வியாழன், 16 மே, 2019

தவ்ஹீத் ஜமாத் + ம் ISIS பயங்கரவாதிகளின் 17 வீடுகள் மற்றும் 7 முகாம்கள் கண்டு பிடிப்பு!

Jeevan Prasad : தேசிய தவ்ஹீத் ஜமாத் எனப்படும் ISIS இஸ்லாமிய
பயங்கரவாதிகளின் 17 வீடுகள் மற்றும் 7 முகாம்கள் கண்டு பிடிப்பு!
ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் தொடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் பாவித்த 17 பாதுகாப்பு மிகுந்த வீடுகளும் , 7 பயிற்சி முகாங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.
கண்டு பிடிக்கப்பட்டுள்ள வீடுகள் கட்டுவபிட்டிய , நீர்கொழும்பு, சரிக்கமுல்ல , பாணதுறை , புனித. அந்தோனியார் வீதி கொழும்பு.3 , டெம்பள்ஸ் றோட் கல்கீசை , என்டேருமுல்ல வத்தளை , வனாத்திவில்லு , சாய்ந்தமருது ,மல்வானை, திகாரிய, கொச்சிக்கடை தளுவகொட்டுவ, குளியாப்பிட்டி , ஹெட்டிபொல , கட்டுபொத்த , நிந்தாவூர் , வாழைச்சேனை , சம்மாந்துறை , மயுர பிளேஸ் கொழும்பு- 6 ஆகிய இடங்களில் அமைந்திருந்தாக தெரிவித்துள்ளார்.
பயிற்சி முகாம்கள் வனாத்தவில்லு , அம்பாந்தோட்டை , நுவரெலியா , கண்டி அருத்பொல ,மல்வானை , வாழைச்சேனை ,காத்தான்குடி ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: