சனி, 18 மே, 2019

ரணில் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா.. Ranil meets Dhammika! 2020 common candidate Dhammika?

Jeevan Prasad : · ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி பொது
அபேட்சகருக்கான தம்மிக்க பெரேராவின் பரப்புரைகள் இன்று சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவர் ஜனாதிபதியானதும் ,பீல்ட் மாசல் சரத் பொண்சேகாவை பாதுகாப்பு அமைச்சராகவும் , கோடீஸ்வர தொழிலதிபரான ரொகான் பல்லேவத்தவை நிதியமைச்சராகவும் , ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி நாகாணந்த கொடிதுவக்குவை நீதியமைச்சராகவும் , நியமிப்பதாக குறிப்பிட்ட விளம்பர போஸ்ட்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று காண முடிகிறது.
இவரது நெருங்கிய நண்பர் மைத்ரியின் தம்பி டட்லி சிரிசேன. மகிந்தவின் ஏகப்பட்ட பணத்தை இவர்தான் நிர்வகிக்கிறார். பினாமியாக ....... ஆனால் தம்மிக்க ரணிலின் பழை கூட்டாளி. குடும்ப நண்பர்.
இரு நாட்களுக்கு முன் ரணிலும் - தம்மிக்கவும் தனிமையில் சந்தித்துள்ளார்கள். சென்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு ரணிலிடம் தம்மிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். ரணில் சந்திரிகா சொன்னதற்காக மைத்ரிக்கு வாய்பளித்தார். இப்போதுள்ள நிலையில் ரணில் தம்மிக்கவை தம்மோடு இணையச் சொல்லியதாக நம்பகமான தகவல் எனக்கு கிடைத்து. அதை தம்மிக்க ஏற்றுள்ளார்.


மகிந்தவால் ஜனாதிபதி போட்டியில் நிற்க முடியாது. அவரது கட்சியிலும் முறையானவர்கள் யாருமில்லை. மகிந்தவுக்கு உண்மையிலேயே கோட்டா வருவதில் விருப்பமில்லை. கோட்டா வந்தால் தனது குடும்ப அரசியலுக்கு சேதமாகிடும். அது முன்னாள் பாதுகாப்பு தரப்பினரது கரங்களை வலுப்படுத்தி மகிந்த குடும்ப அரசியலை இல்லாதொழித்து விடும். மகிந்தவின் கனவு நாமலை தலைவராக்குவது மட்டுமே. அதனால் 2025 வரை மகிந்த இழுத்துக் கொண்டு போகவே விரும்புகிறார். எனவே மகிந்த தம்மிக்கவை எதிர்க்க மாட்டார்.

கர்தினால் மகிந்தவின் மனைவிக்கு மிக நெருக்கமானவர். மகிந்த ஆதரவாளர். அவர் சொன்ன ஒரு வார்த்தை கோட்டாவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களது வாக்குகள் கிடைக்காமல் பண்ணும். அதை நான் பதிவிட்டுள்ளேன்.

அண்மைக் காலமாக நாகாணந்த கொடிதுவக்கு - சரத் பொண்சேகா - பாட்டலி சம்பிக்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராகும் நகர்வுகளை எடுத்து வந்தனர். தம்மிக்க பெரேரா 5 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கடனை தான் ஜனாதிபதியானால் ஒரே நாளில் அடைப்பேன் என சிங்களவர் மத்தியில் பேசி வந்தார் - வருகிறார். சமூக தொண்டுகள் செய்தும் வருகிறார். தமிழ் பேசுவோருக்கு அவர் புதியவர் சிங்களவருக்கு அவர் பழக்கமான பிகர். பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: