திங்கள், 27 ஜூலை, 2026

காமராஜை வீழ்த்திய தேவிகுளம் பீர்மேடு கம்யூனிஸ்ட்டுகள் - கொன்று தீர்த்து பழிவாங்கிய காமராஜர் ...

 புகச்சோவ் புகச்சோவ்  : காமராஜை வீழ்த்திய தேவிகுளம் பீர்மேடு கம்யூனிஸ்ட்டுகள்.....! (மீள்பதிவு)
1957 கம்யூனிஸ்ட் அரசின் தேவிகுளம் பீர்மேடு இடைத்தேர்தல்.
1957 ல் காங்கிரஸால் டீப்ரொமோட் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரோசம்மா பொன்னூசையே மீண்டும் இடைத்தேர்தலில் நிற்கவைத்தது கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிரஸ் வேட்பாளர் பிகே.நாயர் செல்வாக்கு மிகுந்தவர். மொத்த உறுப்பினர்களில் 63 பேர் காங்கிரஸார். மீதம் 63 பேர் கம்யூனிஸ்ட்டுகள். சபாநாயகர் ஓட்டில் கம்யூனிஸ்ட் அரசாங்கள் நிலைத்துக்கொண்டிருந்தது.
ஒன்றியத்தில் அதிகாரத்திலிருந்த காங்கிரஸார், எலக்சன் கமிஷனை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தேவிகுளம் பீர்மேடு ரிசர்வ் ஃபாரஸ்டில் பிரச்சார கூட்டங்களையும், அதிக ஒலியையும் காரணங்காட்டி, பெரியளவில் எலக்சன் கேம்பெய்னில் கம்யூனிஸ்ட்டுகளை ஈடுபடவிடாமல் பார்த்துக்கொண்டது. முதல்வர் ஈஎம்எஸ்.நம்பூதிரி, அதிக ஆட்களை அநுப்பமுடியாததால், சகாவு விஎஸ்.அச்சும்மாமனை மட்டும் களத்திலிறக்கி, ரோசம்மா பொன்னூசின் தேர்தல் செயலாளராக நியமித்தார். அசாதாரணமான உடல்வாகுகொண்ட விஎஸ், தேவிகுளம் பீர்மேட்டின் மலைக்காடுகள் முழுக்க ஏறியிறங்கினார். அவரது தொழிலாளர்களை முதலாளியத்திற்கு எதிராக திருப்புகிற திறமையான பேச்சு அந்தக்காடுகளெங்கும் எதிரொலித்தது.


இதற்கிடையில், காங்கிரஸ் கேண்டிடேட்டின் செல்வாக்கு காரணமாக, இந்திரா காந்தியே வந்து மீனச்சலில் வாக்கு சேகரித்தார். தனது நாயர் சாதிக்காக, தமிழ்நாட்டில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த பெரிய நடிகனான மருதூர் கோபாலகிருஷ்ணன் ராமச்சந்திரன் (MGR) தனது சினிமாவின் படப்பிடிப்பை தேவிகுளம் பீர்மேடு பகுதியில் நடத்துமாறு தயாரிப்பாளரை நெருக்கடி தந்து, படப்பிடிப்பின் இடையே சென்று காங்கிரஸின் பிகே.நாயருக்காக, திமுகவுக்கு தெரியாமல் ரகசியமாய் பிரச்சாரம் செய்தான். தமிழர்களும் மலையாளிகளும் சரிசமமாக வாழ்கிற தேவிகுளம் பீர்மேடு தொகுதியில், தமிழர்களின் வாக்குகளை சேகரிக்க காங்கிரஸார் எம்ஜிஆரை பயன்படுத்தியதுபோல, கம்யூனிஸ்ட்டுகள் பண்ணைபுரத்தின் செல்வங்களான பாவலர் வரதராஜனையும், சகோதரர்களையும் பயன்படுத்திக்கொண்டது. இந்த களேபரங்களிலும் மக்களுடன் மக்களாய் பழகும் அச்சும்மாமனின் நடவடிக்கைகளால்  கவரப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட்டுகளுக்கே வாக்களித்தனர்.
இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் ரோசம்மா பொன்னூஸ் 7089 வாக்குகள் வித்யாசத்தில் காங்கிரஸ் நாயரை வீழ்த்தி, அரசை தக்கவைத்துக்கொண்டது. ஆனால் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் என்னதெரியுமா....!?
நம்ப பச்சைத்தமிழர் காமராஜூதான் 😀
விவரம்....
           1951 ல்  மாநிலப்பிரிவினையின்போது, தனது சாதிக்காரர்களை மட்டும் தமிழ்நாட்டோடு இணைத்துக்கொள்ள முயன்ற காமராசு, ராஜாஜியின் அத்தனை செயலுக்கும் ஆதரவளித்தார்.1954 ல் பட்டம் தாணுபிள்ளை, வலுக்கட்டாயமாக 8000 மலையாளி குடும்பங்களை கொண்டுவந்து தேவிகுளம் பீர்மேட்டில் 12728 ஏக்கர் விஸ்தாரமான நிலத்தில் குடியேற்றியபோது, காங்கிரஸ் சார்பில் முன்மொழிந்தது நம்ப காமராஜூதான். அதனால்தான் , 1956 மொழிவாரி மாநில மறுசீரமைப்பில் மலையாளிகள் அதிகமான காரணத்தால் தேவிகுளம் பீர்மேடு நம் கையைவிட்டுப்போனது. இதுல, பள்ளமாவது மேடாவதுங்கற காமராஜோட டயலாக், தேவிகுளம் பீர்மேடு தமிழ் வாக்காளர்களிடம் ரொ...ம்ப ஃபேமஸாகிப்போச்சு. இந்த லட்சணத்துலதான், கேரள காங்கிரஸார் நம்ப காமராசுவை, 7 நாட்கள் தமிழர்களிடம் வாக்குசேகரிக்க அழைத்துவந்து பிரச்சாரம் செய்யவைத்தனர். அதுவே காங்கிரசுக்கு சுயம் ஆப்புவச்சமாதிரி ஆய்டிச்சி. 
    அதனால்தான், ஏலம்,கிராம்பு, காபி, தேயிலைத்தோட்ட முதலாளிகள் ரகசியமாய் அழைத்துவந்த MGR நாயரும், பண்ணையார் காங்கிரஸின் காமராஜும் வந்து பிரச்சாரம் செய்தும்கூட, கம்யூனிஸ்ட்டுகள் தேவிகுளம் பீர்மேடு தொகுதியை தக்கவைத்துக்கொண்டனர்.
இதை மனதில்வைத்துக்கொண்டுதான், 1959 முதல் 1962 வரையில் நடந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் கூலிவுயர்வு போராட்டத்தில், 200 க்கும் மேற்பட்ட தொழிலாளிகளை, எந்தவித 
டெத் ரெக்கார்டும் இல்லாதபடி கொன்றுதீர்த்தார் நம்ப காமராஜு.
 புகச்சோவ்

கருத்துகள் இல்லை: