வெள்ளி, 8 மார்ச், 2019

முகிலன் மீண்டும் ரயில் நிலையத்துக்குள் எதற்காக நுழைந்தார் புதிய சிசிடிவி வீடியோ

வெடித்த பிரச்சனை tamil.oneindia.com - hemavandhana : சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீண்டும் நுழையும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது.
மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, அணுஉலைக்கு எதிர்ப்பு போராட்டம் போன்ற போராட்டங்களை முன்னெடுத்தவர் முகிலன்... கார்பரேட் கம்பெனிக்கு எதிரான போராட்டங்களையும் நடத்தி வருபவர்.. இதனால் போலீஸ் தடியடி.. வழக்குகள் பதிவு... குண்டர் சட்டம்.. இன்னும் எத்தனை எத்தனையோ இவர் மீது திணித்து கொண்டிருந்தாலும் இந்த நிமிடம் வரை ஒலித்து கொண்டிருப்பது முகிலனின் பெயர்தான்!
கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு திட்டமிட்டுதான் நடத்தப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அப்போதே தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அங்கு பதிவிட்டார்.




எழும்பூர் ஸ்டேஷன்

இதன்பிறகுதான் மதுரை செல்ல எழும்பூர் ஸ்டேஷன் சென்றபோது மாயமானதாக கூறப்பட்டது. இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவே இல்லை. போலீஸ் தரப்பிலோ, சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்ததில், அவர் ஸ்டேஷனிலிருந்து வெளியேறி விட்டதாக சொன்னார்.

வெடித்த பிரச்சனை

விவகாரம் பெரிதாக வெடித்தது.. முகிலனை கண்டுபிடிக்க கோரி இளைஞர்கள் போராட்டங்களை கையில் எடுத்தனர். ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் தாக்கல் ஆனது... முகிலன் எங்கே என்ற ஹேஷ்டேக் உருவானது. ரயில்வே போலீசார் தங்களுக்கு முழு சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைக்கவில்லை என்று சிபிசிஐ போலீசார் கோர்ட்டில் சொல்லி இருந்தனர்.

சிசிடிவி

இந்நிலையில், இப்போது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி எழும்பூர் ஸ்டேஷனுக்குள் முகிலன் மீண்டும் நுழையும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிபிசிஐடியின் புது விசாரணையில்தான் இந்த வீடியோ காட்சி சிக்கியுள்ளது.

மீண்டும் நுழைகிறார்

முகிலன் மாயமானதாக சொல்லப்படும் அந்த நாளில், ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.00 மணிக்கு வெளியே செல்கிறார் முகிலன். மீண்டும் 11.30 மணிக்கு வேறு ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே வருவது போல அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து முகிலனை தேடி கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருவதாக சிபிசிஐடி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: