Vasu Sumathi : இதுவரை கட்சி மூலமாக 5 பைசா கூட கைநீட்டி வாங்காமல், ஆயிரம் முறை 200 ரூபாய் உபி என்று பெயர் வாங்கிய ஒரு - உறுப்பினர் அட்டை கூட இல்லாத - உண்மை திராவிட சிந்தனையாளனின் குரல்..
கழகத் தலைமை சற்றே நிஜ நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்!
இன்றைய அரசியல் களம் தெருமுனைக் கூட்டங்களிலோ அல்லது மேடைப் பேச்சுகளிலிருந்து மக்களின் கைபேசிகளுக்குள் நகர்ந்துவிட்டது.
கொள்கையே இல்லாமல், எதிராளிகள் கோடிக்கணக்கில் பணத்தை மட்டும் அள்ளி வீசி, சமூக ஊடகப் பிம்பங்களை மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அவலத்தை கண்கூடாக பார்க்கிறோம். நாமோ இன்னும் "பழைய பாணி" அரசியலை கொஞ்சம் மாற்றியமைக்க ஏனோ தயங்கி கொண்டிருக்கிறோம்.
இன்று இணையத்தில் நமக்காக ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள் பலர் வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டுமே களமாடுகிறார்கள். ஆனால், அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது, கூடாது.
இது வேண்டுகோள், அறிவுரை அல்ல..
"களப்பணியாளர்களுக்கு அங்கீகாரம்" என்பதே காலத்தின் கட்டாயம்.
சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக, திறம்பட குரல் கொடுக்கும் நபர்களுக்கு ஒரு முறையான நிதி அமைப்பிற்குள் கொண்டுவந்து மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்..
டிஜிட்டல் முதலீடு... பாரம்பரியப் பிரச்சாரங்களுக்குச் செலவிடும் நிதியைக் குறைத்து, அதை முழுமையாகச் சமூக ஊடகப் பிரிவில் (IT Wing) முதலீடு செய்ய வேண்டும். தொழில்முறை 'இன்ஃப்ளுயன்சர்களை'ப் பயன்படுத்தி நமது கருத்துகளை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும்.
எதிர்த்தரப்பு தாக்குதல்களை முறியடித்தல்: எதிர்க்கட்சிகளின் போலிப் பரப்பரப்புகளுக்குப் பதிலடி கொடுக்கக் கூடிய ஆக்ரோஷமான நபர்களை உடனடியாக ஒருங்கிணைத்து டிஜிட்டல் களத்தில் இறக்க வேண்டும். (நேற்று எதிர்வினையாற்ற எவ்வளவோ இருந்தும் நாம் மௌனம் காத்தது உண்மையிலேயே பலருக்கு மனம் வெறுத்து போனது)
வெறும் பிஆர் (PR) விளம்பரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சில வெத்து வேட்டுகள் தங்களை மாபெரும் பிம்பங்களாகக் காட்டிக் கொள்ளும்போது, உண்மையான உழைப்பையும், சாதனைகளையும் கொண்டிருக்கும் நாம் இன்னும் இணையச் சூழலைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பது பின்னடைவையே தருகிறது, அதை மனம் ஏற்க மறுக்கிறது.
இனியாவது விழித்துக் கொண்டு சமூக ஊடகப் பிரச்சாரத்திற்குத் தாராளமாக நிதி ஒதுக்காவிட்டால், வரும் தேர்தல்களில் நாம் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டி வரும்!
நண்பர்களே, நீங்கள் சமூக ஊடகங்களில் கொள்கை ரீதியாக திமுகவிற்கு களமாடும் உடன்பிறப்பாக இருந்தால், என் கருத்து சரியா, இல்லையா என்று வெளிப்படையாக கீழே பதிவிடுங்கள்.
ஆம் சரி என்று நீங்கள் நினைத்தால் இது தலைவர் கண்ணில் படும்வரை ஷேர் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக