
"தடுப்புசுவர் இல்லாத மாடிப்பகுதி அந்த டேங்க் அமைக்கப்பட்டுயிருந்த மாடியின் மேற்கு பகுதியில் 50 அடி உயரமிருந்தது. எந்த தடுப்புமில்லை. உள்ளே இறங்கி சுத்தம் செய்த மாணவி பயத்தில் ஆடியிருந்தாலோ, அல்லது டேங்க் மேல் ஏறும் போதோ, இறங்கும்போதே தவறுதலாக ஏதாவது நடந்துயிருந்தால் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழ வேண்டிய நிலை ஏற்பட்டுயிருக்கும்.
இந்த பள்ளியில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர்தொட்டிகள், டேங்குகளை மாணவிகள்தான் சுத்தம் செய்தார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதுப்போன்ற பணிகளை செய்ய பள்ளி நிர்வாகம், வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம் என்கிறது அரசாங்கம். அதற்காக நிதியும் ஒதுக்குகிறது. பள்ளிக்கு வரும் மாணவ – மாணவிகளிடம் ஆசிரியர்கள் எந்த வேலையும் வாங்கக்கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆயுதபூஜை விழாவுக்காக தண்ணீர் டேங்க்கை மாணவிகளை பாதுகாப்பற்ற முறையில் ஆசிரியர்கள் சுத்தம் செய்யவைத்ததை நகரத்தின் முக்கிய வீதியான தேரடிவீதி வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு வேதனைப்பட்டனர்.
இதுப்போன்ற உயிருக்கு உத்தரவாதமில்லாத
வேலைகளில் மாணவிகளை ஈடுபடுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்பதே
பலரின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக