மின்னம்பலம் :
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர் பொதுத் தேர்வு அறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் ஏல்லரேடைகுடா பகுதியில் உள்ள கவர்ன்மென்ட் ஜூனியர் காலேஜ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவர் கோபி ராஜு. தமிழகத்தைப் போல அங்கும் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. செகந்தராபாத்தில் உள்ள சைதன்யா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் கோபி ராஜு நேற்று (மார்ச் 2) பொதுத் தேர்வு எழுதச் சென்றார். வினாத்தாளைப் பெற்று தேர்வு எழுதத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோபி ராஜு மயக்கமடைந்து விழுந்தார்.
பசி மயக்கத்தால் விழுந்திருப்பார் என்று கருதிய ஆசிரியர்கள் உடனடியாக அம்மாணவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மாரடைப்பால் கோபி ராஜு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தேர்வு பயத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு கோபி ராஜுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் மாணவரின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக