![]() |
தேமுதிக + பாஜக ஒலிபெருக்கிகள் |

இது முழுக்க முழுக்க பாஜகவின் செயல்திட்டம்தான். தேமுதிக ஏற்கனவே
பாஜகவிடம் கரைந்து போய்விட்டது .

தமிழக தேர்தலில் தோற்றாலும் ராஜ்யசபா . மத்திய அமைச்சு பதவிகள் இதர சலுகைகள் போன்றவை கிடைக்கும் .எல்லாவற்றையும் விட வேண்டிய அளவு பணம் கிடைக்கும் என்பது தான் பிரேமா சுதீஷ் போன்றோரின் உள்ளக்கிடக்கை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது . விஜயகாந்த் இனி அரசியல் செய்யவோ சுயமாக செயல்படவோ முடியாது.பாஜகவின் பக்க பலத்தில்தான் இவர்களின் அரசியல் எதிர்காலம்.
மின்னம்பலம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6) சென்னை வரவுள்ள நிலையில், அதற்குள் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படவுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மூன்றாவது முறையாக இன்று தமிழகம் வரவுள்ளார். முன்பு வந்தபோது அரசு நிகழ்ச்சிகளிலும் பாஜகவின் பொதுக் கூட்டத்திலும்
கலந்துகொண்ட பிரதமர் மோடி, கூட்டணி அமைந்த பிறகு முதன்முறையாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அரசுக்குச் சொந்தமான, 100 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து இன்று மதியம் 12.15 மணிக்குப் புறப்படும் பிரதமர் மோடி, சென்னைக்கு 3 மணிக்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அவர், முதலில் அரசின் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.5,010 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னை புறநகர் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நேற்றிரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், தமிழகத் தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் நேரில் பார்வையிட்டனர்.
இறுதி செய்யப்படும் கூட்டணி?
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்துவிட்ட நிலையில் தேமுதிக, தமாகா ஆகியவை இன்று காலை இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கூட்டணி இறுதி செய்யப்படும்பட்சத்தில் பிரதமரோடு பன்னீர்செல்வம், பழனிசாமி, விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி, வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், என்.ரங்கசாமி ஆகிய தலைவர்கள் ஒரே மேடையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக