திங்கள், 13 மே, 2019

உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது ஒரு ஊதாரி பார்ப்பான்" - 4 பிப்ரவரி 48 முரசொலி..

ஆலஞ்சியார் ; விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற
கமலின் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது அதை சொன்ன இடம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.. ஒன்றை கவனிக்க வேண்டும்,,ஒரு
இசுலாமியர் கூட கைதட்டவில்லை காரணம் தமிழ்நாட்டில் எந்த மதத்தை குறித்து பேசினாலும் அது மதத்தின் மீதான தாக்குதலாக இருப்பின் யாரும் கண்டுக்கொள்வதில்லை .. மத சடங்கு என்ற மூடநம்பிக்கையை வெகுவாக புறக்கணிப்பார்கள் .. அதை எதிர்ப்பதை கைதட்டி வரவேற்பார்கள் .. ஆனால் இரு மதங்களுக்கிடையான மோதலையோ வெறுப்பையோ யாரும் விரும்புவதில்லை .. மதங்களிடையே நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறது .. கமல் மிக தெளிவாகதான் பேசியிருக்கிறார் எச்சரிக்கையோடு விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி பார்பனன் என்றோ ஆர்எஸ்எஸ்காரனென்றோ சொல்லாமல் இந்து என்று பொது அடையாளபடுத்தி காப்பாற்றியிருக்கிறார் .. "தன் தசை ஆடும்"..
இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக .. மத கலவரத்தை திட்டமிட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு வந்து காந்தியை கொன்றதின் நோக்கத்தை பேசியிருக்கலாம் காந்தி கொல்வது மட்டுமல்ல மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி இஸ்லாமியர்களை வேட்டையாட வேண்டுமென்ற நோக்கம் தான் காரணம் .. 

இன்றைக்கு கோட்சே தேசபக்தராகவும் காந்தி தேசவிரோதியாகவும் சித்தரிக்கபடுவதும் அதை அரசு கண்டும் காணமல் இருப்பதும் அதைவிட காந்தியை ஏசுகிறவர்களுக்கும் கோட்சேவை புகழ்கிறவர்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தருவதும் தான் உச்சகட்ட கொடுமை.

கோட்சேவின் புகழ்பாட தனியாக அமைச்சகம் உருவாக்கினால் கூட வியப்பில்லை ..
..
கோட்சேவை தேசபிதா என விளிக்காத குறையாக ஆர்எஸ்எஸும் அதன் கிளைகளும் தங்கள் பரிவாரங்களோடு இந்த பாசிச பாஜக ஆட்சிகள் உலவுகிறார்கள் இன்னும் கொஞ்சநாள் போனால் ...இதே அரசு தொடருமானால் காந்தி படத்தை நீக்கிவிட்டு கோட்சே ரூபாய் நோட்டுகளில் இடம்பெறலாம் .. இந்த ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் .. கமல் முதல் தீவிரவாதி இந்து என்றவுடன் ஒட்டுமொத்த இந்துவை குறிப்பதாக சிலர் கண்டனத்தை பதிவு செய்கிறார்கள் .. ஆனால் முஸ்லிம் தீவிரவாதி என்ற போது அமைதி வாய்மூடி அமைதி காத்தவர்கள் .. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டுமே தவிர அதற்கு மதசாயம் பூசுவது சரியல்ல ..எந்த மதமும் நல்லதை தான் போதிக்கிறதென்கிறபோது எங்கிருந்து வருகிறது .. வன்மமும் தானே பெரியவன்/ மேலானவன் என்கிற நிலைபாடும் தன்னை/தன்கோட்பாட்டை நிலைநிறுத்திக்கொள்ள பிறரை தூண்டிவிடுதலும் மக்களிடையே பிரிவினையை சொல்லி மோதலை வெறியை உண்டாக்கி குளிர்காயும் சில விஷம சக்திகளே காரணமே தவிர சாமானியர்கள் அல்ல
அவனவன் கோட்பாட்டில் கொள்கையில் பயணித்தால்
மற்றவை உரிமை பறிக்காமல் இருந்தால் எங்கிருந்து வரும் வன்மம் கலவரம் வன்முறை குரோதம் தீவிரவாதம்..
..
நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து சிலர் மட்டுமே பயன்பெற பலன்பெற வேண்டி சாதி மத மோதலை தூண்டுகிறார்கள் .. அங்கிருந்து தான் உருவாகிறது தீவிர வாதம்..
..
காந்தியை சுட்டு கொன்ற போது இப்படிதான் செய்தியை வெளியிட்டார்.. #கலைஞர்
"உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது
ஒரு ஊதாரி பார்ப்பான்" - 4 பிப்ரவரி 48 முரசொலி..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: