செவ்வாய், 16 அக்டோபர், 2018

டி கே எஸ் இளங்கோவன் விடுவிப்பு .. திமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து ... பேராசிரியர் அனபகழகன் அறிவிப்பு

திமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்புதிமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை : திமுக செய்தித்தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக சார்பாக ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் என க.பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ. அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் இன்று வெளியிட்டது.

;
இந்நிலையில், திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொருப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: