப்படி பெயில் கிடைக் கும். அதே சமயம், இந்த வழக்கு அதிக பரபரப்பாக்கப்பட்டு இருப்பதால் எதிராகப் போகத்தான் வாய்ப்பு இருக்கிறது' என்று நெற்றி சுருக்கினர்.20-ந் தேதி காலை தன் கணவர் அரவிந்தனுடன் கனிமொழி நீதிமன்றத்துக்கு வந்தார். கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் சரத்தும் கலவர முகத்துடனே அங்கு ஆஜராக, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்களும் கட்சியின் முக்கியஸ்தர் களும் வழக்கறிஞர்களும் முன்னதாகவே வந்து காத்திருந்தனர். தீர்ப்பை மதியம் ஒரு மணிக்கு வழங்குவதாக நீதிபதி சைனி சொல்ல, காத்திருந்த அத்தனைபேர் நெஞ்சிலும் படபடப்பு. எல்லோரும் நீதிபதி சைனி முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நீதிபதியோ 2.30-க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து பதட்டம் கலந்த சஸ்பென்ஸை நீட்டித்தார்.மதியம் 2.30-க்கு நீதிபதி சைனி தீர்ப்பு வழங்க ஆயத்தமானார். பிறகு?வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் கனிமொழியின் மன நிலை குறித்தும், கனிமொழியுடனே இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதையிடம் நாம் கேட்டபோது ""எல்லோரும் எழுந்து நின்றோம். கனிமொழியும் சரத்தும் கூட அமைதியாக எழுந்து நின்றனர். தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பட படப்பில் இருந்தோம். நீதிபதியோ நாங்க எதிர்பார்த்ததற்கு மாறாக, கனிமொழிக்கு ஜாமீன் வழங்க இயலாது என்று தெரிவித்துவிட்டார். சரத்தின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஒரு நிமிடம் எங்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கனிமொழிக்கு பக்கத்தில் இருந்த நூர்ஜகான் பேகமும் காரல்மார்க்ஸும், அய்யோ இப்படி ஆயிடிச்சேன்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க. கனிமொழிதான் அவங்களை சமாதானப் படுத்தினாங்க. எனக்கும் கண்ணில் நீர் திரண்டது. எனது கை களைப் பிடித்துக்கொண்டு, "ஏன் அழறே? எதா இருந்தாலும் சந்திப்போம். நான் எந்தத் தப்பும் செய்யலை. அதனால் பயப்படவேண்டிய அவசியமும் இல்லை' என கனிமொழி அசாதாரண தைரியத்துடன் எனக்கும் ஆறுதல் சொன்னாங்க.. கனிமொழியிடம் சின்னக் கலக்கம் கூட இல்லை.அவங்களை சிறைக்கு அழைச்சிக்கிட்டுப் போனப்ப, அத்தனைக் கட்சிக்காரங்களும் வழக்கறிஞர்களும் கலங்கினாங் களே தவிர கனிமொழி புன்னகையோடுதான் புறப்பட்டார். மறுநாள் காலை சிறையில் இருந்து அவங்களைக் கோர்ட்டுக் குக் கொண்டுவந்தப்பவும் பார்த்தேன். அப்ப கனிமொழி, "நான் கலங்கிக் கண்ணீர் விட்டதா மீடியாக்கள் செய்தி வெளியிட்டு என்னை அவ மானப்படுத்தியிருக்கு'ன்னு வேதனையா சிரிச்சாங்க'' என்றார் இறுக்கம் குறையாமலே."சிறை அனுபவம் பத்தி கனிமொழி அப்ப என்ன ஃபீல் பண்ணினாங்க?' என்றோம்.பூங்கோதையோ ""சிமெண்ட் திட்டினால் ஆன படுக்கை இருந்ததாம். முதல் நாள் அவங்களுக்கு தலை யணை இல்லை. மறுநாள் காலை கொண்டுவந்து கொடுத்திருக்காங்க. சிறைக்குள் இருக்கும் கேண்டீனில் டோக்கனைக் கொடுத்து பப்ஸ், பிஸ்கட் மாதிரியானவைகளை அவங்க வாங்கிக்கலாம். இதுக்காக அவங்களுக்கு முதல்நாள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தபோது, ஆயிரம் ரூபாயே போதும்னு சொல்லிட்டாங்க. சிறையில் கொசுக்கடி, மூட்டைப் பூச்சிக் கடின்னு கூட அவங்க குறைபட்டுக்கலை. அசாத்திய மன தைரியத்தோட இருந்தாங்க'' என்றார் ஆச்சரியம் விலகாமல்.கோர்ட்டில் இருந்த மற்றவர்களோ ""அவங்க கணவர் அரவிந்தன் கோர்ட் டில் சமாதானம் சொன்னப்பக் கூட, "நான் அதிர்ச்சியடை யலை. வருத்தமும் படலை. ஆனா நம்ம தரப்பு வாதத்தைக் கூட நீதிபதி பரிசீலிக்க லையே என்கிற ஆதங்கம் மட்டும்தான் எனக்கு இருக்கு'ன்னு சொன்னாங்க'' என்கிறார்கள் உருக்கமாய்.திகார் சிறைக்கு கொண்டு செல்லப் பட்ட கனிமொழி 6-ம் எண் அறையிலும் சரத் 4-ம் எண் அறையிலும் அடைக்கப்பட்டார்கள். பத்துக்கு பதினைந்து அளவுள்ள கனிமொழி யின் அறையில் படுத்து கொள்ள வசதியாக ஒரு சிமெண்ட் பெஞ்ச், மினி கட்டில்போல் கட்டப் பட்டிருக்கிறது. அதன் மீது விரித்துப் போட்டுக் கொள்ள பெட்ஷீட் கொடுப்பார்கள். சொந்த பெட்ஷீட்டையும் பயன் படுத்திக்கொள்ளலாம். அந்த அறையில் ஃபேனும் டி.வி.யும் உண்டு. அதே அறையில் இருக்கும் டாய்லட்டை மறைக்க திரைச் சீலை போடப்பட்டிருக்கிறது. இதில்தான் கனிமொழி தன் சிறை நிமிடங்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்.
கனிமொழி கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அதே நேரம், சென்னையில் கலைஞர் பலத்த அதிர்ச்சியில் இருந்தார். ஸ்டாலின் அருகிலேயே இருந்து சமாதானப் படுத்திக் கொண்டிருக்க, விசயத்தைக் கேள்விப் பட்டுக் கலங்கிப்போன அழகிரி, சென் னைக்கு ஃபிளைட் பிடித்தார். பேராசிரியர், துரைமுருகன், பொன்முடி, நேரு, எ.வ.வேலு போன்றோர் கலைஞருக்கு ஆறு தல் சொல்லும் வழிதெரியாமல் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தனர். தங்கம் தென்னரசோ ‘"ஐயா இப்படி ஆய்டிச்சே' என அழுதார். கலைஞரின் இல்லத்துக்கு வந்த தி.க.வீரமணியும் திருமாவும், அங்கு நிலவிய துயரத்தைக் கண்டு பேச்சற்று இறுகிப்போக, "ஏன் எல்லோரும் அமைதியாக இருக்கீங்க?' என ஒருகட்டத்தில் கலைஞரே தன்னைத் தேற்றிக்கொண்டு அமைதியைக் கலைத்தார்.

திருமாவோ ""எப்படியும் ஜாமீன் கிடைச்சிடும்னு நம்பிக்கையோடு இருந்தேன். ஆனா டெல்லிக்காரங்க எப்பவுமே நமக்கு எதிரியாத்தான் இருக்காங்க. எத்தனை யோ நெருக்கடிகளை சந்திச்ச நீங்க, இதிலும் ஜெயிப் பீங்க. உங்களுக்கு நாங்க துணையா இருப்போம். அர சியல் ரீதியா டெல்லியுடன் வைத்திருக்கும் உறவுபத்தி, அய்யா நீங்க பரிசீலிக்கணும்'' என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக. வீரமணியோ ""சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கிறது என்பதாலேயே, நாம இதில் தலையிடவேண்டாம். மேல் கோர்ட்டிலேயே பார்த்துக்கட்டும்னு நீதிபதி நினைச்சிருப்பார். மேல் கோர்ட்டில் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்'' என்றார் நிதானமாக.
இதற்கிடையே, மத்திய அரசு வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து பிரதமர், கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கும் விருந்தில் தி.மு.க. கலந்துகொள்வது குறித்தும் விவாதம் எழுந்தது. தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் என்ற முறை யில் டி.ஆர்.பாலுவை மட்டும் கலந்துகொள்ளச் செய்வது என்று தீர்மானித்தார் கலைஞர். அதேபோல் 23-ந் தேதி கனிமொழி, ராசா, சரத் ஆகியோரைப் பார்க்க டெல்லிக்குப் போக முடிவெடுத்த கலைஞர், டெல்லியில் சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் கள் யாரையும் சந்திப்பதில்லை என்றும் முடிவெடுத்தார்.


திட்டமிட்டபடி 23-ந் தேதி டெல்லிக்கு வந்த கலைஞரிடம், பாட்டியாலா நீதி மன்றத்தில் மீடியாக்கள் அதிகமாக இருக்கும் என சொல் லப்பட்டதால், மாலை யில் திகார் சிறைக்கே சென்றார்.

மாலை 5.30 மணியளவில் திகார் சிறைக்குச் சென்ற கலைஞர் முத லில் கனிமொழியை அழைத்துப் பேசினார். அப்போது கலைஞர் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

"எப்படிம்மா இருக்கே?' என கலைஞர் வாஞ்சை யாய்க் கேட்க, "நான் நல்லா இருக்கேம்ப்பா. நீங்க உடம்பைப் பார்த்துக்கங்க. இதுக்காக ஏன் இவ்வளவு தூரம் வந்தீங்க?' என கனிமொழி செல்லமாகக் கடிந்து கொண்டார்.

"நீ தைரியமா இரும்மா' என கலைஞர் தெம்பூட்ட முயல,

கனிமொழியோ "நான் நல்லாத்தாம்ப்பா இருக்கேன். எதையும் ஃபேஸ் பண்ண நான் ரெடி' என கலைஞரை மனதைரியத்தால் ஆச்ச ரியப்படுத்தினார். ராஜாத்தியம்மாள்தான் கனி மொழியைப் பார்த்ததும் உடைந்து போய்விட் டார். அவரையும் கனிமொழி தேற்றினார்.

எமோஷனலைக் காட்டாத கலைஞர் "சட்டரீதியா ஜெயிப்போம்' என்றார் கனிமொழியிடம்.

அடுத்து ராசாவை சந்தித்த கலைஞர், நலனை விசாரித்துவிட்டு "மேற்கொண்டு இந்த வழக்கில் என்ன செய்யலாம்' என்று கேட்க...

ராசாவோ "என்னால் உங்களுக்கு எவ்வளவு பிரச்சினை. இதையெல்லாம் பொய்யின்னு உடைச்சிக்காட்டுவோம்' என்றார்.
கலைஞரோ "தைரியமா இரு. பார்த்துக்க லாம்' என ஆறுதல் சொல்ல, "தேர்தல் ரிசல்ட் இப்படி வரும்னு நான் எதிர்பார்க்கலை' என ராசா வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"எல்லாக் கணக்குமே தப்பாப் போய் டிச்சி' என்ற கலைஞர் அடுத்து சரத்குமாரை சந்தித்தார். ரொம்பவும் டென்ஷனாக இருந்த சரத்துக்குதான் கலைஞர் அதிகம் தைரியம் சொல்ல வேண்டியிருந்தது.
திகாரிலிருந்து ஹோட்டலுக்கு திரும் பிய கலைஞரை உள்துறை அமைச்சர் ப.சிதம் பரம் சந்தித்துப் பேசினார். அப்போதுதான் கலைஞர், ப.சிதம்பரத்திடம் பல விஷயங்கள் பேசி வருத்தப்பட்டதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

-டெல்லியிலிருந்து உமர்முக்தார்


மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றிகரமாக மூன்றாவது ஆண் டில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு 22-ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங் விருந்து கொடுத்தார். இதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு மட்டுமே கலந்து கொண்டார். விருந்தின் போது டி.ஆர்.பாலுவிடம் பேசிய சோனியா "கனிமொழி கைதாகக் கூடாது என்று நினைத்தேன். அதற்காக நானும் சில முயற்சிகளை எடுத்தேன். ஆனாலும் இப்படியாகி விட்டது. இதனால் நானும் வேதனை அடைந் தேன்' என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

China பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடியும்: சீனா


china-sri-lanka இலங்கை தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு முழுத் தகைமையையும் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார மைச்சர் ஜி.எல் பீரிஸ் சீனாவுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே சீன வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள், இலங்கை அராங்கத்தால் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக் குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்தும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சீன அமைச்ருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீன வெளியுறவு அமைச்சரை அமைச்சர் பீரிஸ் பீஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மிகவும் சுமுகமானவையென இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

சீனாவின் திடமான வெளிநாட்டுக்கொள்கையான “ஒரே சீனா“ என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் ஆதரிக்கும். சீனா எட்டியுள்ள உயரிய மாற்றமுடியாத முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இலங்கையின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளை சீன வெளிநாட்டமைச்சர் பாராட்டியதோடு நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் வழிநடத்தியுள்ளமைக்கு தனது அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் சீனக் குடியரசுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

தருஸ்மன் அறிக்கையிலுள்ள பல்வேறுபட்ட விடயங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக்குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்து அமைச்சர் பீரிஸ் சீன அமைச்சருக்கு விவரமாக எடுத்துரைத்தார்.

பொதுவாக உருவாகிவரும் சூழ்நிலைகள் பற்றி சீன வெளிநாட்டமைச்சர் யாவ்ஜீசி குறிப்பிடுகையில், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் தமது சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான தகைமையை கொண்டுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மீள் நிர்மாணம் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு சீனா இலங்கைக்கு பக்கபலமாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்பு குறித்து அல்மச்சர் பீரிஸ் குறிப்பிடுகையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், மாத்தளை விமான நிலையம், புத்தளம் அனல் மின்சார திட்டம், கொழும்பு கட்டுநாயக்கா கடுகதிப் பாதை என்பவற்றுக்கு சீனா நிதி வழங்கியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பல வீதி அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாண திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை இரு அமைச்சர்களும் குறிப்பிட்டதோடு இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2ஆம் கட்டப் பணி மற்றும் மாத்தல்ற கதிர்காமம் புதிய ரயில் பாதை விஸ்தரிப்பு என்பவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்தும் இருவரும் பேச்சுவார்ததை மேற்கொண்டனர்.

2011ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேந்கொள்ளும் வருடமென பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் கூறியதுடன் ஸ்ரீலங்கன் விமம்னசேவை தனது சேவையினை ஷங்காய், குவாங்ஸோ ஆகிய இடங்களுக்கு ஆரம்பித்துள்ளதையும் குறிப்பிட்டார். கடந்த வருடம் ஆகஸ்டில் ஜுனான் மாகாணத்தின் ஆளுநர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது சீன ஈஸ்ரன் எயார்லைன்ஸ் தனது கன்னிச் சேவையை ஆரம்பித்ததை இரு அமைச்சர்களும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தனர்.

இலங்கைக்குள் சீன உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுப்பதில் அதிகரித்த வேகத்தை வழங்கும் வசதியை அளித்ததன் மூலம் இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட சேரிட அந்தஸ்தை சீனா வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது. மேம்படுத்திய விமானத்தொடர்புடன் இலங்கைக்குள் கூடுதலான சீன முதலீடுகள் வருமென அல்மச்சர் பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை சீன அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் விசா


மொரட்டுவ பல்கலையில் விசேட பயிற்சி
இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு Online  வீசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் இணையத்தளமான www.lmmigration.gov.lk என்ற இணையத்தளமூடாக விசாவுக்காக விண்ணப்பிக் முடியும். வீசா பெறுவதற்கான நடைமுறை கட்டணத்தை செலுத்தவும் முடியும். இப்புதிய நடைமுறையை விரைவில் குடியகல்வு குடிவரவு திணைக்களம் தயாரித்து வருகிறது. இப்புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு தயாரிக்கவுள்ளது. இலங்கைக்குள் வரும் வெளிநாட்டினரும், இலங்கை ஊடாக செல்லும் வெளி நாட்டினரும் இவ்வாறு Online வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விண்ணப்பிப்பவருக்கு விசா வழங்கப்பட்டு விட்டதற்கான அறிவித்தல் ஷிணிஷிஊடாகவோ,லீசீailஊடாகவே அறிவிக்கப்படும். விசா கிடைத்து இலங்கை வரும் நபர் விமான நிலையத்தில் தனது கடவுச் சீட்டை வழங்கியவுடன் அவருக்குரிய விசா முத்திரை இடப்பட்டு விசாவுக்கான பணமும் அறவிடப்படும். இப்புதிய நடைமுறையை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விரைவில் நடைமுறைப்படுத்தும்.

From today ஓமந்தைவரை யாழ்தேவி


21 ஆண்டுகளுக்கு பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை செல்லவுள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஓமந்தை ரயில் நிலையம் வைபவரீதியாக பயணிகளுடைய பாவனைக்கு இன்று திறந்துவைக்கப்படும். போரின் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஓமந்தை முதல் பளை வரையிலான பாதை புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதை இராணுவத்தினராலும் ரயில்வே திணைக்களத்தினாலும் புனரமைக்கப்பட்டது. ஓமந்தை ரயில் நிலைய திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதி அமைச்சர் றோகண குமாரதிசாநாயக்க ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள். 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியாவிற்கு அப்பால் ரயில் சேவை நடைபெறவில்லை. இன்று காலை கோட்டையிலிருந்து வரும் யாழ்தேவி நேரடியாக ஓமந்தை சென்றடையும். வழமைபோல் அனைத்து ரயில்களும் ஓமந்தையிலிருந்தே ஆரம்பிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழன், 26 மே, 2011

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை மே 30-ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
 தங்கள் சார்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் இல்லாததால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கோரப்பட்டதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனைய்யா விசாரணையை ஒத்திவைத்தார்.

முன்னதாக இந்த வழக்கில் ஒரு சாட்சியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இடத்துக்கு புதிய வழக்கறிஞரை ஜெயலலிதா இதுவரை நியமிக்கவில்லை.

University Ragging பல்கலைக்கழகத்தை மூடியேனும் பகிடிவதையை ஒழிப்பேன்" - அறிவுள்ள அமைச்சர் கருத்து

பல்கலைக்கழகங்களை மூடியேனும் பகிடிவதைகளை இல்லாதொழிக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 80 சதவீதம் பல்கலைக்கழக பகிடிவதைகளை இல்லாமொழிக்க தம்மால் முடிந்துள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (26) உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

சிங்கப்பூரில் விசாக்களின்றி தங்கியிருந்த 48 இலங்கையர் கைது!

சிங்கப்பூரில் விசாக்களின்றி தங்கியிருந்த 48 இலங்கையர்கள் கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் செயற்படும் அனைத்து தங்கு விடுதிகளையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டபோதே சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 48 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 15-70 வரையான வயது பருவங்களைக் கொண்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த வாரமும் சிங்கப்பூரில் 52 வரையான சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முட்டாளை என்ன சொல்றது,அமைச்சர் உதயகுமார்


தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் ஆர்.பி.உதயகுமார். சாத்தூர் தொகுதியில் இருந்து இவர் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அ.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளராகவும், மதுரை, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார். அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணிவதில்லை. இவரது செயல்பாடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல் செல்வது ஏன் என்று கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

அம்மாவே (ஜெயலலிதா) என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா இருக்கும் இடம்தான் எனது கோவில்.

அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவதாலும், சட்டசபைக்கு வருவதாலும், தலைமைச் செயலகத்துக்கு வருவதாலும் அந்த இடம் எனக்கு கோவிலாக தெரிகிறது. அதனால் இந்த 3 இடத்துக்கும் செருப்பு போடாமல் எனது பணியை தொடருகிறேன். வாழ்நாள் முழுவதும் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.
அமைச்சர் உதயகுமார் 

இந்துமதத்திற்கும் பௌத்த மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு-மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க!


இந்து மதத்திற்கும் பௌத்த மத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளதாக யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்க பெருமிதமாகத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இந்து பௌத்தப் பேரவையை அமைப்பது தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்கும் பொழுதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்து மதத் தெய்வங்களை தானும் வழிபட்டு வருவதாக தெரிவித்த யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தமிழ்ப்பண்பாட்டையும் இந்துப்பண்பாட்டையும் பார்த்து தான் வியப்படைந்ததாகவும் தெரிவித்தார். தன்னை அறியாமலே தனக்கு இந்த ஈடுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்து பௌத்த பண்பாட்டுப் பேரவையை அமைப்பதானால் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லுறவு ஏற்படும் என்றும் மேஜர் ஜெனரல் மதகிந்தஹத்துருசிங்க தெரிவித்தார். அதேவேளை இந்துமதத்திற்கும் பௌத்த மத்திற்கும் மிக நெருக்கம் உண்டு எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இதை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பௌத்த விகாரைகளில் இந்துத் தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் மதகிந்தஹத்துருசிங்க பௌத்த விகாரைகளின் அருகாகவும் இந்து ஆலயங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். அதேவேளை இந்து ஆலயங்களுக்கு அருகாக நிலை கொண்டு பாதுகாப்பு பணியாற்றும் படைத்தரப்பினர் விரைவில் அங்கிருந்து வெளியேற்றபபடுவார்கள் எனவும் உறுதியளித்தார்.

தான் பதவி ஏற்று ஒன்றரை வருடங்களாகின்றன என்று தெரிவித்த அவர் இந்தக் காலப்பகுதியில் மதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக் காட்டினார். இனிய தமிழ் மொழியை பேச தான் முயற்சி செய்து வருதாகவும் தளபதி குறிப்பிட்டார். தமிழில் தன்னால் பேச முடியும் என்று தெரிவித்த அவர் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மதகிந்தஹத்துருசிங்க நன்றி வணக்கம் என்று குறிப்பிட்டு தனது கருத்துரையை முடித்துக் கொண்டார்.

இனி தனியார் கல்லூரிகள் கட்டணத்தை இஷ்டம் போல் உயர்த்தலாம்

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பால்...இரட்டிப்பு மகிழ்ச்சி!தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சந்தோஷம்

திருப்பூர் : சமச்சீர் பாடத்திட்டம் ரத்து மற்றும் கல்விக்கட்டண நிர்ணயத்தில் அரசுக்கு தொடர்பில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இரு அறிவிப்புகளும், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்தாண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. வரும் கல்வியாண்டு முதல் இதர வகுப்புக்கும் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்த முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே கல்வி முறை பின்பற்றப்படும் என்ற சூழல் ஏற்பட்டது.அனைத்து வகை பள்ளியிலும் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்பட்டால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையக்கூடும் எனவும், பள்ளிகளில் பாடத்தரம் குறையும் எனவும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்தனர். வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வித்திட்டத்தை பின்பற்ற, தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எதிர்ப்பு களை மீறி பள்ளிகளில் அத் திட்டத்தை, செயல்படுத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நடவடிக்கை தனியார் பள்ளியினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளதால், அரசுக்கு நன்றி தெரிவித்து, பழைய பாடத்திட்டத்தை பின்பற்றும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதேபோல், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும் நடவடிக்கையும் தனியார் பள்ளிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. முரண்பாடுகளுடன் கூடிய கல்வி கட்டணத்தை, கடந்தாண்டு கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்ததில் இருந்து தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோருக்கு இடையே பிரச்னை நிலவி வந்தது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெற்று பள்ளியை செயல்படுத்த முடியாமல் தனியார் பள்ளிகள் திணறி வந்தன. சில பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல், அதிகமாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. மேல்முறையீடுக்கு விண்ணப்பித்த பள்ளி களும், புதிய கட்டணம் எவ்வாறு இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தன. ஓய்வு பெற்ற ரவிராஜபாண்டியன் கமிட்டி புதிய கட்டணத்தை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், கல்வி கட்டண நிர்ணயத்துக் கும், அரசுக்கும் தொடர்பில்லை; தனியார் பள்ளிகள் கேட்டுக்கொண்டால் மட்டுமே அரசு தலையிடும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளது, தனியார் பள்ளியினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,"மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தது வீண் போகவில்லை. சமச்சீர் மற்றும் கல்விக் கட்டணம் சார்ந்த இரண்டு அறிவிப்புகளும் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. பெற்றோர், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு இடையே நிலவி வந்த பிரச்னை, இனி ஏற்படாமல் இருக்கும். தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி மீது பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படும்,' என்றனர்.கல்வித்துறை அதிகாரிகள் நிம்மதி: கல்விக்கட்டணம் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு கல்வித்துறை அதிகாரிகள் மத்தியிலும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "கடந்தாண்டு துவக்கத்தில், மாணவர்களுக்கு சீருடை வழங்கு வது, பஸ் பாஸ் வழங்குவது, புத்தகம் வினியோகிப்பது என வழக்கமான பணியை மேற்கொள்ள முடியா மல், தனியார் பள்ளிகளில் எழுந்த பிரச்னைக்கே அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. "ஆண்டு முழுவதும் இப்பிரச்னை தொடர்ந்தது. வரும் ஆண்டில் அதுபோன்ற பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை; தேவையில்லாத வேலைப் பளு குறைந்துள்ளது,' என்றனர்.
இனி தனியார் கல்லூரிகள் கட்டணத்தை இஷ்டம் போல் உயர்த்தலாம் 

ஹவாலா, அங்காடியா, கோக்கா, பேட்டீ – குழப்பமாக இருக்கிறதா

11250000,00,00,000

ஒரு கோடியே பன்னிரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடிகள் - கண்ணைக் கட்டுகிறதா. இது சும்மா ஜுஜூப்பி ட்ரைலர். இவ்வளவு பணமும் கருப்புப் பணம். இதில் சின்ன,பெரிய நாடுகள் பேதமில்லை. இதை சொன்னதும் சாதாரண ஆட்கள் இல்லை. பன்னாட்டு நிதி முனையம் (International Monetary Fund – IMF) ஒரு வருடத்திற்கு மண்டையில் முடி போன கணித,பொருளாதார, சமூக அறிவியல் பேராசிரியர்கள் பல தரவுகளையும், வழக்குகளையும் வைத்து ஆராய்ந்து ஒரு வழியாய் இவ்வளவு இருக்கலாம்பா என்று சொன்ன தொகை தான் மேலே சொன்னது. டாலரில் சொன்னால் $2.5 டிரில்லியன். கிட்டத்திட்ட உலக வர்த்தகத்தில் 8-10%
பணம். மிதமிஞ்சிய பணம். அளவுக்கதிகமான பணம். சாதி, மத, மொழி, இன, தேசங்கள் தாண்டிய சமன்பாட்டினை ஏற்படுத்தும் ஒற்றை மந்திரம். இந்த ஒன்றில் மட்டுமே இஸ்ரேலியன் பாலஸ்தீனியனை நம்புவான். அரபி கிறித்துவனை நம்புவான். பாகிஸ்தானி இந்தியனையும், இராக்கி இரானியையும் இன்னபிற தேச எல்லைகள் கடந்து ஒருமைப்பாடோடு இருப்பார்கள். சுவிஸ் வங்கி என்பது ஓர் உலகளாவிய குறியீடு. அதன் அர்த்தம் பணம் மட்டுமல்ல. பேராசையினால் மட்டுமே அடுத்தவன் காலை வாரிவிடும் குறுக்குப் புத்தியோடும், ஆனால் வாரினால் தானும் விழுவோம் என்கிற பயத்தோடும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய தத்துவம். கேம் தியரியின் வேறுமாதிரியான வடிவம். சமரசம் உலாவும் இடம் கல்லறை மட்டுமல்ல, சில்லறையும் கூட.
பணத்தினைக் கொண்டு போதல் என்பது ஒரு தலைவலி சமாசாரம். நிறைய மெனக்கெட வேண்டும். இல்லையெனில் மணிரத்னம் + சுஜாதா பாணியில் நிறைய ஆங்கிலமும், அனு அகர்வாலும், லாரி முழுக்க பணமுமாய் “திருடா திருடா” விளையாடலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. பின் எப்படி இவ்வளவு பெரிய பணம் உலகமெங்கும் மாறிக் கொண்டேயிருக்கிறது ?
பணத்தினைக் கைமாற்றுவது என்பது இன்று நேற்றல்ல. ரோமானியர்கள், கிரேக்கர்கள், சோழ/பாண்டியர்கள், எகிப்தியர்கள் காலத்திய சமாசாரம். அப்போது முக்கியமாய் பண்டமாற்று இருந்ததால், பேப்பர் கரன்சிக்கு பதில் தங்கம். நம்மூரில் என்றால் மிளகு, இலவங்கம். ஆனாலும் இதிலும் ஜெகஜாலக் கில்லாடிகள் இருந்திருப்பார்கள். இன்றைக்கு பணம் தொடர்ச்சியாய் கைமாறிக் கொண்டேயிருக்கிறது. வீட்டிலிருந்து கண்டம் விட்டு கண்டம் தாவும் நிலையெல்லாம் சர்வசாதாரணம். இன்னும் கிரகங்கள் தாவுதல் தான் பாக்கி. மனிதர்கள் குடியேறினால் அதுவும் நடக்கலாம்.
காந்தாரி பஜார், குவெட்டா, பாகிஸ்தான். ஆசியாவின் மிக முக்கியமான புண்ணியஸ்தலம். ஹவாலாவின் தலைமையகம். அமெரிக்க ரிசர்வ் வங்கியில் கூட அவ்வளவு கரன்சிகள் இருக்குமா என்று தெரியாது. அந்தளவிற்கு எல்லா ஊர் கரன்சியும் சர்வசாதாரணமாகப் புழங்குமிடம். உலகின் எந்த மூலைக்கும் மேகியை விட வேகமாக பணம் போகும். மாடர்ன் கம்ப்யுட்டர் சிஸ்டங்கள் எல்லாம் இவர்களிடத்தில் தோற்றுப் போகும்.
ஸவேரி பஜார், மும்பை, இந்தியா – இந்தியாவின் தங்க, வைர வியாபாரிகளின் மெக்கா. D கம்பெனி பிராஞ்ச் போட்டு, சேவை வரித் துறையை விட பரிவர்த்தனைகளை கூர்ந்து கவனிக்கும் ஏரியா. இங்கே ஹவாலா கிடையாது. ஆனால் அங்காடியா உண்டு. இது இரண்டு தான் என்றில்லை. சிங்கப்பூரில், துபாயில், மலேசியாவில் என எல்லா ஊரிலும் ஹவாலாவுக்கு ஆட்கள் உண்டு. சிங்கப்பூரில் முஸ்தபாவில் இதைக் கடைக்குள்ளேயே செய்வார்கள்.
நாளிதழ் வாசலில் 6 மணிக்கு வந்து வீழ்வது எவ்வளவு நிச்சயமோ, அதற்கு ஈடான நிச்சயம் ஹவாலாவின் நேர்மை. ஆயுதபூஜைக்கு அடுத்தநாள் கூட வேலை செய்வார்கள்.
ஹவாலா, அங்காடியா, கோக்கா, பேட்டீ – டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் கிறுக்குவதை விடக் குழப்பமாக இருக்கிறதா ?
ஹவாலா – பூஜ்யத்திற்குப் பிறகு இந்தியா உலகிற்கு அளித்த கொடை. ஹவாலா ஒரு இணையான வங்கி கட்டமைப்பு (alternative banking) இந்தியாவில் ஆரம்பித்து, பங்களாதேஷ், பாகிஸ்தானில் தொடங்கி தெற்காசியா நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு விஷயம். லாஜிக் ரொம்ப சிம்பிள். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பணம் போகும். ஆனால், ‘பணமாய்’ கைமாறாது. ஆனாலும் ‘பணம்’ போகும். இதை ஆரம்பித்து வைத்ததில், குடியேறிகளுக்கு (immigrants) பெரிய பங்கிருக்கிறது. குடியேறிகள் தங்களுடைய தாய் மண்ணுக்குத் தொடர்ச்சியாகப் பணம் அனுப்புவார்கள். வங்கி, வயர் ட்ரான்ஸ்பர் மாதிரியான நேரடி சமாசாரங்கள் ஒரு பக்கம். ஆனால் அவசரத்திற்கு அதெல்லாம் உதவாது. அங்கே தான் ஹவாலா ஆரம்பிக்கிறது.
துபாய் எடுத்துக் கொள்வோம். துபாயிலிருந்து ஒரு தொழிலாளி இராமநாதபுரத்துக்கு அவசரமாய் ரூ.50,000 அனுப்பவேண்டும். அவர் துபாயில் இருக்கும் ஹவாலா புரோக்கரிடம் திராமாய் கொடுத்தால் போதும். அவர்களுக்கு சேவை கட்டணத்தைக் கழித்துக் கொண்டு, இராமநாதபுரத்தில் பணம் வந்துவிடும். முக்கியமாய்ப் பார்க்க வேண்டியது, துபாயிலிருந்து இந்தப் ‘பணம்’ வரவில்லை. துபாய் மூலமாக வந்திருக்கிறது. என்ன நடக்கிறது. அந்த ஹவாலா புரோக்கருக்குத் தேவை திராம்கள். அதற்கு ஈடான தொகையை இந்தியாவில் இருக்கும் அவரின் தோழர் இராமநாதபுரத்தில் கொடுத்துவிடுவார். இந்தியாவிலிருந்து வேறொருவர் ரூ.50,000 த்தை துபாய்க்கு அனுப்ப அவரின் தோழரை அணுகியிருப்பார். அந்தப் பணத்தை இந்திய ரூபாயாகப் பெற்று, அது இராமநாதபுரத்துக்குப் போகும். ஆக, துபாய் தொழிலாளியின் ரூ.50,000 திராம்கள், இந்தியாவிலிருந்து துபாய்க்கு அனுப்பிய காசாகவும், இந்தியாவில் துபாய்க்கு கொடுத்த பணம், இராமநாதபுரத்துக்கும் போகும். இது தான் அடிப்படை.
கோக்கா – ஒரு கோடி. பேட்டீ – ஒரு லட்சம் என்பதெல்லாம் ஹவாலாவின் எண் குறியீடுகள். முன்பு ‘பாண்டவ் கோக்கா’ என்றெல்லாம் சங்கேதங்கள் இருந்தது. பாண்டவர்கள் = 5; கோக்கா = கோடி; 5 கோடி. இப்போதிருக்கிறதா தெரியாது. ‘சுஜாதா மூவிஸ்’ பாலாஜி படங்களில்தான் கடத்தல்காரர்கள் “வத்திப்பொட்டி இருக்கா” “நனைஞ்சுப் போச்சு” என்பது மாதிரியான அபத்தமான சங்கேதக் குறீயிடுகளில் பணம், தங்கம், வைரம் கடத்துவார்கள். நிஜத்தில் அப்படியில்லை.
முன்பு, ரூபாய் நோட்டின் எண்கள்தான் அடையாளங்களாய் ஹவாலாவில் இருந்தது. டெக்னாலஜி முன்னேறியதும் அவர்களும் முன்னேறிவிட்டார்கள். இப்போது எம்.எம்.எஸ் படங்கள், ஸ்கெப் உரையாடல்கள் என மாறி ‘அடையாளங்கள்’ நிரூபணமானதும் கை மேல் காசு. தற்போதைய ரேட் அங்காடியாவென்றால் 0.2 – 0.5% இது முழுக்க முழுக்க உள்நாட்டில் கைமாற்றுவது. ஹவாலாவின் தற்போதைய ரேட் 0.45 – 1% ஹவாலாவின் ரேட் என்பது வெறும் பணமாற்றம் மட்டுமல்ல, கரன்சிகளுக்கு ஏற்றாற்போலவும் மாறும். $100 நோட்டுக்கும், $10 நோட்டுக்குமான வித்தியாசங்கள் 0.005% வரை இருக்கலாம். இதென்ன சொற்பத் தொகையாக இருக்கிறதே என்று எண்ணாதீர்கள்.
படிக்க சாதாரணமாக தெரியும் இது தான் தொழிலாளிகள் தாண்டி, முதலாளிகள், தீவிரவாதிகள், ரவுடிகளுக்கான ராஜபாட்டை. இப்படித் தான் கையில் காசாக இருக்கும் பணம் கண்டம் தாண்டி இன்னொரு நாட்டில் அதன் கரன்சியாய் மாறும். ஹவாலா எந்த உலகளாவிய செர்வர் நெட்வொர்க்கும் இல்லாத, ஆனால் உலகின் நம்பர் 1 துரித பண ட்ரான்ஸ்பருக்கான களம். வெஸ்டர்ன் யூனியன் (Western Union) மாதிரியான நிறுவனங்கள் உண்மையாய் சொல்லப் போனால், அடையாள அட்டை, நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டதாக சொல்லிக் கொண்டு நடத்தும் கார்ப்பரேட் ஹவாலா.
அங்காடியா – இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டதாகச் சொல்லிக் கொள்ளும் ‘பணம், பொருள்’ சமாசாரங்களை உள்நாட்டுக்குள் கொண்டு செல்வது. இங்கே கரன்சி மாறுதல்கள் இருக்காது. பணம் என்றால் ஹாட் கேஷ். பொருள் தங்கமாகவோ, வைரமாகவோ இருக்கலாம். ஸவேரி பஜார் மாதிரியான இடங்களில் பெரும்பாலும் பணம் அல்லது வைரம். இவை பெரும்பாலும் கணக்குக்குள் வராத, தணிக்கை செய்யப்படாத பணமாகத் தான் இருக்கும். அந்த வகையில் செய்யும் வரி ஏய்ப்புகளின் மூலம் வரக்கூடிய பணம், பெரும்பாலும் ரியல் எஸ்டேட்டில் இறங்கும்.
இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு எவ்வளவு வர்த்தகம் ஹவாலாவில் நடக்கிறது என்பதற்குப் புள்ளிவிவரங்கள் இல்லை. இதற்கு வேறு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மெக்சிகோ. அமெரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் நாடு. எல்லை தாண்டி மெக்சிகர்கள், அத்துமீறி அமெரிக்காவில் குடியேறுவது ஒபாமாவின் மைக்ரேன் பிரச்னை. எல்லாவிதமான கல்யாண குணங்களும் நிரம்பிய நாடு. போதைப் பொருள் கடத்தலில் கொலம்பியாவிற்கு சவால் விடும் தேசம். அமெரிக்காவிற்குள் போதைப் பொருள் விற்றல் என்பது கிட்டத்திட்ட மெக்சிகோவின் தேசிய தொழில்களில் ஒன்று. 2004 – 2007 என்ற காலக்கட்டத்தில், அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு பல்வேறு போதைத் தொழில் விநியோக உரிமையினால் ஈட்டிய பணம், அதிகமில்லை, ஜஸ்ட் $500 பில்லியன் (ரூ.2250000,00,00,000) லோக்கலாய் சொன்னால், இருபத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடிகள். பெரும்பாலும் போனது ஒரே இடத்திற்கு – குல்ஜாகான், ஸினாலொஹா (Culiacán, Sinaloa). மெக்சிகோவின் குற்றத் தலைநகரம். இது முழுக்க முழுக்க சட்டத்தினை ஏமாற்றி சம்பாதித்த, போதைப் பொருள் விற்ற பணம். கருப்புப் பணம். இதில் கிட்டத்திட்ட $378 பில்லியன் டாலர்கள் சிறு சிறு தொகைகளாக வச்சோவியா வங்கி வழியாகவே குல்ஜாகானிற்கு போயிருக்கிறது. இது வங்கி பின்னலை வைத்துக் கொண்டு நடக்கும் வெஸ்டர்ன் ஹவாலா :)
மெக்சிகோ – அமெரிக்காவிற்கு இடையே மட்டும் இது. இந்தியாவில் எவ்வளவு நடக்கும் என்பதை இந்தியாவிலிருந்து உலகம் முழுக்கப் பரவிக் கிடக்கும் இந்தியர்கள், இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் பணத்தினைப் பாதுகாக்க நினைக்கும் முக்கியஸ்தர்களின் பிண்னணியில் கணக்கிடுங்கள். விடை கிடைக்கும்.
வங்கிகள் எல்லாவற்றையும் கணக்கில் வைத்திருப்பார்களே, அங்கே இது எப்படி சாத்தியம் ? அரசிற்கு தெரியாதா ? எப்படி இது சாத்தியம்? அது அடுத்த வாரம்.
- கல்லா நிரம்பும்.
O
நரேன்

ஒரு நாளில் 5.67 லட்சம்; 30 நாளில் 41.14 லட்சம் ரூபாய்க்கு போன் பில்: பயங்கரவாதிகள் சதியா?

சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்தவரின் அலுவலக தொலைபேசிக்கு ஒரு மாதத்தில் 41 லட்சம் ரூபாய் போன் பேசியதாக தனியார் தொலைபேசி நிறுவனம் பில் அனுப்பியதால், அதிர்ச்சியில் உச்சகட்டத்திற்கே சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்தவர் நிசார் அகமது. "பாவா டெவலப்பர்ஸ்' என்ற பெயரில் அரும்பாக்கத்தில் அலுவலகத்தை வைத்து, ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர், தனியார் மொபைல் நிறுவனம் ஒன்றில், "ஐவிஆர்' (இன்டர் ஆக்டிவ் வாய்ஸ் ரெக்கார்டர்) முறைப்படி, அலுவலகத்திற்கு போன் இணைப்பு வாங்கினார். ஒரு மாதம் 7,485 ரூபாய் பேசிக் கொள்ளும் வசதி கொண்டது.இவருக்கு ஏப்., 27ம் தேதியிட்ட டெலிபோன் பில் வந்தது. மார்ச் 17 முதல் ஏப்ரல் 16 வரையிலான இந்த பில் தொகை 5.67 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. மே 16ம் தேதி ஒரே நாளில் 5.67 லட்சம் ரூபாய்க்கு பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நிசாருக்கு தலையைச் சுற்றியது. ஆப்கானிஸ்தான், தைவான், மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் அழைப்புகள் போயிருந்தன.

இதனால் பதறிப்போன நிசார், மே 20ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் அளித்தார். "சாட்டலைட் உதவியுடன் மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியிருந்தார். இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மே 18ம் தேதியிட்டு 106 பக்கங்கள் கொண்ட ஒரு பில் வந்தது. அதில், ஏப்., 17 முதல் மே 18 வரையிலான நாட்களுக்கான பில் தொகை 35.47 லட்சம் எனவும், அதற்கு முந்தைய பில்லுடன் சேர்த்து 41.14 லட்ச ரூபாய் கட்ட வேண்டுமென்று இருந்தது. வழக்கம் போல் அந்த பில்லிலும், அயல் நாடுகளுக்கு சாட்டலைட் உதவியுடன் பேசியிருந்தனர். இதனால், நிசார் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் உறைந்தனர்.

இதுகுறித்து நிசார் கூறியதாவது:நான் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறேன். இதுவரை வெளிநாட்டிற்குச் சென்றதும் இல்லை; உறவினர்களும் அங்கு இல்லை. என் அலுவலக போனை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் மர்ம நபர்கள் பேசியுள்ளனர். தனியார் தொலைபேசி நிறுவனத்தினர் என் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். என் நிறுவனத்தின் மொத்த வரவு செலவே மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் தான். இதைச் சொன்னதும், அந்த தொலைபேசி நிறுவன அதிகாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.ஆனால், அடுத்த மாதமே 41 லட்சம் ரூபாய்க்கு நான் பேசியதாக பில் வந்துள்ளது. பயங்கரவாதிகள் யாரும் என் போன் எண்ணை பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதல் பில் வந்தபோதே, கடந்த மாதம் 20ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அடுத்த பில் வந்து என்னை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய உள்ளேன்.இவ்வாறு நிசார் கூறினார்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சைபர் கிரைம் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""இந்த புகார் எங்களுக்கு வந்துள்ளது; விசாரணை நடந்து வருகிறது,'' என்று மட்டும் தெரிவித்தார்.

Jeyalalitha சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார்

அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட்.

புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே திங்கள்கிழமை அதிகாலையில் மந்திரி மரியம்பிச்சையின் மரணச் செய்தி வந்தது. அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட். சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார். முதல் நாள் சட்டசபைக்குச் செல்லும் நாளில் இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? 'சட்டசபையில் பதவி ஏற்பு நடக்குமா?’ என்று பேச்சுகள் கிளம்பிவிட்டன. ஆனாலும் திட்டமிட்டப்படி புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவை நடத்த முடிவு செய்ததாம் அரசு. 'நான் பதவி ஏற்றதும் உடனே திருச்சி சென்றுவிடுவேன். எனவே, இதைத் தள்ளிவைக்க வேண்டாம்’ என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டாராம் முதல்வர்.''

புலம்பெயர் புலம்பல்கள் தங்கள் உறவுகளுக்கு உதவ மாட்டார்கள்

வறுமையின் உச்சிக்குச் சென்று தற்கொலைக்கு துணியும் நிலையிலுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த புலம்பெயர் நிதிசேகரிப்பு உதவுமா?

வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நேற்று முன்தினம் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் புலிகள் இயக்க முன்னாள் பெண் உறுப்பினரான 21வயதுடைய லாவண்யா எனும் யுவதி  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 தற்கொலை செய்துகொண்ட இந்த புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினரான லாவண்யாவை அவளின் தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பம் கடந்த வன்னி இடப்பெயர்வின் பின்னர் மிகவும் வறிய நிலையில் சீவியம் நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை பாடசாலைக்கு போகும் நான்கு தம்பிகள். தாய்தான் கூலிவேலை செய்து குடும்பப் பொறுப்பை பார்க்க வேண்டிய நிலைமை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை. மிகச்சிறிய குடிசையிலேயே அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள். குடும்ப கஸ்டம்; வீடு இல்லை இவ்வாறே மன விறக்தியும் வறுமையும் நிறைந்ததாய் வாழும் வளரும் காலத்தில் வாழ்க்கை நடத்திய லாண்யாவிற்கு தந்தையின் கண்டிப்பு மனமுடைந்து போயிருந்த இவளை இலகுவாக தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது. யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டு இரு வருடங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில், சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் புலி உறுப்பினர்களும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரால் ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட்டுவரும் நிதியினில் கொஞ்சத்தையேனும் இவ்வாறான மக்களுக்கு கொடுத்து உதவாமல் புலிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட நிதியினை அதற்குப் பொறுப்பாக செயற்பட்ட பலர் சொகுசாக செலவுசெய்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானோர் மனசு வைத்தால் எந்த வழியிண்லும் அந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட இவ்வாறான மக்களுக்கு சென்றடையச் செய்யலாம். அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதைவிட புலம்பெயர் நாடுகளில் உள்ள நிதியினை இவ்வாறான மக்களைச் சென்றடையவாவது ஏதும் வழிவகைகளை செய்வதற்கு புலம்பெயர் நாடுகளில் நிதிசேகரிப்போர் முன்வருவார்களா? அல்லது புலம்பெயர் தமிழர்கள்  முன்வந்து இவ்வாறான குடும்பங்களின் துயர் போக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய அத்தியாவசிய கேள்வியாகவுள்

ஜெயித்தவர் தோற்றார்; தோற்றவர் வென்றார்' என்று சொல்வார்கள். அது கேரளத்தில்

தோல்வியில் வெற்றி!
எதிர்பாராதது நடந்திருக்கிறது. அதை நிகழ்த்தி இருப்பவர் 88 வயதான வி.எஸ். அச்சுதானந்தன். ""2015-ல் கேரள அரசு 93 வயது முதியவர் ஒருவரை முதல்வராகக் கொண்டு செயல்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?'' என்கிற கேள்வியைக் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி கேரள வாக்காளர்களிடம் கேட்டபோது, அது அவர்களது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகக் கேரள மக்கள் எடுத்துக் கொண்டதன் விளைவுதான் கேரளத் தேர்தல் முடிவுகள்.
அண்டை மாநிலமான தமிழகத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்படும் 87 வயது முதியவரின் தலைமையிலான திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ், தங்கள் மாநிலத்தில் அப்பழுக்கில்லாத, தனது பொதுவாழ்க்கையில் ஒரு சின்ன கறைகூடப் படியாத ஒருவரை அரசியலில் அரிச்சுவடிப் பாடம் படிக்கும் ராகுல் காந்தி விமர்சித்ததை ஏற்றுக்கொள்ளப் பலரும் தயாராக இருக்கவில்லை. படுதோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்த்த இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி மயிரிழையில்தான் ஆட்சியை இழந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வி.எஸ். அச்சுதானந்தன் என்கிற மனிதருக்குக் கேரள மக்களிடம் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்குத்தான் காரணம் என்பது தெளிவு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசின் ஐந்தாண்டுகால ஆட்சியைப் பற்றிப் பெரிதாகக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. பெரிய சாதனைகள் என்று வர்ணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, சுறுசுறுப்பான நிர்வாகம் இருந்ததாகவும் சொல்ல முடியாது. ஆனால், ஊழலற்ற நிர்வாகத்தை முதல்வர் அச்சுதானந்தன் முன்வைத்தார் என்பதை மறுத்துவிடவும் முடியாது.

கட்சிக்குள்ளேயே அச்சுதானந்தனுக்கு எதிராகக் கட்சியின் செயலர் பினராயி விஜயன் நடத்திய பனிப்போர்கள் ஒருபுறம். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை இனத்தவர்களின் மதகுருமார்கள் இடதுசாரி அரசுக்கு எதிராக வெளிப்படையாகவே முன்வைத்த விமர்சனங்கள் மற்றொருபுறம். இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த மூன்று கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மாறியதும், 2009 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியைத் தழுவியதும், கடந்த அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கூட்டணி மீண்டும் படுதோல்வி அடைந்ததும், அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கப் போகிறது என்கிற கருத்துக்கு வலு சேர்த்தன.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது, நகத்தைக் கடிக்கத் தொடங்கியது என்னவோ காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்தான். திருவனந்தபுரத்திலுள்ள காங்கிரஸ் தலைமையிடமான இந்திரா பவனைவிட, தோல்வியடைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையகமான ஏகேஜி சென்டரில்தான் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

மாபெரும் வரலாறு காணாத வெற்றி என்று ஊடகங்களால் கணிக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி என்பது கனவாகி, வெறும் நான்கு இடங்கள் அதிகம் பெற்று குருட்டு அதிர்ஷ்டத்தில் பெற்ற வெற்றியாக மாறியதற்குக் காரணம் என்ன? ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் உம்மன் சாண்டியின் பதிலில் தெளிவு இருந்தது - ""முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மக்கள் மத்தியிலிருந்த தனிப்பட்ட செல்வாக்கும், அவரது பிரசாரமும்தான் எங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய வெற்றியைத் தட்டிப் பறித்து விட்டிருக்கிறது''.

மக்களின் பேராதரவைப் பெற்ற 88 வயது வி.எஸ். அச்சுதானந்தனுக்குக் கட்சிக்குள் ஆதரவு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். 47 ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது இருந்த 32 ஸ்தாபகத் தலைவர்களில் எஞ்சி இருப்பவர் அச்சுதானந்தன் மட்டுமே. கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன் கடந்த 2008 முதல் பொலிட்பீரோ உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டிருக்கிறார் என்றால் அந்த வேதனையை யாரிடம் சொல்லி நியாயம் கேட்பது?

கேரள சட்டப்பேரவை சரித்திரத்தில் இதுவரை இவ்வளவு குறைந்த வித்தியாசத்தில் தேர்தல் முடிவுகள் வெற்றி, தோல்வியைக் கொடுத்ததே இல்லை. ஒன்பது கட்சிகள் அடங்கிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி, சட்டப்பேரவையிலுள்ள 140 இடங்களில் 72 இடங்களையும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான எட்டு கட்சி இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி 68 இடங்களையும் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கேரள மாநில அரசியல் விசித்திரமானது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களைவிடத் தோல்வி அடைந்தவர்களைப் பற்றிய பெருமைகளைத்தான் அதிகம் பேசுகிறார்கள். ஒரு மிகப்பெரிய தோல்வியை எப்படி 88 வயது அச்சுதானந்தன் திறமையாக எதிர்கொண்டு மயிரிழையில் தோல்வி அடைந்தார் என்று அவரது வீரதீரப் பிரதாபங்களைத்தான் பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தனது முழு ஒத்துழைப்பையும் அச்சுதானந்தனுக்கு அளித்திருந்தால், இன்னும் நான்கைந்து இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் என்று கருத்துத் தெரிவிக்காத அரசியல் நோக்கர்களே இல்லை.

படுதோல்வி அடைந்த கட்சித் தலைவர்கள்கூடத் தங்களது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இல்லாத ஒரு காலகட்டத்தில், கேரள மாநிலக் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, தங்களது கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும் தனது கட்சி எதிர்பார்த்த வெற்றி பெறாததற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். தனது தலைமையில் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தான் முதல்வர் பதவிக்கு ஏற்றவரல்ல என்றுதானே பதவிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

உம்மன் சாண்டி இரண்டாவது முறையாகக் கேரள முதல்வராகிறார். கேரள காங்கிரஸ் (மாணி) நிதி உள்ளிட்ட மூன்று அமைச்சரவைத் துறைகளும், முஸ்லிம் லீக் நான்கு அமைச்சர்களும் கல்வி, தொழில், உள்ளாட்சி உள்ளிட்ட ஏழு துறைகளும் பெற்று, சுமுகமான பதவிப் பங்கீடு முடிந்திருக்கிறது. இனிமேல் காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு என்ன துறைகள், எத்தனை அமைச்சர்கள் என்பது வழக்கம்போலப் போட்டாபோட்டிகள், கோஷ்டிப் பூசல்கள், காங்கிரஸ் மேலிடத்துத் தலையீடு என்று தீர்மானிக்கப்படும்.
 "ஜெயித்தவர் தோற்றார்; தோற்றவர் வென்றார்' என்று சொல்வார்கள். அது கேரளத்தில் நடந்திருக்கிறது.

புதன், 25 மே, 2011

India பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது : மத்திய அரசு கவலை

ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொடர்பான விவரங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், ஆண் - பெண் விகிதாசாரங்களில், பெரிய அளவில் வேறுபாடு இருந்தது தெரியவந்தது. ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், கடந்த சில ஆண்டுகளாக, பெண் குழந்தைகளின் விகிதாசாரம், வீழ்ச்சியடைந்து வருவதும் தெரியவந்தது.இது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமர் அலுவலகம் சார்பில், உயரதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்காக பயன்படும் "ஸ்கேனிங்' வசதியை, சட்டவிரோதமாக பயன்படுத்தி, கருவிலிருக்கும் குழந்தை, பெண்ணாக இருப்பது தெரியவந்தால், அதை கருவிலேயே அழித்து விடும் நடைமுறை தொடருவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். மேலும், குழந்தை பிறந்த பின், பெண் குழந்தையாக இருந்தால், அதை இரக்கமின்றி கொல்லும் நடைமுறையும், சில பகுதிகளில் இருப்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதியில், மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கருவை அழிப்பதற்காக மருந்துகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்வது குறித்தும், இது தொடர்பாக சட்டவிதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்புகள், விரைவில் வெளியாகும்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ravi - toronto,கனடா
2011-05-25 01:47:38 IST Report Abuse
பிறந்த பெண் குழந்தையின் உடல் ஆரோகியத்தியத்தை சரியாக கவனிக்காமல், அவர்களை சாகவிட்டு வேடிக்கை பார்கின்றனர் நமது பெருமை மிக்க இந்திய மக்கள். இந்தியாவில் ஐந்து வயதிற்குள் இறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, ஆண் குழந்தைகளின் எண்ணிக்கைவிட மிக அதிகமாக உள்ளது என்ற ஒரு ரிப்போர்ட் படித்தேன். ராஜா, கனிமொழியை பழிக்கும் இந்த கூட்டம், வரதட்சணை ஊழலை விட மோசமானது என்று ஒத்துகொள்ள தயாரில்லை. வரதட்சணை நமது சமுதாயத்தின் பிணி. அதை தொடர்வது சதிஎற்றதை போன்றது. இன்னொரு ராஜாராம் வரவேண்டும் இந்த வரதட்சணை கொடுமையை களைய. நீயா நானாவில் ஒரு இளைஞன் வரதட்சணை வாங்கமாட்டேன் என்று சபையில் சொல்ல முடியாமல் தவித்ததை பார்த்தேன். ஆணையும் பெண்ணையும் வித்தியாசமாக நடத்தும் நமது இந்திய சமுகம். ஆண் சாப்பிட்ட பிறகுதான், இன்றும் பெண்களுக்கு சாப்பாடு நிறைய வீடுகளில். படிக்காத ஆணை படிக்க சொல்லும் தகப்பன், படிக்க விரும்பும் பெண்ணை வலுகட்டாயமாக கடைக்கு சென்று பொருள் வாங்க சொல்லும் தகப்பன். மகன் படிக்கவிரும்புவதில்லை, எவனுக்கோ சம்பாரித்து கொடுக்கபோகும் மகள் படிக்கிறாளே என்று வருந்தும் தாய் இவற்றை எல்லாம் இந்தியாவில் பார்த்த கொடுமை. தனது மனைவி தனக்கு மட்டும்தான் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன். பெண் குழந்தையை பெற்ற பெற்றோர் கடைசி காலத்தில் தெருவில்தான் நிற்க வேண்டும் என்ற கொடுமை. இதற்கெல்லாம் முற்றுபுள்ளி ஆண்டவன் விரைவில் வைப்பான். பெண் கிடைக்காத காலத்தில் இந்த கொடுமைகள் யாவும் அழியும். தவறு என்று தெரியாமல் தவறு செய்யும் சமுதாயத்தை, ஆண்டவன் மட்டுமே தண்டிப்பான்.

யாழ் கைதிகளுக்கு இருவார காலத்துக்குள் தீர்வு

யாழ் சிறைச்சாலை கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் இருவார காலத்துக்குள் ஆவண பரிசோதனைகளுடன் கூடிய தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என யாழ் இந்து பௌத்த கலாசார பேரவையின் தலைவரும், ஜனாதிபதியின் இணைப்பாளரும் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆலோசகருமான எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் வெளிநாட்டுக்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ளமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைதிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டு நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Kalaignar: அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும்

சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன்.

அரசின் நல்ல திட்டங்களுக்கு திமுகநிச்சயம் ஒத்துழைப்பு நல்கும். புதிதாக பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்‌சை விபத்தில் இறந்தததற்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
  

English summary
Talking to newspersons, DMK president Karunanidhi said he would be sworn in as Member of the Assembly at a date fixed by the Speaker of the Assembly. He could not be sworn in as member on May 23, when pro tem Speaker C K Tamizharasan administered the oath of office to the new members as he was away in Delhi to meet his daughter K Kanimozhi, arrested in connection with 2G spectrum allocation case.

தமிழ் செல்வனின் மனைவி, பிள்ளைகள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்செல்வன் 02.11.2007 அன்று இலங்கை விமானப்படையினரின் குண்டு தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்தத்தின் இறுதிகட்டத்தில் வவுனியா அகதி முகாமுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
அப்போது குற்றத்தடுப்பு பிரினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இவர்களை விடுவிப்பதற்கான முயற்சியினை முன்னாள் விடுதலை புலிகளின் தளபதிகளில் ஒருவரும் தற்போதைய அரச அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாண்டலின் ராஜேசுடன் திருமணம்: மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு குட்பை!

மாண்டலின் ராஜேஷை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக உள்ளதால், இனி சினிமாவில் நடிப்பதில்லை என நடிகை மீரா ஜாஸ்மின் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் இளைஞன்.

மீரா ஜாஸ்மினும் மாண்டலின் இசை கலைஞர் ராஜேசும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். படங்களில் நடித்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தார்.

ஆனால் தற்போது அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி உள்ளிட்ட புது நாயகிகள் வரத்தால் மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. சமீபத்தில் ரிலீசான படங்களும் நன்றாக ஓடவில்லை. எனவே மாண்டலின் ராஜேஷை விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவியுள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டாராம் மீரா ஜாஸ்மின்.

சமீபத்தில் நடந்த மலையாள சினிமா நடிகர்கள் சங்கம் 'அம்மா'வின் நிகழ்ச்சியில் மீரா பங்கேற்கவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இனி யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. காரணம் இனி சினிமாவில் நடிப்பதாகவும் இல்லை," என்றார்.

English summary
Meera Jasmine the National award winning actress is saying good bye to movies due to her marriage with her long time lover Mandalin Rajesh.

உலக வங்கியிடம் உதவி கோருகிறார் இமெல்டா

வலி.வடக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் 130 கிலோமீற்றர் நீளமான வீதிகள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு உலக வங்கி உதவவேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் உலக வங்கிக் குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் வலி.வடக்குப் பகுதிக்குச் சென்ற உலக வங்கிக்குழு அங்கு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்ந்தது. இதன்போது யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வலி.வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.

அப்போது வலி.வடக்கு வீதிகளின் மோசமான நிலையை அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் தெளிவாக விளக்கினார். வலி.வடக்கில் 130 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் என அனைத்துமே முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இவற்றைப் புனரமைக்கப் பல மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதற்கு உலகவங்கி நிதியுதவிகளை வழங்கவேண்டும் என்று அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கேட்டுக்கொண்டார். வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான திட்ட மதிப்பீடு அடங்கிய விவரங்களையும் அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கையளித்தார்.

புலிகள் இயக்கதின் முக்கியஸ்தர் எஸ்.ராமச்சந்திரன் நெதர்லாந்தில் கைது

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதின் முக்கியஸ்தர் எனக் கருதப்படும் எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அமசோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஊடகம் தெரிவிக்கின்றது.

துக்ளக் தர்பார் ஆரம்பம்,சமச்சீர் கல்வி Stop - ஜெயலலிதாவின் தான்தோன்றி தனம்

கருணாநிதியின் அனைத்துச் செயல்களையும் எப்படியேனும் மாற்றியே தீருவது என்ற முடிவுடன்தான் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பிருந்தே இருந்தார். ஆனால் அவற்றைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார் என்று யாரேனும் நினைத்திருந்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். பொதுமக்கள் எல்லாம் இந்த இடத்தில் collateral damage-தான்.

தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் இனி மீண்டும் கோட்டையில்தான் - என்பதில் தொடங்கியது இது. இதற்குச் சொன்ன காரணங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம். புதுக் கட்டடம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. சரி, கட்டி முடிப்பது தீவிரப்படுத்தப்படுமா? கட்டி முடித்தபின்னாவது தலைமைச் செயலகமும் சட்டமன்றக் கூட்டங்களும் ஓமாந்தூரார் மாளிகையின் புதுக் கட்டடத்துக்கு மாற்றப்படுமா? தெரியாது.

அடுத்து சமச்சீர் கல்வி. மூன்றாண்டுகள் கூட்டம் கூடி, தேவை என்று சொல்லி, கொண்டுவந்த புதிய பாடத்திட்டம். புதிய புத்தகங்கள். அவற்றை அச்சடிக்க 200 கோடி ரூபாய் செலவு. புத்தக விநியோகமே ஆரம்பித்தாயிற்று. முதலில் தமிழ் பாடப் புத்தகத்தை நிறுத்தி, அதில் செம்மொழி மாநாடு பற்றிய பகுதிகளை நீக்குவார்கள் என்று அறிவித்தது, அடுத்து சமச்சீர் கல்விக்கே தடா என்று முடிந்துள்ளது. இதனால் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் பாழ். புதிதாக அச்சடிக்க மேலும் 110 கோடி ரூபாய். பள்ளிகள் திறக்க 15 நாள்கள் தாமதம். ஏற்கெனவே 10-ம் வகுப்புப் பிள்ளைகளை படிக்கத் தொடங்கியிருப்பர்; அவர்களுக்கெல்லாம் திண்டாட்டம். இது தவிர, தனியார் பதிப்பகங்கள் பலவும் இந்த சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கு அச்சிட்டிருக்கும் கோனார் தமிழ் உரை, கைடுகள், நோட்ஸுகள் எல்லாம் பாழ். அரசுப் பணம் பாழ் என்பதே கொடுமை. இதில் தனியார் பணம் பாழாவது கடுமையான கண்டனத்துக்கு உரியது!

ஆனால் இரண்டு பிரச்னைகளிலும் கருணாநிதிமீதும் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.

புதிய கட்டடம் என்று தன் ஆட்சியின் முதல் நாளே தீர்மானித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் இருந்திருக்கவேண்டும். ஆட்சி எப்போதும் நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு நான்காம் வருடம் ஆரம்பித்தால் இப்படித்தான் பொதுமக்கள் பணம் பாழ். ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டும்தான் புதுவிதமான மாநில ஆட்சி நடைபெறுகிறது. இங்குமட்டும்தான் இரண்டு தனி நபர் பகை, கொள்கையாகவும் திட்டங்களாகவும் மாற்றம் பெறுகிறது. எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியைப் பிடிக்கவில்லை என்றால் மேலவை கலைக்கப்படும். எனவே கருணாநிதி அதை மீண்டும் கொண்டுவருவார். எனவே ஜெயலலிதா அதை அழிப்பார்.

அடுத்து சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி வேண்டும் வேண்டும் என்று அலைந்தது ஒருசில தன்னார்வலர்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே? எந்தப் பள்ளிக்கூடமும் இதை வேண்டும் என்று கேட்கவில்லை. மெட்ரிக் பள்ளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால் இதைக் கொள்கை முடிவாக ஆக்கி, சட்டத்திருத்தம் கொண்டுவந்து, நீதிமன்றங்களில் கடுமையாகப் போராடி, இறுதியில் நடைமுறைப்படுத்த வந்தபோது கருணாநிதிக்கு ஆட்சி போயிற்று. இந்தப் புத்தகங்களில் செம்மொழி பாடலைப் புகுத்தவேண்டுமென்று யார் அழுதார்கள்? அதுதானே இந்தப் புத்தகங்களைக் கிடப்பில் போட ஒரு உந்துதல் ஆயிற்று? மெட்ரிக் பள்ளிகளை அரவணைத்துச் சென்றிருக்கலாம் அல்லவா? ஆனால் அரசியல் ஈகோ களத்தில் அப்படியெல்லாம் செய்வது ஏற்கமுடியாததே? எனவே மெட்ரிக் பள்ளிகள் சங்கம் என்னவெல்லாம் செய்தார்களோ, இன்று சமச்சீர் திட்டம் காலி. ஏகப்பட்ட பணம் நஷ்டம்.

வலுவான எதிர்க்கட்சியாக கருணாநிதியின் திமுக இவற்றை எதிர்கொள்ளவேண்டும். ஆனால் அப்படிச் செய்யமுடியாமல், துக்கத்தில் இருக்கிறார் தலைவர். அவரது இன்றைய கவலை, தன் பெண்ணைச் சிறையிலிருந்து மீட்கவேண்டும் என்பதே. எனவே எந்தவிதமான whimpering protest கூட இல்லாமல், ஜெயலலிதா தான் விரும்பியதைச் செய்துமுடிப்பார்.

விரைவில் மேலவைக்கு முட்டுக்கட்டை போன்ற இன்னபிற மிக முக்கியமான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பதை நாம் வரவேற்போம்.

[Disclaimer: சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு NHM நிறுவனம் கைடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் எதையும் அச்சிட்டு கையைக் கடித்துக்கொள்ளவில்லை. சுரா புக்ஸ், பழனியப்பா பிரதர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே கைடுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவர்களுக்குக் கட்டாயம் நஷ்டம்தான்.]

செய்யாத தவறுக்கு அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மகள் கைது!

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சலாக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ். இவர் மேற்பட்டிப்புக்காக அமெரிக்காவுக்கு அண்மையில் வந்தார். அங்கிருக்கும் ஒரு பிரபல பள்ளியில் அட்வான்ஸ்ட் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால் கிருத்திகா பிஸ்வாஸ், அவரது பள்ளி ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான, ஆபாசமாக இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பிஸ்வாஸ் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக ஒரு நாள் லாக்கப்பில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். லாக்கப்பில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் கிருத்திகாவுக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு இ மெயில் வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் , அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான குற்றவாளி பற்றி எந்த ஒரு தகவலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தன் மீது குற்றம் இல்லாத போது தன்னை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்த குற்றத்துக்காகவும், தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தும், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் லாக்கப்பில் வைத்து இழிவு படுத்தியதற்காக நியூயார்க் போலீசார் மீதும் வழக்கு தொடரப் போவ‌தாக இளம் பெண் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்ப திட்டம் : பாதிக்கப்பட்ட மாணவி விரைவில் தான் தாயகம் திரும்ப இருப்பதாகவும், தனது மேற்படிப்பை இந்தியாவிலேயே தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளார். வெளிநாட்டில் கல்வி, வெளிநாட்டு வேலை என்ற மோகத்தால் அயல் நாடுகளுக்கு படை எடுக்கும் இந்தியர்கள் பலர் இவ்வாறான இன்னல்களுக்கு அவ்வப்போது ஆளாகி வருகின்றனர். தனக்கு நேர்ந்த சோக சம்பவம் குறித்து கூறிய கிருத்திகா : ஏராளமான கனவுகளுடன் அமெரிக்காவில் கல்வி பயில வந்தேன், ஆனால் எனக்கு கசப்பான அனுபவங்களே வாய்த்தன. செய்யாத குற்றத்துக்காக பெற்ற தண்டனைக்கு வழக்கு தொடர்ந்துள்ளேன், நீதி கிடைத்தவுடன் ‌தாயகம் திரும்புவேன். இவ்வாறு கிருத்திகா கூறினார்.