Actressஅம்பிகா மீது தங்கை actress ராதா கண்ணீர் மல்க பரபரப்பு புகார்
dhinamalar : dinamalar.com : 80களில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் கனவுக் கன்னிகளாக திகழ்ந்தவர்கள் சகோதரிகளான அம்பிகா, ராதா. சிவாஜி, ரஜினி, கமல் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளனர். ஒருகட்டத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ராதா தனது கணவருடன் இணைந்து ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இறங்கினார்.
நடிகை அம்பிகா அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தனது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், ‛‛சென்னை போரூரில் ARS கார்டன் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறேன். தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, அவசர பயன்பாட்டிற்காக கையெழுத்திட்ட சில செக்குகளை எனது அறையில் வைத்திருப்பது வழக்கம்.
2025ல் ARS கார்டன் RR கார்டன் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் இதுபற்றி நான் நடத்தி வரும் தொழில் தொடர்பான ஐடிபிஐ வங்கிக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய செக் புக்கும் எனக்கு அளிக்கப்பட்டது. இதனால் பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போனது.
கடந்த செப்., 17ல் எனக்கு வங்கியில் இருந்து இ-மெயில் வந்தது. அதில் பயன்பாட்டில் இல்லாத எனது பழைய 5 செக்குகள், சுமார் 46 கோடி அளவுக்கு அக்கா அம்பிகா பெயரில் பணமாக்க வங்கியில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அந்த பணபரிமாற்றத்தை நிறுத்த சொல்லிவிட்டேன்.
இதுபற்றி விசாரித்தபோது அந்த செக்கை பூர்த்தி செய்தது எனது சகோதரர் மல்லிகார்ஜூனா குஞ்சன் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அவர் மீது ‛பெமா' வழக்கு நிலுவையில் உள்ளது.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள எனது வீட்டின் தளைத்தளத்தில் அக்கா அம்பிகா உள்ளார். நான் இல்லாத நேரத்தில் மேல் தளத்தில் உள்ள எனது வீட்டிற்குள் சென்று செக்கை திருடி பண மோசடியில் ஈடுபட இருவரும் முயன்றுள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராதா தெரிவித்து உள்ளார்.
பிரத்யேக வீடியோ!
அக்கா அம்பிகா மீது தங்கை ராதா புகார்; திரையுலகம் அதிர்ச்சி சம்பவம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக