வேலூரில் வைக்கப்பட்டுள்ள சாய்பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக தகவல் பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு புட்டபர்த்தி சாய்பாபா மறைந்தார். அவரது பக்தர்கள், பாபா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
வேலூர் கொசப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் சத்ய சாயி சேவா சமிதி மண்டலி உள்ளது. இங்கு புட்டபர்த்தி சாய்பாபா படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து விபூதி கொட்டுவதாக தகவல் பரவியது. இதையறிந்த பக்தர்கள் குடும்பம் குடும்பமாக பரவசத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
‘கடந்த வாரம் பவுர்ணமி தினத்தில் பாபா படத்தில் கொஞ்சம் விபூதி படர்ந்திருப்பதை பார்த்தோம். அதை துடைக்காமல் அப்படியே விட்டுவிட்டோம். நாளடைவில் அந்த விபூதி படலம் பாபா படம் முழுவதும் வேகமாக பரவி கொட்டுகிறது.
பாபா படத்தில் கொட்டும் விபூதியை பார்க்க இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சென்றுள்ளார்கள்.
வாரம் ஒரு நாள் மட்டும் பஜனைகள் நடைபெற்று வந்த இங்கு இப்போது தினமும் பஜனைகள் நடைபெறுகிறது’ என்றார் மண்டலியின் ஒரு
வாரம் ஒரு நாள் மட்டும் பஜனைகள் நடைபெற்று வந்த இங்கு இப்போது தினமும் பஜனைகள் நடைபெறுகிறது’ என்றார் மண்டலியின் ஒரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக