![]() |
ராதா மனோகர் : வைகோ என்றொரு பிணம் தின்னி!
வைகோவின் பாராளுமன்ற பேச்சுக்களை ராகுல் காந்தியை கொண்டு வெளியிட்டார் வைகோ என்கின்ற வையாபுரி கோபாலசாமி நாயக்கர்!
இந்திய அரசியலில் இந்த மனிதனை (வைகோ) போன்ற கேவலமான ஐந்து கிடையவே கிடையாது.
தந்தை ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டு அந்த வீர பிரதாபங்களை புத்தகமாக எழுதினார்.
பின்பு அதையே ராஜீவின் மகன் ராகுல் காந்தி மூலம் வெளியிடும் எருமை தோல் வைகோவிற்கு மட்டுமே உண்டு.
ராகுல்காந்திக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது .
அது ஒரு வீண் பிறவி என்பது இதன் மூலமும் தெரிகிறது.
வைகோ எப்படி ஒரு கோடாரி காம்பாக செயல்பாட்டார் என்பதை சற்று விபரமாக பார்ப்போம்.
![]() |
1984 இல் இந்திரா காந்தியின் உயிரிழப்புக்கு பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து 404 தொகுதிகளில் வெற்றி பெற்றது
பாஜக வெறும் 2 எம்பிகளை மட்டுமே பெற்றது
1984 BJP Lok Sabha MembersDr. A. K. Patel – Mehsana constituency, Gujarat
Chandupatla Janga Reddy – Hanamkonda constituency, Andhra Pradesh
ராஜிவ் காந்தி பிரதமரானார்
போபோர்ஸ் ஊழலில் ராஜிவ் காந்திக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று பின்பு நீதிமன்ற தீர்ப்பு வந்தது
ஆனால் அப்போது அவர் உயிரோடு இல்லை
பாஜவுக்கு இரண்டே இரண்டு உப்பு சப்பில்லாத நாடாளுமன்ற எம்பிக்கள் இருந்தனர்
அத்வானி ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.
இப்படி பட்ட சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் சங்கிகள் தன்னம்பிக்கையோடு இந்துத்துவா அரசியலை முன்னெடுத்தனர்.
அவர்களின் கைகளில் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார் திமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் வைகோ!
குறிப்பாக அத்வானி வாஜ்பாய் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களோடு வைகோவிற்கு ஏற்பட்ட நெருக்கம் கொஞ்சம் அசாதாரணமானது
அது ஒரு புதிர் . புரிந்துகொள்வது இலகுவல்ல.
இவர்கள் நேரில் பேசும் காணொளிகளை பார்த்தால்தான் அந்த நெருக்கம் புரியும்.
ஒரு திராவிட முன்னேற்ற கழக எம்பி எப்படி சங்கி ஜோதியில் கலந்தார் என்பதற்கு விடை பின்பு தெரிந்தது.
வைகோ அடிப்படையில் ஒரு வாய் வியாபாரி.
எங்கே கூலி அதிகமாக கிடைக்குமோ அங்கே அதை விற்பார்.
சர்வ வல்லமையோடு பதவிக்கு வந்த ராஜிவ் காந்தி வெகு வேகமாக அரசியலிலும் பொருளாதாரத்திலும் அதிரடியை நிகழ்த்த தொடங்கினார்
பஞ்சாப் காஷ்மீர் அசாம் போடோலாந்து மாநில பிரச்சனைகளில் வெற்றிகரமாக சுமுக நிலையை எட்டி இருந்தார்.
நவீன இந்தியாவை சுதந்திர பொருளாதார வல்லரசாக மாற்றும் முயற்சிகளை பாரிய அளவின் முன்னெடுத்தார்
தொலைத்தொடர்பு மற்றும் கம்ப்யுட்டர் பயன்பாட்டில் இன்றைய இந்திய வளர்ச்சிக்கு அத்திவாரம் இட்டது ராஜிவ் காந்திதான்.
இப்படி வெற்றி மேல் வெற்றி பெற்றுவந்த ராஜீவ் காந்தியை இலங்கையில் சறுக்க வைத்ததில் வைகோவின் பங்கே பெரிது .
இவரோடு நெடுமாறன் மற்றும் தமிழக தமிழ் தேசிய வெறுப்பு அரசியல் வாதிகள் சிலர் ஒத்தோடினார்கள்.
இந்நிலையில் இலங்கை பிரச்சனையில் புலிகளை ஆர் எஸ் எஸ் திட்டத்தின் படி கையாண்டு ராஜிவ் காந்தியை திணறடித்தார் வைகோ
இறுதியில் ராஜிவ் காந்தியை கொலை செய்யவும் புலிகளை தூண்டி விட்டார்
![]() |
| Hindu N,Ravi |
ஆம் பிரபாகரன் ராஜிவ் காந்தி மீது கடும் கோபமாக இருக்கிறார் என்று கூறி கூறி பிரபாகரன் மனதில் கோபத்தை விதைத்தார்
அப்படியே ராஜிவ் கொல்லப்படவேண்டியவர்தான் என்ற உளவியலை கட்டமைத்தார் வைகோ.
அந்த கால சம்பவங்களை நன்றாக உற்று நோக்கி ஆய்வு செய்தால் இந்த உண்மை விளங்கும்.
ராஜிவ் காந்தியின் மிஸ்டர் கிளீன் இமேஜை நாசமாக்கும் வேலையை
வைகோ முழு மூச்சுடன் செய்து முடித்தார்
சுவீடன் போபோர்ஸ் கட்டுக்கதையை ராஜிவ் காந்தி தலையில் போட்ட இந்து பத்திரிகையும் அதன் அப்போதைய ஆசிரியர் என் ரவியும் அவரின் அடியாள் சித்திரா சுப்பிரமணியம் என்ற அந்நிய ஏஜெண்டும் இந்த சதியில் கூட்டாக பணியாற்றினார்கள்!
இந்த இருவரின் கட்டுக்கதைகளை அரசியல் அரங்கில் பெரிய சூறாவளியாக்கினார் வைகோ!
வெறும் இரண்டு உறுப்பினர்களோடு இருந்த பாஜக 1989 தேர்தலில் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றது
இந்த வெற்றிக்கு வைகோவின் வாயும் மிக பெரிய காரணம்தான்
வெறும் போபோர்ஸ் என்ற வார்த்தையை வைத்து ராஜிவ் பெயரை நாறடித்த வைகோவின் துரோக அரசியல்,
சங்கிகளுக்கு அவர் செய்த கர சேவையாகும்.
ராஜிவ் காந்தி மீது கணக்கு வழக்கில்லாமல் குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசிய வைகோ பின்பு ராஜிவ் இதில் தொடர்பு படவில்லை என்று நீதிமன்ற தீர்ப்பு வந்தபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை
அதை பற்றி எந்த வித குற்ற உணர்வும் கூட வைகோவிற்கு இருந்தது கிடையாது
வைகோ ஒரு பிறவி கிரிமினல். மான உணர்வு ஒன்றும் அவருக்கு கிடையாது
போபோர்ஸ் விவகாரத்தில் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டது ஆனால் அது யாருக்கு என்பது ஒருபோதும் தெளிவாக தெரியவில்லை என்று இந்த எழுத்து வியாபாரி சித்திரா சுப்புரமணி இப்போது கூறுகிறார்
ஆனால் இவர் யார் யாரின் வாய்களுக்கு எல்லாம் முன்பு தீனி கொடுத்தார் ?

ராஜீவ் காந்தியின் பிம்பத்தை யார் யார் எல்லாம் நொறுக்குவார்களோ அவர்களின் வாய்களுக்கெல்லாம் அவல் கொடுத்தார்
அதுவும் டன் கணக்கில்.
இந்த வித்தார கள்ளியை வைகோ வீர பெண்மணி என்ற ரேஞ்சில் புகழ்ந்தார்
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் சித்திரா சுப்பிரமணியனின் கொள்கை பரப்பு செயலாளர் போலவே முழங்கினார்
வடநாட்டு சங்கிகள் வைகோவின் வாயை நன்றாக பயன்படுத்தினார்கள் .
இதனால்தான் வாஜ்பாயும் அத்வானியும் வைகோவை தங்கள் மகன் போல கருதினார்கள் என்று வைகோவே அடிக்கடி கூறினார்..
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்ததில் வேறு எவரையும் விட வைகோவுக்கு ஒரு வரலாற்று பங்கு இருக்கிறது
அத்வனி வாஜ்பாய் குரூப் இவரை நன்றாக பயன்படுத்தியது
அவர்களிடம் இல்லாத வாய் வீச்சு இவரிடம் உண்டு
இவரின் வாயால் முழுக்க முழுக்க பயன் அடைந்தது சங்கிகள்தான்
இவரது வாயால் நாசமாய் போனது புலிகள்தான்
இதனால்தான் வாஜ்பாயும் அத்வானியும் வைகோவை தங்கள் மகன் போல கருதினார்கள் என்று வைகோவே அடிக்கடி கூறினார்..
வைகோவுக்கு பெட்ரோலிய துறையை கொடுக்க வாஜ்பாயி விரும்பினார் என்று அண்மையில் ஆர் எஸ் எஸ் குருமூர்த்தியே மேடையில் கூறினார்.
அது மட்டுமல்ல இது ஒரு பெரிய வாய்ப்பு தவறவிட வேண்டாம் என்று வலியுறுத்தினார் என்றும் கூறினார்
நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள் என்பது. வாஜ்பாயி அத்வானி கும்பலுக்கு தெரியும்!
இந்த பேட்டியை அவதானித்தால் .பல விடயங்கள் புரியும்!
கலைஞரை கொன்று திமுகவை கைப்பற்றும் வைகோவின் கனவு மட்டும் கனவாகவே போய்விட்டது
அந்த வகையில் தமிழகமும் திராவிட முன்னேற்ற கழகமும் தப்பித்தது என்றுதான் கூறவேண்டும்
மீள்பதிவு : போபோர்ஸ் கதை வசனகர்த்தா சித்திரா சுப்பிரமணியம் பற்றிய சிறு குறிப்பு!
thenewsminute தன்யா ராஜேந்திரனின் முதலாளி சித்திரா சுப்பிரமணியன் Duella யார்? இவர்களின் ஆர் எஸ் எஸ் தொடர்புகள் .. flashback
Mrs .chitra subramaniam duella சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
Dhanya Rajendran
ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.
இவர் சுவிஸ்லாந்தை சேர்ந்த டாக்டர் கியான்கார்லோ டூல்லா என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் Republic செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில் ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.
திரு ராஜீவ் காந்தியை ஒரு ஊழல் பேர்வழி என்று பொதுமக்களை நம்பவைத்ததில் இவரின் நச்சு எழுத்துக்கு பெரும் பங்கிருக்கிறது
இவரின் ஒவ்வொரு எழுத்தையும் பெரிய பிரசார ஆயுதமாக தலைமேல் சுமந்தவர் திரு வை கோபாலசாமியாகும்.
chitra subramaniam duella
இவர் 1958 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தார்.
தில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் இதழியலில் முதுகலை டிப்ளோமாவும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1989 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தேர்தல் தோல்விக்கு இவர் எழுதிய போபோர்ஸ் கதைதான் பெரிய அளவில் பயன்பட்டது என்று கூறப்படுகிறது.
திரு ராஜீவ் காந்தி காலத்தில் நடந்த போபர்ஸ்- ஹோவிட்சர் bofors howitzer பீரங்கி ஒப்பந்தம் பற்றி ஒரு நாள் சுவீடன் வானொலியில் ஒரு செய்தி வெளியானது
போபோர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் இந்தியாவின் முக்கிய புள்ளி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதுதான் அந்த செய்தி
அந்த செய்தியை அளவு கணக்கில்லாமல் ஊதி பெருக்கியத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இன்னுமொருவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது
இந்து பத்திரிகையும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் மட்டுமல்லாது அவர்களோடு ஒரு கூட்டணி சேர்ந்தது போல வை கோபாலசாமியும் சேர்ந்து திரு ராஜீவ் காந்தி மீது சேறு வாரி வீசுவதில் கடுமையாக உழைத்தார்கள்
இதன் காரணமாக சித்ரா சுப்பிரமணியத்தை ஒரு உலகப்புகழ் பெற்ற பத்திரிகையாளராக பிரபல இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது ராஜீவின் எதிரிகளும் சேர்ந்து உயர்த்தி பிடித்தனர்
1987 இல் இவர் சுகாதாரம், வர்த்தகக் கொள்கை ஊடகம் போன்ற துறைகளுக்குக்கான ஆலோசனை நிறுவனத்தை ஜெனீவாவில் CSDconsulting அமைத்தார். அதாவது காப்பரேட்டுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான புரோக்கர் கம்பனியை நிறுவினார்
இவர் இன்று .thenewsminute. தி நியூஸ் மினுட்டின் நிறுவனர்களில் ஒருவராகவும் நிர்வாக ஆசிரியராகவும் உள்ளார்..
நியூஸ் மினிட் சஞ்சிகை தென்னிந்திய மாநிலங்களை குறிவைத்து சங்கிகளின் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறது
தென்னக சங்கிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த நிறுவனம் 24 மணிநேரமும் கடமை புரிகிறது
அன்னா ஹாசாரே பற்றி ஒருவரும் மறந்திருக்க மாட்டார்கள் அவரை இந்திய தேசம் காப்பவராக எல்லா ஊடகங்களுக்கும் உயர்த்தி பிடித்ததில் இந்த அம்மையாரின் பங்கும் பெரிது.
நரேந்திர மோடியை ஆட்சிக்கு கொண்டுவந்ததிலும்,
இன்றுவரை ஊடக பொதுவெளியில் மோடியை காப்பாற்றுவதிலும் இவர் தனது பங்கை அளித்து கொண்டிருக்கிறார்
இவரது வாழ்வில் இவருக்கு வந்த ஒரே ஒரு பிரச்சனை கான்சர் வியாதிதான் அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார் என்றெண்ணுகிறேன் .
குடும்பமாக வாழ்வது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில். அங்கிருந்து கொண்டே இந்திய ஊடகங்களில் தன் கைவரிசையை காட்டுகிறார்
இவர் 1997 ஆம் ஆண்டில் சுவிஸ் அரசாங்கம் சுவிஸ் வங்கிக்கான இரகசிய ஆவணங்களையும் கூடுதல் விவரங்களையும் இந்திய அரசிடம் ஒப்படைக்கும் வரை சுவிட்சர்லாந்தில் நடந்த விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அறிக்கை அளித்து வந்தார்.
இவரது அடியாள் வேலைக்காக பி.டி.கோயங்கா விருது மற்றும் சமேலி தேவி விருது உட்பட பல இந்திய பத்திரிகை விருதுகளைப் பெற்றுள்ளார். t



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக