


அமல்படுத்தவிடாமல் காவிப்பண்டாரங்கள் தூண்டுதலில் நடக்கும் வன்முறையையும், பெண்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் அட்டூழியத்தையும் பற்றி கருத்துக்கேட்கிறார்கள். ஆனால், இதுகுறித்து தன்னிடம் கேட்பது சரியாக இருக்காது என்றால், பிறகு எதைப்பற்றித்தான் இவரிடம் கருத்துக் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
நாட்டில் அப்போது நடக்கும் பரபரப்பான
விவாகரங்கள் குறித்துத்தானே ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பார்கள் என்ற
குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாதவரா கமல்?
அடுத்து ரஜினி செய்தியாளர்களைச்
சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்து
செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த ரஜினி, “காலங்காலமாக
கடைப்பிடிக்கும் பழக்கங்களை மாற்றக்கூடாது” என்று கூறியிருக்கிறார். எத்தனை
காலமாக பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார்கள்
என்ற உண்மைகூட தெரியாமல் தனது இஷ்டத்துக்கு கருத்துத் தெரிவித்திருக்கிறார்
ரஜினி.

இவருக்கு உதவியவன் ராகுல் ஈஸ்வர் என்ற
காவிப்படை உறுப்பினர் என்கிறார்கள். ஐயப்பன் பாதுகாப்பு குழுவில் இவனும்
முக்கியமான உறுப்பினர் என்கிறார்கள். இவனுடைய லீலைகளை பார்த்தால் படு
கேவலமாக இருக்கிறது.
இந்த விவகாரங்களையெல்லாம் ரஜினி அறிந்திருப்பாரா இல்லையா தெரியவில்லை. இதையெல்லாம் அறிந்திராமல் ரஜினியும் கமலும் என்ன விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என்றே விமர்சகர்கள் வினா எழுப்புகிறார்கள்.

இவர் ஸ்விட்சர்லாந்துக்கு போகவில்லை என்று யார் சொன்னது? நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே நிகழ்ச்சி நடந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறாரே. பிறகு எதற்காக தேவையில்லாமல் குழப்புகிறார் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா? என்று கேட்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக