வியாழன், 7 மார்ச், 2019

மு.க, அழகிரி : எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயரை சூட்டவேண்டும் ..பிரதமர் மோடிக்கு கடிதம்!

tamilthehindu.com :சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர்
கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி இன்று எழுதிய கடிதத்தில், ''சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற அன்புக் கோரிக்கையைத் தங்களிடம் வேண்டுகோளாக வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தென் மாவட்ட திமுகவில் முன்பு மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்பு செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தபோது, இடைத்தேர்தலுக்கு தனி ஃபார்முலாவையே உருவாக்கினார். மு.க. அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்த பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் எந்தக் கட்சியிலும் சேராமல் இருக்கும் மு.க.அழகிரி  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடிதத்தில் என்றென்றும் கலைஞரின் தொண்டன் மு.க.அழகிரி என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை: