புதன், 6 மார்ச், 2019

ரபேல் தொடர்பான ஆவணங்கள் திருடு போய்விட்டதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு

Devi Somasundaram : ரபேல் தொடர்பான ஆவணங்கள் திருட பட்டதா நீதி
மன்றத்தில் சொல்ல பட்ட தகவலின் பின்னாடி இந்து என் ராம் குறி வைக்க படுகிறார் என்பதை கவனிக்க தவற கூடாது .
கோர்ட்ல சொல்ல பட்டது ஹிந்துல எழுதபட்ட கட்டுரை இரகசிய ஆவணங்களின் தகவல் அடிப்படையில் எழுத பட்டது அவை பாதுகாப்பு துறையில் இருந்து திருட பட்டதாக அரசு நீதி மன்றத்தில் கூறி இருக்கு என்று TOI கட்டுரை சொல்கிறது .
இது எதிர் பார்த்தது தான்... 2 ஜீ வழக்கில் ஆரம்பம் முதல் உண்மை தகவலை மட்டும் எழுதிய பத்திரிக்கை த ஹிண்டு மட்டுமே .
தொடர்ந்து ராஜா அவர்களின் இண்டர்வியுகளை எழுதி அவர் பக்க நியாய்ம் பொது சமுகத்தை எட்ட என் ராம் மட்டுமே துணை நின்றார் .

பாகிஸ்தான்ல அதிபரா இருந்து கொண்டு அடிப்படைவாத மத வாதிகளின் அழுதத்தை மீறி அபி நந்தனை விடுவிக்க இம்ரான் எத்த்தகைய எதிர்ப்பை உள்ளுரில் சந்தித்தாரோ அதே மாதிரியான் அழுத்தம் என் .ராம்க்கும் உண்டு .
பார்ப்பனரா இருந்து கொண்டு பார்ப்பனிய எதிர்ப்பு நிலை எடுப்பது அத்தனை சுலபமில்லை .உள்ளிருந்தும் எதிர்ப்பு வரும் ,பார்ப்பனர் என்ப்தற்காக வெளியில் இருந்தும் எதிர்ப்பு வரும் நிலையில் இந்து என் ராம் கடைசி வரை நிலை தடுமாறாமல் உண்மையின் பக்கம் நின்றார் .

அந்த கோபம் , தங்கள் திட்டம் தோற்று போன ஆத்திரம் ராம் மீதும் சங்கி கும்பலுக்கு இருக்கும்...இந்த ரபேல் மிரட்டல் மூலம் இன்னொரு பார்ப்பனர் திராவிட ஆதரவு நிலை எடுக்க பயப்படனும் என்ற உளவியல் மிரட்டலையும் தர முயலுகிறது . உண்மைக்கு ஆதரவாய் இருப்பதில் பார்ப்பனர்களையும் இந்துத்துவ அரசியல் எதிர்க்க செய்யும் என்பதை வெளி நாடு வாழ் கீ பேட் அரசியல் வாதிகள் அறிந்தால் நலம்.
https://www.google.com/…/rafal…/amp_articleshow/68285348.cms
StandWithHinduNRam

கருத்துகள் இல்லை: