செவ்வாய், 28 ஜூலை, 2026

யாழ்ப்பாணம் மருதனார் மடம் லட்சுமி நாராயண அய்யர் வீதி - இது ஒரு RSS அரசியல்

May be an image of text that says "வயலின் வித்துவான் லசைஷ்மிநாராயணா பணா வீதி -d වයලින විශාරද ලක්ෂ්මිනාරයන මාවත আব DS0 VIOLIN MAESTRO LAKSHMINARAYANA ROAD a Pradnutiya Sabia ITERNATIDNN EPO PIOIAE"ராதா மனோகர் :  யாழ்ப்பாணம் மருதனார் மடம் லட்சுமி நாராயண அய்யர் வீதி 
அண்மையில் ராமநாதன் கல்லூரிக்கு அண்மையில் உள்ள ஒரு வீதிக்கு திரு லக்ஸ்மி நாராயணன் அய்யர் என்று பெயர் சூட்டி உள்ளார்கள் 
இவர் 30 40 களில்  பகுதி நேர இசை பேராசிரியராக அங்கு பணியாற்றி உள்ளார்.
இவரது மகன்கள் எல் வைத்யநாதன் எல் சுப்பிரமணியம் எல் ஷங்கர் ஆகியோர்  உலக  புகழ் பெற்ற வயலின் வித்வான்களாகும், 
யாழ் பல்கலை கழக ராமநாதன் கல்லூரிக்கு லட்சுமி நாராயண அய்யரை விட பல மடங்கு தகுதியானவர் காலஞ்சென்ற இசை மேதை மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்  பல ஆண்டுகள் அங்கு May be an image of one or more peopleஅதிபராக பணியாற்றி உள்ளார்  
இலங்கை வானொலியில் நீண்ட காலமாக பணியாற்றி உள்ளார் 
அவரது பணிகாலங்களில் அங்குள்ள மக்களோடு மிக நெருங்கிய தொடர்புகளை பேணியவராகும் .


லட்சுமி நாராயண அய்யரை விட பல மடங்கு இலங்கை கர்நாடக இசைத்துறைக்கு பெரும் சேவை புரிந்தவர் 
உலகமும் முழுதும் ஒரு நிகரற்ற இசை வித்வானாக அறியப்பட்டவர் 
இவர் ராமநாதன் இசைக்கல்லூரியிலும் இலங்கை வானொலியிலும் பணியாற்றி இருக்கிறார் என்பது இலங்கைக்கே ஓர் பெருமைக்கு உரிய விடயமாகும் 
இவரது பெயரை ஏன் மறந்தார்கள்?
லட்சுமி நாராயண அய்யர் என்பவர் மகாராஜபுரம் சந்தனத்தை விட எந்த விதத்தில் உசத்தி?
இது ஒரு அரசியல்  
திரு எல் சுப்பிரமணியம் காஞ்சி பெரியவாளின்  முதல் தர அடிமையாகும் 
காஞ்சி சங்கர மடம்  என்றாலே அது ஆர் எஸ் எஸ் கிளை மடம் என்பது எல்லோருக்கும் தெரியும். 
இந்திய அரசின்  யாழ்ப்பாண ஆர் எஸ் எஸ் மயமாக்கலுக்கு மகாராஜா புரம் சந்தானத்தை விட நிச்சயமாக லட்சுமி நாராயண அய்யர்  பெயர் உதவியாக இருக்கும்தானே 
திரு எல் சுப்பிரமணியத்தின்  ஒரு சகோதரி (பிரஹந்நாயகி எனது அக்காவின் வகுப்பு தோழி - ஒரு முஸ்லீம் பணக்காரரை  திருமணம் செய்துள்ளார்) 
60 களில் திரு லட்சுமி நாராயண அய்யர் ஒரு கச்சேரிக்காக யாழ்ப்பாணம் வந்தபோது எமது வீட்டிற்கும் வந்திருக்கிறார் 
எனக்கு ஞாபகம் இருக்கிறது 
எங்கள் வீட்டு சமையல் அறைக்குள் தாங்களே சென்று சமைத்தார்கள் 
சாப்பாடு நன்றாகவே இருந்தது.
ஆனாலும் இதற்காகவெல்லாம் லட்சுமி நாராயண அய்யரை ஆதரிக்க முடியது 
மகாராஜா புரம் சந்தானத்திற்கு கொடுக்கப்பட்ட வேண்டிய மரியாதை அரசியல்  செல்வாக்கு காரணமாக தவறான நபருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது! 
உபயம் இந்திய துணை தூதரகம் 
 
 

கருத்துகள் இல்லை: