ஜெயதேவன் : திரு பி டி ஆர் பழனிவேல் தியாக ராசன் அவர்களை அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அந்த ஆதங்கம் அவருக்கும் உள்ளுக்குள் இருப்பதை இன்றைய சட்டமன்ற பேச்சு மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.
தன்னுடைய துறை சார்ந்த மானிய கோரிக்கை மீது ஒரு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் சொன்னார் "நீங்கள் கேட்டுக்கொண்ட தேவையை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கான நிதியோ அதிகாரமோ என்னிடத்தில் இல்லை .
அதிகாரமும் நிதியும் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் நீங்கள் கேட்டால் ஆவன செய்யலாம் "என்று பொருள்பட சட்டமன்றத்தில் கூறினார்
அது ஏதோ குற்றம் போல சபாநாயகர் குறுக்கிட்டு" இதை எல்லாம் நீங்கள் உங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு வந்து சபைக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று சொன்னார்
ஒரு நிதி அமைச்சர் ஆக இருந்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு அமைச்சர் ஒரு சாதாரண தொழில்நுட்ப துறைக்கு அவரை பதவி இறக்கம் செய்தது அவருக்கு மன வேதனை .ஆனாலும் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை
எந்த அதிகாரமும் எந்த நிதி ஆதாரமும் இல்லாத ஒரு துறை எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது அவருடைய ஆதங்கம்
பொன்முடி போன்றவர்களுக்கு எல்லாம் உயர்கல்வி துறையை கொடுத்து பிறகு வனத்துறையை கொடுத்த முதல்வர் அதிகம் பேசப்படாத ஒரு துறையை கொடுத்து அவரை வட்டத்துக்குள் சுற்ற வைத்து விட்டார்
அவரால் நிதி ஒதுக்க முடியாது அதற்கு நிதி அமைச்சர் இடம் பேச வேண்டும் .அதற்கு அவருடைய தன்மானம் இடம் தரவில்லை என்றே நினைக்கிறேன்.
சின்ன கோரிக்கைகள் நிறைவேற்றித் தாருங்கள் என்று முதலமைச்சர் இடம் பேசவும் அவர் தயங்கி இருக்கலாம்
ஆகவே எல்லோருக்கும் முன்னாடி சட்டமன்றத்தில் தன்னுடைய துறையின் செயல் அற்ற தன்மையை தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி விட்டார்
அமைச்சர் பேசியதற்கு உண்மையாகவே இந்த அரசு வருத்தப்பட வேண்டும் .ஒரு சட்டமன்ற பொதுவெளியில் இவ்வளவு ஆதங்கத்தை ஒரு முன்னாள் நிதி அமைச்சர் வெளிப்படுத்தும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது சரியான அணுகுமுறை அல்ல
பி டி ஆர் அவர்கள் இருக்க வேண்டிய துறை வேறு.
அவர் போல இருப்பதில் தூய்மையான ஒரு அமைச்சர் திமுகவுக்கு கிடைப்பது பெரிய வரம். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்பது ஆதங்கமான விஷயம் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக