சனி, 18 மே, 2019

இலங்கை கலவரங்கள் : சுமார் 500 கட்டிடங்கள் சேதம், இருவர் மரணம், பலர் கடும் காயம் ...

Jeevan Prasad : கடந்த 13ம் திகதி காவாலிகளின் வன் முறையில் .......
🧐 இருவர் மரணம்
🧐 10 பேருக்கு கடும் காயம்
🧐 நாத்தண்டிய பகுதியில் 5 படையினர் காயம்
🧐 வாறியப்பொலவில் 23 வீடுகளும் ,எண்ணை தயாரிக்கும் இடமென்றும் எரிந்து சாம்பல்
🧐 ஹெட்டிப்பொலவில் 70 வீடுகளும், 40 வியாபாரதலங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
🧐 பிங்கிரியவில் 3 இஸ்லாமிய மதக் கட்டிடங்கள் தாக்குதலுக்கு உண்டாகியுள்ளன
🧐 மினுவாங்கொடவில் 60 வியாபாரதலங்கள் தீக்கிரையாகியுள்ளன
🧐 60 பேர் கைது 33 பேர் தடுப்புக் காவலில்
🧐 இதுவரை சுமார் 500 வரையிலான கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
🧐 இதில் சிங்களவரது கட்டிடங்களும் அடக்கம்.
🧐 காடையர்களது தாக்குதலால் நாத்தண்டிய , கொட்டறாமுல்லை பிரதேசத்தில் வசித்த M.M.S. அமீர் எனும் 3 குழந்தைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
🧐 இதனிடையே கொட்டராமுல்ல மற்றும் தும்மோதர பிரதேச முஸ்லீம் காடையர்கள் , மொறகலே எனும் சிங்கள கிராமத்தினுள் நுழைந்து சிங்களவரது சில வீடுகளுக்கு சேதம் விளைவித்துள்ளார்கள்.

அதன்போது மொறக்கலே பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற இராணுவ சிறப்புப் படைப் பிரிவில் பணியாற்றிய ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அதன்பின் ஏற்பட்ட வன்மத்தால் கொட்டராமுல்லை முஸ்லீம் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த சிங்கள காடையர்கள், அங்குள்ள முஸ்லீம் நபர் ஒருவரை வாள் - பொல்லுகள் ஆகியவற்றால் தாக்கி கொலை செய்ததோடு அப்பகுதியில் உள்ள வீடுகளையும் தாக்கி சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.
🧐 சிலாபம் -வென்னப்புவ -மாறவில -கொஸ்வத்த - குளியாபிட்டிய - ஹெட்டிபொல -வாறியபொல - மாவத்தகம - பிங்கிரிய - நிக்கவெரட்டிய போன்ற பிரதான நகரங்களில் திட்டமிட்டே தாக்குதல் நடத்திய இக் குழுவினர், வியாபாரதலங்கள் ,வீடுகள் மற்றும் இஸ்லாமிய மதத்தலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கியுள்ளனர்.
🧐 மினுவாங்கொடை பகுதிக்குள் 2000க்கும் அதிகமான சிங்கள காடையர்கள் புகுந்து தாக்குதல்களை நடத்தியதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை: