வியாழன், 26 மே, 2011

இந்துமதத்திற்கும் பௌத்த மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு-மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க!


இந்து மதத்திற்கும் பௌத்த மத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளதாக யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்க பெருமிதமாகத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இந்து பௌத்தப் பேரவையை அமைப்பது தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்கும் பொழுதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்து மதத் தெய்வங்களை தானும் வழிபட்டு வருவதாக தெரிவித்த யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தமிழ்ப்பண்பாட்டையும் இந்துப்பண்பாட்டையும் பார்த்து தான் வியப்படைந்ததாகவும் தெரிவித்தார். தன்னை அறியாமலே தனக்கு இந்த ஈடுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்து பௌத்த பண்பாட்டுப் பேரவையை அமைப்பதானால் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லுறவு ஏற்படும் என்றும் மேஜர் ஜெனரல் மதகிந்தஹத்துருசிங்க தெரிவித்தார். அதேவேளை இந்துமதத்திற்கும் பௌத்த மத்திற்கும் மிக நெருக்கம் உண்டு எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இதை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பௌத்த விகாரைகளில் இந்துத் தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் மதகிந்தஹத்துருசிங்க பௌத்த விகாரைகளின் அருகாகவும் இந்து ஆலயங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். அதேவேளை இந்து ஆலயங்களுக்கு அருகாக நிலை கொண்டு பாதுகாப்பு பணியாற்றும் படைத்தரப்பினர் விரைவில் அங்கிருந்து வெளியேற்றபபடுவார்கள் எனவும் உறுதியளித்தார்.

தான் பதவி ஏற்று ஒன்றரை வருடங்களாகின்றன என்று தெரிவித்த அவர் இந்தக் காலப்பகுதியில் மதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக் காட்டினார். இனிய தமிழ் மொழியை பேச தான் முயற்சி செய்து வருதாகவும் தளபதி குறிப்பிட்டார். தமிழில் தன்னால் பேச முடியும் என்று தெரிவித்த அவர் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மதகிந்தஹத்துருசிங்க நன்றி வணக்கம் என்று குறிப்பிட்டு தனது கருத்துரையை முடித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: