வியாழன், 30 ஜூலை, 2026

நாதஸ்வர வித்வான் அளவெட்டி என் கே பத்மநாதன் தவில் வித்வான் இணுவில் வி . தட்சணாமூர்த்தி

May be an image of flute

May be an image of musical instrument

ராதா மனோகர் :   யாழ்ப்பாணம் மருதனாமடம் ராமநாதன் இசைக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதி!
நாதஸ்வர வித்வான் அளவெட்டி என் கே பத்மநாதன் 
தவில் வித்வான்  இணுவில். வி.தட்சணாமூர்த்தி 
அளவெட்டி பத்மநாதனுக்கு முன்னாள் ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்த்தன அவர்கள் கலாசூரி பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளார் 
நல்லூர் திருவிழாவின் 24 நாளும் அவரின் நாத மழையை சிறுவயதில் தினசரி கேட்டுள்ளேன் 
அவரின் கற்பனா ஸ்வரங்களில் வந்து விழும் பல விடயங்களை உற்று கவனித்தால் அதில் உள்ள இசைத்துணுக்குகளை  பொறுக்கி எடுத்து பல பாடல்களை இசையமைக்கலாம்.
இலங்கை நாதஸ்வர உலகில் இவர் பெற்ற புகழை வேறு எவரும் பெறவில்லை என்றே கூறலாம் 
பலநாடுகளுக்கும் சென்று ஏராளமான மேடைகளில் வாசித்துள்ளார் 
இவர் தன்னை போலவே தன்மகனையும் ஒரு சிறந்த வித்வானாக பயிற்சி கொடுத்து வந்த காலம் இந்திய ராணுவத்தின் வெறியாட்டத்தில் மகனின் உயிரை பறிகொடுத்தார் 
இதனால் மனமுடைந்த திரு பத்மநாதன் சில ஆண்டுகளுக்கு பின் மீளாத்துயில் கொண்டார் 


தவில் வித்வான்  இணுவில்  வி தட்சணா மூர்த்திக்கு நிகரான இதுவரை எந்த தவில் வித்வானும் பிறந்துள்ளதாக நான் கருதவில்லை.
இணுவில் திரு தட்சணாமூர்த்தி அவர்களின் தாளக்கட்டு இதுவரை எவரும் தொட்டு பார்க்கவே பயப்படும் அளவு வில்லங்கம் நிறைந்தது 
சென்னை கிருஷ்ண கனசபாவில் இவரின் வித்வத்தை பார்த்த திரு பாலக்காட்டு மணியவர்கள் உலகின் எட்டாவது அதிசயம் என்று  பிரமித்து பாராட்டினார்   
(ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தெட்சிணாமூர்த்தி பிள்ளை தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவரின் தனிச் சிறப்பு.(விக்கிபீடியா))
இவரை பற்றிய ஒரு ஆவணப்படம் தமிழ்நாட்டில் வெளியானது .
இத்திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் வெள்ளித் தாமரை விருதும் 50,000 ஆயிரம் ரூபாவும் கிடைத்தது.
இந்த இருபெரும் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்காத பெருமையை யாரோ ஒருவருக்கு பின்கதவால் வழங்கி உள்ளார்கள்!
இந்த இருவரில் ஒருவரின் பெயரை யாழ்ப்பாணம் ராமநாதன் இசைக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதிக்கு வைத்திருக்கலாம் 
இந்த வீதிக்கு லஷ்மி நாராயணருக்கும் என்ன தொடர்பு?
யாழ்ப்பாண மண்ணுக்கு பெருமை சேர்த்த அளவெட்டி என் கே பத்மநாதனுக்கும் தவில் வித்வான் வி தட்சணாமூர்த்திக்கும் கிடைக்காத அங்கீகாரத்தை சுப்பிரமணி குடும்பத்திற்கு வழங்கியது ஏன்? 
இந்திய அரசில் குறிப்பாக நடுவண் அரசின் தென்னிந்தியாவுக்கான  South Zone Cultural Centre  நிறுவனத்தில் பெரும்  செல்வாக்கு நிறைந்தவர் திரு எல் சுப்பிரமணியம்.
இந்திய அரசின் நிதியில் இயங்கும் இந்த நிறுவனத்திற்கு ஒரு நிழல் தலைவராக காஞ்சி சங்கர மடம் சாமியார் உள்ளார்.
இந்த பின்னணியில் இவர் மனது வைத்தால் யாருக்கும் ஸ்காலர்ஷிப் எடுத்து கொடுக்கலாம் 
பல வசதிகளை பெற்று தரலாம் 
மிகுதியை ஊகித்து கொள்ளுங்கள் !

கருத்துகள் இல்லை: