சனி, 9 மார்ச், 2019

சந்திரகுமார் : கலைஞரை பார்க்க விஜயகாந்தை ஸ்டாலின் அனுமதிக்கவில்லை என்று பிரேமலதா கூறுவது தவறானது

சந்திரகுமார் : கீழ்த்தரமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் பிரேமலதா. அப்புறம், திமுகவையும், திமுகவினரையும் தரக்குறைவாக கடுமையாக விமர்சிக்கிறார். நானும் ஒருகாலத்தில் தேமுதிகவில் இருந்தவன். அப்படி இருந்தும் சொல்கிறேன். அதைவிட தரங்கெட்ட வார்த்தையில் தேமுதிக என்பதற்கு ஆபாசமாக, அறுவறுக்கத்தக்க வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியும். ஆனால், ஒரு அரசியல் இயக்கத்தை பற்றி அப்படியெல்லாம் அநாகரீகமாக பேசக்கூடாது.
THE HINDU TAMIL : பத்திரிகையாளர்களை ஒருமையில் அழைத்துப் பிரேமலதா விஜயகாந்த் பேசியது கடும் விமர்சனங்களுக்கு  ஆட்பட்டு வரும் நிலையில் முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ.வும் தற்போது திமுகவில் இருப்பவருமான சந்திரகுமார், பிரேமலதா விஜயகாந்த் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார் கூறியதாவது:
வன்மையாக நான் கண்டிக்கிறேன். பத்திரிகையாளர்களை அழைத்தால் என்ன விஷயமோ அதைக் கூற வேண்டும்.  அதைவிடுத்து ஏதோ பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் அவர் பேசுவதும் அங்கு கைதட்டிச் சிரிப்பதும் பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துவதாகும்.
அவர் கூறியதிலேயே அதிர்ச்சியானது எதுவெனில், ‘தலைவர் கருணாநிதியை பார்க்க நாங்கள் அனுமதி கேட்டோம் ஆனால் ஸ்டாலின் மறுத்துவிட்டதாக அவர் கூறினார். ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்.  மருத்துவமனையில் கருணாநிதியைப் பார்க்க வேண்டும் என்று இவர்கள் கேட்கவே இல்லை. ஏனெனில் அன்றைக்கு விஜயகாந்த் உடல்நிலை நேரில் வந்து பார்க்கும் நிலையில் இல்லை. இதுதான் உண்மை.

ஆனால் மருத்துவமனையில் கருணாநிதி இருந்த போது சுதீஷ் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். விஜயகாந்தையே பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறுவதை ஒருவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் கூட சுதீஷைப் பார்க்க எப்படி திமுக சம்மதித்திருக்கும்?
இன்னொன்று தொலைக்காட்சி நிருபர்களைப் பார்த்து ஒருமையில் பேசி அரசியல்வாதிகளிலேயே ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதியாக அவர் மாறியிருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.  திமுகவை தரம்கெட்ட வார்த்தைகளில் விமர்சிக்கிறார்.
தேமுதிக... நானும் அந்தக் கட்சியில் ஒருகாலத்தில் இருந்திருக்கிறேன் என்றாலும் கூட அதற்கும் ஒரு அருவருக்கத்தக்க வார்த்தையைப் போட்டு சொல்லிவிட முடியும் ஆனால் ஒரு அரசியல் இயக்கத்தைப் பற்றி அப்படியெல்லாம் அநாகரிகமாக பேசக்கூடாது.
பிரேமலதா விஜயகாந்த் இன்றைக்கு ஏன் இந்த விரக்தியில் இருக்கிறார் என்று சொன்னால் பூட்டியிருக்கும் வீட்டுக்குள்ளே இருக்கும் எலிக்கு எங்கே செல்வது என்று வழிதெரியாது. பூட்டிய அறைக்குள்ளே சிக்கிய எலி போல அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி அங்கேயே சுற்றி சுற்றி இருக்குமோ அது போன்று இன்றைக்கு  தேமுதிக அப்படி ஆகியிருக்கிறது.  ஒருபுறம் திமுகவுடன் பேச வேண்டும் என்கிறார்கள், இன்னொரு பக்கம் பாஜகவுக்கு ஆள் அனுப்பி கூட்டணி பேசுகிறார்கள். இப்படி அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு கூறினார் பிரேமலதா விஜயகாந்த்

கருத்துகள் இல்லை: