வெள்ளி, 17 மே, 2019

ஹைட்ரோ காபன் எடுக்க 274 இடங்களில் கிணறு ... இதை மடைமாற்றும் கமல் ... கோட்சே திரைக்கதை ..


குருமூர்த்தி - கமல்
ராஜா ஜி : கோட்ஸே பற்றிய கமலின் பேச்சு-- என் சந்தேகம்! - ஜே.டி.சாக்ரடீஸ்
தமிழகத்தை அழிப்பது மட்டுமே பாஜக வின் நோக்கம் என்பதற்கும், அவர்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சி நடத்தும் அஇஅதிமுக அரசையும் விமர்சிப்பதற்கு எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது ..... கோட்ஸே பிரச்சினையை கமல்ஹாசன் பேசி இருக்க வேண்டியதில்லை.... கோட்ஸே யார்? காந்தி யார்? என்பது மக்களுக்குத் தெரியாத ஒன்றல்லவே.... ஆனால்..... பேசிவிட்டார்...... இது கமல்ஹாசனின் இயல்பான பேச்சு அல்ல என்பதும் முன் தயாரிப்புடன் பேசப்பட்ட பேச்சு என்பதும் என் கணிப்பு!
இங்கே....> இந்த முன் தயாரிப்புக்கு மூளையே பாஜக வாகத்தான் இருக்க முடியும் என்பது என் நம்பிக்கை .....
ஆம்..... நெல் விளையும் டெல்டா மாவட்ட பூமி ஹைட்ரோ கார்பனுக்காக சல்லடையாகத் துளைக்கப் பட உள்ளது......
இந்த சிந்தனையை..... இதை எதிர்த்து போராடாமல் நம்மை மடைமாற்றம் செய்வதற்காக செய்யப்பட்ட முன் தயாரிப்பு.....

இந்த தேவையற்ற பேச்சு.....
நடிகராயிற்றே..... அதுவும் உலக நாயகனாயிற்றே..... இதுவரை பிறர் எழுதிக் கொடுத்ததைத்தானே பேசி நடித்துள்ளார்.....? இப்போதும் பாஜக எழுதிக் கொடுத்ததைப் பேசி நடித்துள்ளார்.... இப்போது.... மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற தேசத்துரோகியைச் சுட்டுப் படுகொலை செய்த தேசப்பிதாவாக உருவகப் படுத்தப்பட்டு விட்டார் கோட்ஸே......
காந்தி ஜெயந்திக்கு விடுமுறை நாள் என்பது தேச விரோதம் கோட்ஸே பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் .... என்றும் குரல்கள் வரலாம்....
பற்றி எரிகிறது டெல்டா விவசாயிகளின் வயிறு.......
ஆனால்......
தமிழகம் மதத்தைக் காப்பாற்ற மதிமயங்கி வீழ்ந்து கிடக்கிறது.

கருத்துகள் இல்லை: