
மொத்தமுள்ள 7 ஆசிரியர்களில் 4 ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் கொடுத்துவரும் நிலையில், மீதமுள்ள 3 ஆசிரியர்களின் ஊதியம், மின்சாரக் கட்டணம், பள்ளி நிர்வாகச் செலவு ஆகியவற்றிற்காக பதநீர் விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை உள்ள பனை சீஸன் காலங்களில், பனையேறும் இக்கிராமத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்களிடமிருந்து பதநீர் பெறப்பட்டு, ஊர் நுழைவில் அமைக்கப்பட்டுள்ள பதநீர் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. கற்பகத்தரு என அழைக்கப்படும் பனை மரத்தில் மலர்கிறது மாணவர்களின் கல்வி. உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தும் முயற்சியையும் கிராம மக்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக