ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொடர்பான விவரங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், ஆண் - பெண் விகிதாசாரங்களில், பெரிய அளவில் வேறுபாடு இருந்தது தெரியவந்தது. ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், கடந்த சில ஆண்டுகளாக, பெண் குழந்தைகளின் விகிதாசாரம், வீழ்ச்சியடைந்து வருவதும் தெரியவந்தது.இது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமர் அலுவலகம் சார்பில், உயரதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்காக பயன்படும் "ஸ்கேனிங்' வசதியை, சட்டவிரோதமாக பயன்படுத்தி, கருவிலிருக்கும் குழந்தை, பெண்ணாக இருப்பது தெரியவந்தால், அதை கருவிலேயே அழித்து விடும் நடைமுறை தொடருவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். மேலும், குழந்தை பிறந்த பின், பெண் குழந்தையாக இருந்தால், அதை இரக்கமின்றி கொல்லும் நடைமுறையும், சில பகுதிகளில் இருப்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதியில், மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கருவை அழிப்பதற்காக மருந்துகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்வது குறித்தும், இது தொடர்பாக சட்டவிதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்புகள், விரைவில் வெளியாகும்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை தொடர்ந்து, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதியில், மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கருவை அழிப்பதற்காக மருந்துகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்வது குறித்தும், இது தொடர்பாக சட்டவிதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்புகள், விரைவில் வெளியாகும்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ravi - toronto,கனடா
2011-05-25 01:47:38 IST Report Abuse
பிறந்த பெண் குழந்தையின் உடல் ஆரோகியத்தியத்தை சரியாக கவனிக்காமல், அவர்களை சாகவிட்டு வேடிக்கை பார்கின்றனர் நமது பெருமை மிக்க இந்திய மக்கள். இந்தியாவில் ஐந்து வயதிற்குள் இறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, ஆண் குழந்தைகளின் எண்ணிக்கைவிட மிக அதிகமாக உள்ளது என்ற ஒரு ரிப்போர்ட் படித்தேன். ராஜா, கனிமொழியை பழிக்கும் இந்த கூட்டம், வரதட்சணை ஊழலை விட மோசமானது என்று ஒத்துகொள்ள தயாரில்லை. வரதட்சணை நமது சமுதாயத்தின் பிணி. அதை தொடர்வது சதிஎற்றதை போன்றது. இன்னொரு ராஜாராம் வரவேண்டும் இந்த வரதட்சணை கொடுமையை களைய. நீயா நானாவில் ஒரு இளைஞன் வரதட்சணை வாங்கமாட்டேன் என்று சபையில் சொல்ல முடியாமல் தவித்ததை பார்த்தேன். ஆணையும் பெண்ணையும் வித்தியாசமாக நடத்தும் நமது இந்திய சமுகம். ஆண் சாப்பிட்ட பிறகுதான், இன்றும் பெண்களுக்கு சாப்பாடு நிறைய வீடுகளில். படிக்காத ஆணை படிக்க சொல்லும் தகப்பன், படிக்க விரும்பும் பெண்ணை வலுகட்டாயமாக கடைக்கு சென்று பொருள் வாங்க சொல்லும் தகப்பன். மகன் படிக்கவிரும்புவதில்லை, எவனுக்கோ சம்பாரித்து கொடுக்கபோகும் மகள் படிக்கிறாளே என்று வருந்தும் தாய் இவற்றை எல்லாம் இந்தியாவில் பார்த்த கொடுமை. தனது மனைவி தனக்கு மட்டும்தான் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன். பெண் குழந்தையை பெற்ற பெற்றோர் கடைசி காலத்தில் தெருவில்தான் நிற்க வேண்டும் என்ற கொடுமை. இதற்கெல்லாம் முற்றுபுள்ளி ஆண்டவன் விரைவில் வைப்பான். பெண் கிடைக்காத காலத்தில் இந்த கொடுமைகள் யாவும் அழியும். தவறு என்று தெரியாமல் தவறு செய்யும் சமுதாயத்தை, ஆண்டவன் மட்டுமே தண்டிப்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக