tamil.oneindia.com- Hema Vandhana : சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே பாமக மாற்று வழிகளை ஆராய்கிறது. திமுக தரப்பிலும் பெரிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்கும் எண்ணம் இருப்பதால், பாமக திமுக பக்கம் நகர்வது சாத்தியமான ஒன்றே என்று மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.
பேரலை சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜென்ராம், "மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் "எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை" என பாமக எடுத்த முடிவு, அவர்கள் என்டிஏ கூட்டணியிலிருந்து முற்றிலுமாக வெளியேறியதை உணர்த்துகிறது.
அதிமுக நிர்வாகிகள் அன்புமணியை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கோரியும், அவர் நேரம் ஒதுக்க மறுத்ததன் மூலம் 2 கட்சிகளுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளது தெளிவாகிறது. இப்போது பாமக ஒரு முக்கோண அரசியல் சந்திப்பில் நிற்கிறது.
Political leaders discussing alliance shifts ahead of 2026 elections
பாமகவின் அடுத்த கட்ட நகர்வு
பாமகவின் அடுத்த கட்ட நகர்வு, தவெக அல்லது திமுக பக்கமாக இருக்கலாம். தவெக கூட்டணியில் விசிக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால், அங்கு பாமக செல்வதில் சிக்கல் உள்ளது. முன்பு திமுக கூட்டணியில் விசிக இருந்தபோது "பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்" என்ற நிலையை எடுத்தது.
ஆனால், விஜய்யால் விசிக மற்றும் பாமக இரண்டையும் ஒரே கூட்டணியில் தக்கவைக்க முடித்தால் அது சாத்தியப்படலாம். இல்லாவிட்டால் விசிக தவெக கூட்டணியில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், பாமகவுக்குத் திமுக மட்டுமே ஒரே சாய்ஸாக அமையும்.
திமுக-பாமகவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.. கடந்த முறை திமுக கூட்டணியில் விசிக இருந்ததாலும், திருமாவளவனை விட்டுத்தர முடியாததாலும்தான், பாமகவுடன் திமுக கூட்டணி அமைக்கவில்லை. இப்போது பாமக யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்தாலும், அவர்களின் வாக்குகள் திமுகவுக்கே சாதகமாக முடியும்.
திமுகவுக்கே சாதகமாக முடியும்
10.5% இடஒதுக்கீடு முயற்சியை கருத்தில் கொண்டு சில வாக்குகள் அதிமுகவுக்கு செல்லலாம். இருந்தாலும், தவெக - விசிக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் பாமக வாக்காளர்கள், பலவீனமாக இருக்கும் அதிமுகவை விட, பலமான திமுகவையே பிரதான தேர்வாகக் கருதுவார்கள்.
மேலும், பாமக வாக்காளர்கள் சிபிஐ, சிபிஎம், நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளுக்கு வாக்களிக்காமல், வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியையே தேர்ந்தெடுப்பார்கள்.
10.5% இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற விவகாரங்களில் பாமக திமுகவை விமர்சித்திருந்தாலும், அதை மக்கள் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டார்கள். கூட்டணியில் இருக்கும்போதே விமர்சிப்பது அரசியலில் இயல்பானதுதான்.
2026 சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய புதிய அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நின்று வாய்ப்பை இழக்கக் கூடாது என நினைக்கின்றன.
பாமக மாற்று வழிகள்
அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே பாமக மாற்று வழிகளை ஆராய்கிறது. திமுக தரப்பிலும் பெரிய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்கும் எண்ணம் இருப்பதால், பாமக திமுக பக்கம் நகர்வது சாத்தியமான ஒன்றே.
கூட்டணி மாற்றங்களால் அதிமுகவுக்குக் கண்டிப்பாய் பின்னடைவுதான். கட்சிக்குள்ளேயே இருக்குற சண்டையைச் சமாளிக்குறதுலயே அதிமுகவோட சக்தி எல்லாம் வீணாயிடுது. பாமக விலகிய பிறகு, டிடிவி தினகரனின் அமமுக மட்டும்தான் அதிமுக கூட உறுதியா நிற்பது போல தெரியுது. அதேநேரம், தாராபுரத்துல குறிப்பிடத்தக்க அளவுக்கு ஓட்டு வச்சிருக்குற பாஜகதான் அதிமுகவுக்கு இப்போ முக்கியமான ஆதரவா இருக்கு. தேர்தல் முடிவு என்னவாகும்னு கணிப்பதை விட, இதெல்லாம் அரசியல் களத்துல நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுமே" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக