ஞாயிறு, 12 மே, 2019

அமரர் கோவை மு.இராமநாதன் .. 27 முறை சிறைசென்றவர் .. 6 ஆண்டுகாலம் சிறையில் கழித்தவர்...!

திமுக முன்னாள் எம்பி கோவை ராமநாதன் மரணம்மாலைமலர் :கோவை: தி.மு.க. முன்னாள் எம்.பி. கோவை மு.ராமநாதன் (87) வயது முதிர்வு காரணமாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு ராமநாதன் உயிர் பிரிந்தது.
கோவை ராமநாதன் கோவை தென்றல் என்று அழைக்கப்பட்டவர். கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.
1971-76 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1984-89 வரை கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். 1996 கோவை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
மு.ராமநாதன் மாநகர செயலாளர், தணிக்கை குழு உறுப்பினர், அறக்கட்டளை அறங்காவலர், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்து இருந்தார்.

தற்போது உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
கோவை ராமநாதனுக்கு ராமகாந்தம் என்கிற மனைவியும், பன்னீர் செல்வம், இளங்கோவன், மு.இரா. செல்வராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
ராமநாதன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் திருச்செங்கோடு எம்.பி., கந்தசாமி உள்பட தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Mahalaxmi : சிறைப்பறவை பறந்துவிட்டது.!
16 வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.
கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சென்னை, என்று தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் 27 முறை சிறைபட்டவர். சுமார் 6 ஆண்டுகாலம்
சிறையில் கழித்தவர்.!
1953 ல் மும்முனைப் போராட்டம் 3 மாதம் சிறை.!
1962ல் விலைவாசி மறியலில் 4 மாதம் சிறை.!
1963ல் கோவையில் 144 தடைமீறல்
2 மாதம் சிறை.!
1964ல் மொழிப்போரில் அரசியல் சட்டம் பிரிவு"17ம் பாகத்தை கொளுத்தியதற்காக 1 ஆண்டு கடுங்காவல்.!
1965ல் நாஸ் தியேட்டரை தீயிட்டுக் கொளுத்தியதாக சதி வழக்கில் 3 மாதம் சிறை.! மேல் முறையீட்டினால்
1966ல் 2ஆண்டு கடுங்காவல்.! இதில் 10 மாதம் சிறை.! பின்னர் வழக்கு அரசுத்தரப்பில் திரும்பப்பெற்றதால் விடுதலை.!
1976ல் "மிசா" கைதியாக. கோவை சென்னை சிறைகளில் (9+5) 14 மாதம் சிறை.!
1977ல் மதுரையில் பிரதமர் இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் தளபதியாக. செயல்பட்டதால் கொலை முயற்சி வழக்கில் மதுரை, கோவை சிறைகளில் 2 ஆண்டு கடுங்காவல்!!
1977 முதல் 1989 வரை பல்வேறு போராட்டங்களில் 3மாதம், 2மாதம், 6வாரம் என்று சிறை.!
1984ஆம் ஆண்டு தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பினும் மொழிப்பிரிவு "343"ஐ இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கொளுத்தி #பேராசிரியர் உட்பட சட்டமன்ற பதவியை இழந்த 10 பேரில் ஒருவர்!
1991ல் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டதை கண்டித்து மறியல் செய்ததால் 3 மாதம் சிறை.!
இவ்வாறு #27முறைசிறைபட்டு
#ஆறுஆண்டுகாலம் சிறையில் ஜனாயகத்தையும் மொழியையும் காக்க. ...#சிறைப்பறவையாக சிறகடித்து பறந்தவர்தான்....
#கோவைத்தென்றல்முஇராமநாதன்
அவர்கள்.!
DMK. Advocate. GTR...

கருத்துகள் இல்லை: