வியாழன், 24 ஏப்ரல், 2025

அஜித் தோவல்! இது ஒரு முக்கியமான பிளாஷ் பேக் செய்தி:- அஜித் தோவல்!


இது ஒரு முக்கியமான பிளாஷ் பேக் செய்தி:- அஜித் தோவல்!
1988 ஆம் ஆண்டு அமிர்த்தசாரஸ் சீக்கியர்களின் பொற்கோயிலை காலிஸ்தான் தீவிர வாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்
அந்த காலிஸ்தானியர்களின் இருப்பிடங்களை வேவு பார்ப்பதற்கு இந்திய உளவு பிரிவை சேர்ந்த இதே அஜித் தோவல் மாறுவேஷத்தில் உள்ளே நுழைந்தார்.
அதுவும் எந்த வேஷம்?
பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவாளி வேஷத்தில் உள்ளே நுழைந்து காலிஸ்தான் தீவிரவாதிகளோடு நல்ல உறவை ஏற்படுத்தி கொண்டார்
பொதுவில் இந்த விடயத்தில் தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை  ஏமாற்றுவது இலகுவல்ல.

தன்னை ஒரு இஸ்லாமியராக,
அதுவும் பாகிஸ்தானின் அரச உளவாளியாக காலிஸ்தானியர்களை நம்பவைத்தது சாதனைதான்.
அவர்களோடு நெருங்கி  அவர்களின் ஆயுத இருப்பிடங்களை அறிந்து கொண்டார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அவர்களுக்கு  தாக்குதல் பற்றிய தொழில் நுணுக்கங்களை கற்று கொடுக்கிறேன் பேர்வழி என்றும்  அவர்களை நம்பவைத்தார்.

அவர்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி  அவற்றை அப்படியே இந்திய ராணுவ உளவு தலைமை  செயலகத்திற்கு  உடனுக்கு உடன் வழங்கினார்
காலிஸ்தான் தீவிரவாதிகள் இவரை பாகிஸ்தானி உளவு பிரிவை சேர்ந்தவர் என்றும் தங்களுக்கு உதவி செய்கிறார் என்றும் எப்படி நம்பினார்கள் என்பது இப்போதும் பெரிய ஆச்சரியமாக உள்ளது
 
பின்பு இந்திய ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்து  ஆபரேஷன் புளு ஸ்டார்  நடவடிக்கையை மேற்கொண்டு  அவர்களை அழித்தது
மாரால்  ஆப் தி ஈஸ்டோரி இஸ்...
தன்னை ஒரு இஸ்லாமியராக பஞ்சாப் தீவிரவாதிகளையே ளை நம்பவைக்க கூடிய திறமை இவருக்கு இருக்கிறது.
இந்த கோணத்தில்  இவரை நோக்கினால் ...
இவரும் இவரின் சிஷ்யர்களும்  இன்னும் எந்தெந்த நாட்டில் எந்தெந்த தீவிரவாதிகளோடு சேர்ந்து அவர்களுக்கு தவறான பயங்கரவாத  ஐடியாக்களை வழங்கியிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? 

கருத்துகள் இல்லை: