வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

சியாச்சின் இறந்த10 வீரர்களில் 4 பேர் தமிழர்கள்..பெயர்கள் ராணுவம் வெளியிட்டுள்ளது.

01.வேலூர் மாவட்டம் துக்கம்பாறையை சேர்ந்த எழுமலை ( ஹவில்தார்)
02.மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியை சேர்ந்த கணேசன் (சிப்பாய்)
03.கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனபள்ளியை சேர்ந்த ராமமூர்த்தி ( சிப்பாய்)
04.தேனி மாவட்டம் குமணண்தொழுவை சேர்ந்த எஸ் குமார் (லான்ஸ் ஹவில்தார்)
05. லான்ஸ் நாயக் நாகேஷா (கர்நாடகா)
06. லான்ஸ் நாயக் சுதீஸ் (கேரளா)
07. சிப்பாய் மகேஷா ( கர்நாடகா)
08. லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா (கர்நாடகா )
09. சிப்பாய் முஷ்டாக் அகமது (ஆந்திரா )
10. சிப்பாய் சூரியவன்சி (மகாராஷ்டிரா )

ஜம்மு: சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 பேர் மதுரை, தேனி, வேலுார், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.பிப்ரவரி 03ம் தேதி இமயமலையில் சியாச்சின் பகுதியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் சிக்கிக் கொண்டனர்.

லஞ்ச அதிகாரிகளை காப்பாற்ற அரசு புதிய ஆணை...இளங்கோவன்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை காப்பாற்ற தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்திருக்கிறது: இளங்கோவன் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு புதிய அரசாணையை பிறப்பித்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்கள் யார் ஊழல் செய்தாலும், முன் அனுமதியின்றி அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை தவறானது. லஞ்சம் பெறுவதற்காக அதிகாரிகள் இடைத்தரகர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். பின்னே  அவுங்கதான் இப்ப ஏஜெண்டுகளாச்சே?

காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு

முசுலீம் குடும்பங்களைப் பாருங்கள். பன்றி குட்டி போடுவதைப் போல் எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அதில் அழகான பையனாக பார்த்து மதரஸாவிற்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். மதரஸாவில் என்ன செய்கிறார்கள்? இந்தப் பையன்களுக்கு பெண்களை மயக்குவதற்கு பயிற்சியளிக்கிறார்கள். பின்னர், பைக், வாட்ச், மொபைல், போன் போன்றவற்றையும், நல்ல உடைகளையும் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்களும் சோனு மோனு போன்ற பெயர்களோடு வாழும் இந்துப் பெண்களை அணுகுகிறார்கள். இந்தப் பையன்களின் அழகில் மயங்கும் இந்துப் பெண்களை மெல்ல  வலையில் வீழ்த்தி அவர்களை இசுலாமுக்கு மதம் மாற்றி பின் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இசுலாத்தில் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமில்லையா? எனவே அடுத்தடுத்து இந்துப் பெண்களாக குறி வைத்து அவர்களை மதம் மாற்றி குழந்தைகள் பெற்று இசுலாமியர்களின் மக்கள் தொகையை உயர்த்த சதி நடக்கிறது. இந்த சதி திட்டத்திற்கு பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் காசு வருகிறதாம்….”

வியாழன், 4 பிப்ரவரி, 2016

ராகுலை சந்தித்த விஜயதாரணி....என்ன தவறு கண்டீர்கள்?

டெல்லி: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். விளவங்கோடு சட்மன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகளிரணி தலைவராக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார் இது தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுலை சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாக விஜயதாரணி கூறிவந்தார். இதனிடையே நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளித்தார்

அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலை எதிர்க்கமுடியாதா?” சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்

அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலை எதிர்க்கமுடியாதா?” சட்டப் பஞ்சாயத்து
இயக்கம் கண்டனம்
அரசுப் பணியாளர்கள் மீதான இலஞ்ச, ஊழல் புகார்கள் கூறவேண்டும் என்றால், அரசின் அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இலஞ்ச-ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என சமூக அமைப்புகள் போராடிவரும் சூழலில், இந்த அரசாணையானது ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் விதத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு மீது லஞ்ச ஊழல் புகார்களை கூற அரசு அனுமதி வேண்டும்...ஹிட்லர் கெட்டவன்னு கூற ஹிட்லரின் அனுமதி வேண்டும்

அரசுப் பணியாளர்கள் மீதான இலஞ்ச, ஊழல் புகார்கள் கூறவேண்டும்
என்றால், அரசின் அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அந்த அரசாணையில், தற்போதைய இலஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையானது, இனிமேல் அரசு ஊழியர்கள் மீதான புகார்களை, கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பும் என்றும் அந்தப் புகார்கள் குறித்து ஒருவேளை கண்காணிப்பு ஆணையமானது விசாரணை நடத்த உத்தரவிடும்பட்சத்தில், அரசின் குறிப்புகளைப் பெற்ற பிறகு, இலஞ்ச ஒழிப்பு போலீசின் விசாரணைக்கு ஆணையம் உத்தரவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.>உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.nakkheeran,in

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேக்கு ஆதரவாக ஐ.நா. தீர்ப்பு

லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு
மேலாக தங்கியிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் தான் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. குழுவிடம் புகார் அளித்திருந்தார் ஜூலியன் அசாஞ்சே. இந்த வழக்கை விசாரித்த ஐ.நா. குழு, ஜூலியன் அசாஞ்சேக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, விக்கிலீக்ஸின் டுவிட்டர் பக்கத்தில் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐ.நா. குழு நாளைக்குள் என்னுடைய வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்பு எனக்கு எதிராக இருந்தால் வெள்ளிக்கிழமை நான் இங்கிலாந்து காவல்துறையிடம் சரண் அடைவேன்.

தான்சானியா மாணவி ...இனவெறி தாக்குதல் அல்ல. கர்நாடக அமைச்சர் விளக்கம்

தான்சானியா மாணவி மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு நிர்வாணமாக
ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கர்நாடக உள்துறை மந்திரி மறுத்துள்ளார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் இறந்தார். அவரது கணவர் காயம் அடைந்தார். இந்த காரை குடிபோதையில் ஓட்டி வந்த சூடானை சேர்ந்த வரும் காயம் அடைந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், அந்த வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர். இது தொடர்பாக அந்த பெண் காவல்துறையில் அளித்துள்ள புகாரில் “நாங்கள் சென்ற காரை மக்கள் மறித்தார்கள். உடனே காரை விட்டு நாங்கள் கிழே இறங்கினோம். அங்கு நிறைய மக்கள் கூடி நின்றனர். அருகில் ஒரு காவலரும் நின்றார். நான் அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. உடனே அந்த கும்பல் என்னையும் நண்பர்களையும் அடிக்க தொடங்கினார்கள்.

இலங்கையில் தமிழிலும் தேசியகீதம் ஒலித்தது 1949 பின் மீண்டும் தமிழில்


இலங்கையின் இன்றைய தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 1949-ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த திருப்பம் கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பிரிவினை கோரிய விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் முடிந்து 7 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னெடுக்கின்ற
நல்லிணக்க முயற்சிகளின் அங்கமாக இந்த இருமொழி தேசிய கீதம் பார்க்கப்படுகின்றது. தமிழும்  நாட்டின் தேசிய மொழி என்பதால் இதில் ஒருவித சட்ட பிரச்சனையும் இல்லை என்பது கவனிக்க தக்கது

லைகாவுடன் இரு படங்கள்.. அவற்றில் மருதநாயகமும் உண்டு! - கமல் ஹாசன்

லைகா நிறுவனத் தயாரிப்பில் இரு படங்களை உருவாக்கவிருப்பதாகவும், அவற்றில் தனது கனவுப் படமான மருதநாயகமும் உண்டு என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமாக கால் பரப்பியுள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்போது ரூ 350 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் 2.ஓ படத்தைத் தயாரிக்கிறது. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இது.  அடுத்து கமல் ஹாஸனுடனும் கைகோர்ப்பதை இன்று அறிவித்திருந்தது லைகா. இந்த நிலையில் லைகா தயாரிக்கும் தனது படம் என்னவென்பதை கமல் ஹாஸனே அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நீங்க சரினு போன் பண்ணி சொன்னா போதும், ‘மருதநாயகம்' தொடங்கிடலாம்' என்கிறார் லைகா சுபாஷ்கரன். ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்பான தயாரிப்பு வேலை பெருசு.  இனி  பாடம் படிக்க தீர்மானித்தால் நன்னா படிக்கட்டும் ?  ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே...தானுகிட்டே டியுஷன் எடுத்தா தேவல... 

அதிமுகவுக்கு சார்பாக தேர்தல் கமிஷன்! கடந்த இரு தேர்தல்களை போலவே விலை போய்விட்ட......

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த மக்கள் தொகையான 7.77 கோடி பேரில் 5.79 கோடி பேர் வாக்காளர்கள். கிட்டத்தட்ட 75.56 சதவீதம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், இதில் 40 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என குற்றச்சாட்டை கிளப்புகிறார் தி.மு.க.தலைவர் கலைஞர். இவரது குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக பா.ஜ.க. இல.கணேசன் உட்பட எதிர்க்கட்சியினரும் சூட்டை ஏற்படுத்தி யிருக்கின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து நாம் ஆராய்ந்தபோது நமக்கு கிடைத்த சில புள்ளிவிபர ஆதாரங்கள், போலி வாக்காளர் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதாக இருக்கின்றன.

நடிகை ரோஜா: எனது தொகுதியில் 50 வீதம் தமிழர்கள்தான்...

நடிகையாகப் பிரவேசித்து திரையுலகைக் கலக்கியவர். கமல் நீங்கலாக ஏறக்குறைய அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்தவர். பரபரப்பான நடிகையாக இருக்கும்போதே சட்டென்று ரூட் மாறி அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர். பெயருக்காக இல்லாமல் தீவிர அரசியல்வாதியாக மிளிரும் நடிகை ரோஜாவுடன் சில மணித்துளிகள் பேசியதில்..."மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான்:
 நடிகை ரோஜா  நடிகையாகப் பிரவேசித்து திரையுலகைக் கலக்கியவர். கமல் நீங்கலாக ஏறக்குறைய அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்தவர். பரபரப்பான நடிகையாக இருக்கும்போதே சட்டென்று ரூட் மாறி அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர். பெயருக்காக இல்லாமல் தீவிர அரசியல்வாதியாக மிளிரும் நடிகை ரோஜாவுடன் சில மணித்துளிகள் பேசியதில்..."

ஜிக்கா வைரஸுக்கு தடுப்பு மருந்து ஹைதராபாத்தில் கண்டுபிடிப்பு...உலகின் முதல் ஜிக்கா தடுப்பு இதுவாகும்


ஹைதராபாத்: உலகை மிரட்டும் ஜிக்கா வைரஸுக்கு ஒன்று அல்ல இரண்டு மருந்துகளை கண்டுபிடித்துவிட்டோம் என ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளை கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்தே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. வைரஸ் தாக்காமல் தடுக்கவும், தாக்கினால் சிகிச்சை அளிக்கவும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜிக்கா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஹைதராபாத் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் தான் மருந்து கண்டுபிடித்துள்ளது. World's First Zika Virus Vaccine Made in India, Claim Scientists ஜிக்கா வைரஸுக்கு இரண்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் 21,000 பேர் மேசை தட்ட விருப்ப மனு.....டாஸ்மாக் விதவைகள் விருப்பு மனு திமுகவில் ?

தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை' என, அறிவித்த அ.தி.மு.க.,வுக்கு, விதவைகள் மூலம், 'சென்டிமென்ட் அட்டாக்' கொடுக்க, தி.மு.க., மேலிடம் திட்ட மிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. 'தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை, சில மாதங்களுக்கு முன் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - காங்., உட்பட, பல கட்சி கள் போராட்டங்களை நடத்தின. விஜயகாந்தும், மது விலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

விஜயகாந்த்தூ :விஜயபிரபாகரனை துணை முதல்வராக்க வேண்டும்... மகனின் காதலிக்கும் சீட் வேணும்....

விஜய் பிரபாகரன் ஐ.பி.எல்., பேட்மின்டன் போட்டிக்காக சென்னை அணியை ஏலம் எடுத்தார். கேப்டன் 'டிவி' நிர்வாக இயக்குனராக இருந்து தொழிலை கவனித்து வருகிறார். இவரது தம்பி சண்முக பாண்டியன் சினிமா கதாநாயகனாகி விட்டதால் விஜய் பிரபாகரனை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறார் விஜயகாந்த். அதற்கு இந்த சட்டசபை தேர்தல் நேரம் சரியான நேரமாம் .ஜோதிடர்கள் யோசனை. 
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால் தி.மு.க.,வினர் கடுப்பாகி உள்ளனர். அவருக்கு சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி கட்சியினருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதன், 3 பிப்ரவரி, 2016

கிராமம் முழுவதும் எரிவாயு... கெயில் நிறுவனமும் அந்த ஆந்திர சம்பவமும்! தமிழகத்திலும் எரிவாயு குழல்.......

vikatan.com :தமிழகத்தில் எரி வாயு குழாய் பதிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து
விட்டது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக இந்த குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. இந்த எரிவாயு குழாய்கள்  மூலம் அழுத்தம் நிறைந்த வாயுவை கொண்டு செல்வது பாதுகாப்பானதா? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடையாது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  நகரம் என்ற கிராமத்தில்,  கெயில் நிறுவனம் பதித்த எரிவாயு குழாய் வெடித்து,  19 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமும் நடந்திருக்கிறது.
இந்த குழாய்கள்,  15 ஆண்டுகளுக்கு முன் நிலத்தில் 4 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன. பராமரிப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், சில நாட்களாக எரிவாயு கசிந்து வந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கெயில் நிறுவனத்துக்கு புகார் அளித்தும் கண்டு கொள்ளப்படவில்லை.

தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பேராசிரியர் அன்பழகன் உறுதி!

vikatan.com : தி.மு.க தலைவர் கருணாநிதியைவிட வயதில் மூத்தவரான பொதுச் செயலாளர் க.அன்பழகன், கடந்த சில வாரங்களாக திருப்பூர், வேலூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். நடக்க சிரமப்பட்டாலும் பேச்சில் சுணக்கம் இல்லை. கடந்த 29-ம் தேதி திருச்சி தேவர் மன்றத்தில் தி.மு.க எம்.பி-யும், தி.மு.க கொள்கைப்பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் 60-வது பிறந்தநாள் விழாவும் அவருடைய, ‘நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள்’, ‘மேனகாவின் நம்பிக்கை’, சிவாவின் பிள்ளைகள் எழுதிய, ‘அன்புள்ள அப்பா’ உள்ளிட்ட புத்தகங்கள் வெளி யீட்டு விழாவில் அன்பழகன் கலந்துகொண்டார். இதையே திருச்சி சிவா பெருமையாகக் குறிப்பிட்டார். ‘‘தலைவர் கலைஞருக்கு 93 வயது. பேராசியருக்கு வயது 94. தலைவரும் பேராசிரியரும் சாலை வழியே பயணிக்கிறார்கள். மக்களைச் சந்திக்கிறார்கள். இதேபோலவே தளபதி ஸ்டாலினும் செயல்படுவது பெருமையாக இருக்கிறது” என்றார் திருச்சி சிவா.

அழகிரிக்கு 'நோ என்ட்ரி' ஸ்டாலின் கதவடைப்பு...

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, 2014ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோதமான செயல்களில், அவர் இறங்கியதாக குற்றஞ்சாட்டிய கருணாநிதி, 'இனி, அவர் எனக்கு மகனே கிடையாது' என்றும், ஆவேசமாக அறிவித்தார்.
அதன்பின், பலமுறை சென்னைக்கு வந்த அழகிரி, விமான நிலையத்தில், தி.மு.க.,வுக்கு எதிராகவும், குறிப்பாக, ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்து கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.    எவ்வளவு கஷ்டப்பட்டு, அழகிரியை கோபப்படுத்தி, கடுப்பேத்தி கட்சியை விட்டு வெளியேத்திருக்கார் ஸ்டாலின். அவ்வளவு சுலபமா கட்சிக்குள் மீண்டும் வரவிடுவாரா என்ன? கட்சி வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தைவிட கட்சியில் தான் நெம்பர் 1-ஆக இருக்கவேண்டும் என்பதே கொள்கையாக இருக்கிறது. சுப்ரமணியம் சுவாமியும் இது தெரிந்துதான் ஸ்டாலினை முன்னே நிறுத்தி திமுகவை அடிக்க நினைக்கிறார்.

குறும்படம்...தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்

nisaptham.com :அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து குறும்படம் எடுக்கலாம் என்றார்கள். நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய மூன்று பேரும் ஆந்திரக்காரர்கள். அதனால் தெலுங்கில் எடுப்பதாகச் சொன்னார்கள். என்னைக் கதை சொல்லச் சொன்னார்கள். இயக்குநர் என்றால் சினிமா இயக்குநர் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கேமிரா வாங்கியிருக்கிறார். இப்பொழுதெல்லாம் கேமிரா வைத்திருந்தால் இயக்குநர்தானே? அப்படித்தான் இயக்குநர் ஆகியிருந்தார். நாயகனாக முடிவு செய்யப்பட்டவர் திருமணமாகாத பையன். தலையில் குச்சி குச்சியாக முடியை நட்ட வைத்திருந்தார். அதனால் அவர் நாயகன். தயாரிப்பாளர் ஒரு இனாவானா. நடுவில் ஒன்றிரண்டு காட்சிகளில் என்னையும் காட்டிவிடுங்கள் என்று சொல்லியிருந்தார். ஒத்துக் கொண்டு தயாரிப்பாளராக்கியிருந்தார்கள்.

மோடி வருகையால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை: ஈ.வி.கே.எஸ் விமர்சனம்

சென்னை: பிரதமர் மோடி வருகையால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். மோடியின் பேச்சு ஒரு பிரதமரை போன்று இல்லாமல், சராசரியாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசாதது கண்டிக்கத் தக்கது என்றும் இளங்கோவன் கூறினார் dinakaran.com

எரிவாயு குழாய் .....தமிழக விவசாயிகளுக்கு ஏன் இந்த அநீதி?

vikatan.com இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு கெயில் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருவிற்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
செல்வதற்கான திட்டத்தினை மத்திய அரசின்
கேரளாவில் இருந்து நேரடியாக கர்நாடகா வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்,  அப்போதைய தமிழக அரசு சற்று விழிப்புடன் இருந்திருந்தால். ஆனால் வழக்கம் போல மாநில அரசு தமிழர்களை கைவிட்டு விட, இப்போது மத்திய அரசு விவசாயிகள் தலையில் மிளகாய் அரைத்து விட முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.

இறுதிச் சுற்று...நொச்சிக்குப்பம்..நிச்சயம் பார்க்க...மாஸ்

charuonline.com:: பைத்தியம் பிடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வேலைப்
பளு.  அதற்கு நடுவிலும் நேற்று நான் (மட்டும்) இறுதிச் சுற்று போயிருந்தேன்.  காரணம், நல்ல தமிழ்ப் படம் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது.  மேலும் நான் ஒரு சினிமாப் பைத்தியம்.  இப்படி பல காரணங்கள் இருந்தன.  மேலும், இறுதிச் சுற்று நன்றாக இருப்பதாகப் பல நண்பர்களும் சொன்னார்கள்.  மற்றபடி படத்தின் இயக்குனர் யார் என்று கூடத் தெரியாது.  இப்போது இந்த நிமிடம் வரை கூடத் தெரியாது.  இனிமேல்தான் கூகுளில் தேட வேண்டும்.
பெயர்ப் பட்டியலில் சந்தோஷ் நாராயணனின் பெயரைப் பார்த்து மகிழ்ந்தேன்.  நான் அவர் ரசிகன்.  அவர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அவரிடம்தான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக விளிம்பு நிலை மக்கள் கேட்கும் இசை இடம் பெறுகிறது.  முதல்முறையாக தென்னமெரிக்க இசையும் சேர்ந்திருக்கிறது.  முதல்முறையாக கிழட்டுத்தனம் இல்லாமல் இருக்கிறது.

பாகிஸ்தான் இந்துக்கோவில் மீது தாக்குதல் பதற்றம் Hindu population in Pakistan from 15% to 1%.


hindu minority in Pakistan degresus from 15% to 1%. 
பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், சிறுபான்மை மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.< பழமையான கோவில் பாகிஸ்தானின் துறைமுக நகரம் கராச்சி. அங்கு உயிரியல் பூங்காவின் அருகில் இந்துக்கோவில் ஒன்று உள்ளது. 60 ஆண்டுகள் பழமையான கோவில் இது.
இந்த கோவிலுக்குள், சம்பவத்தன்று தாடியுடன் கூடிய 3 பேர், கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது அங்கு அந்தக் கோவிலை கட்டியவர்களின் குடும்பத்தினரும், பராமரிப்பவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள், துப்பாக்கி ஏந்திய நபர்களைக் கண்டதும் என்ன நடக்கப்போகிறதோ என்று கலங்கினர்.

கார்னியா கண் குறைபாடு...இந்தியாவில் ஏன் வேதனை?


bbc.com/tamil :கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது.
ஆனால் இலங்கையின் அண்டைநாடான இந்தியா இதில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் கார்னியா கிடைக்காமல் பார்வையின்றி தவிக்கும் நிலைமை இந்தியாவில் இன்னமும் நீடிக்கிறது. இதன் பின்னணி காரணிகளை பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் எம் ராதாகிருஷ்ணன்.

உலகக்கு கண்பார்வை தரும் இலங்கை cornea donation sri lanka


tamil.bbc.com :கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும். உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.