சனி, 20 அக்டோபர், 2018

ஆட்டிசம் .... தமது own way புத்திசாலிகள். ஒரு லண்டன் தமிழ் தாயின்.

தீபன்
தீபன் வரைந்தது
ஆட்டிசமும் தீபனும் நானும்😁
தீபன் என்னை காணும் விதம் என் மகனின் வாழ்க்கையில் முக்கியமானவராக நான் இருக்கிறேன். பல சந்தர்பங்களில் அதனை தீபன் வெளிப்படுத்தி உள்ளார்.
எனக்கு இருமினால் தீபனுக்கு பயம். Amma don’t die என்பார். நான் இறந்தால் யார் தன்னை பார்ப்பது என்ற பயம் இருக்கக் கூடும். Live long 100 years என்பார். இப்படித்தான் சொற்களை பொருத்தி பேசுவார். தீபனின் புத்திசாலித்தனத்தையும் புரிதலையும் பல இடங்களில் சந்தர்பங்களில் கண்டுள்ளேன்.
ஓட்டிசம் என்பதை நாம் புரிந்து கொள்ளாமல், ஓட்டிசம் உள்ளவரை குறையுள்ள மூளை வளர்ச்சி அற்றவராக காண்பது எவ்வளவு தவறு.
சொற்களை கோர்வையாக்கி பேசத் தெரியவில்லை என்பதால் மொத்தத்தில் மூளை வளர்ச்சி குன்றியவர் என நினைக்கலாமா?
சில விடையங்களில் புரிதல் குறைவே அன்றி , brain damaged person அல்ல.
சில நாட்களுக்கு முன்பு ஆஸ்மா

அதிகரித்ததால் சுவாசிக்க கஷ்டப்பட்டு இருமினேன். தீபனுக்கு பயம் வந்துவிட்டது , எனது அறைக்கு வந்து அம்மா good , amma happy live long என்றார்.
என்னால் பதில் கூற முடியவில்லை.
பேசினால் இருமல் வந்துவிடும் அத்துடன் வழமையான குரலில் சரியாக அதே பதிலை கூற வேண்டும்.
அன்று அப்படி செய்ய முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் அதே கதையை பேசினார் .

எனக்கு அவரை ஆறுதல்படுத்த முடியாதபடியால் வாயை ஜிப் பண்ணுவதை போல் செய்து பூட்டுப்போட்டு, திறப்பை எறிவதுபோல் சைகையில் செய்தேன்.
என்னைப் பார்த்தார்.
நானும் சிரிக்காமல் பார்த்தேன்.
தீபன் ஒன்றும் பேசாமல் போய் படம் ஒன்று வரைந்து கொண்டு ,
என் அறைக்குள மீண்டும்
வந்து அதனை தந்தார்.
அதனை பற்றி மீண்டும் மீண்டும் பேசினார்.
அடுத்தடுத்த நாட்களிலும் அதனைப் பற்றி கூறிவிட்டு கலகலவென சிரித்தார். அப்போதுதான் புரிந்தது அந்த படத்தின் அர்த்தம் என்ன என்பது.
அந்த படத்தினை உங்களுடன் பகிர்கிறேன் பாருங்கள்.
இப்போதும் அந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்து சிரிக்கின்றேன்.
தீபனின் sense of humourஐயும் குறும்புத் தனத்தையும், தீபனின் கண்கள் என்னைக் காணும் விதமும்
என்னை
, தீபனை நினைத்து இரசித்து வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.
அன்புள்ளங்களே
உங்கள் பிள்ளைக்கு அல்லது தெரிந்தவர்களுக்கு ஓட்டிசம் இருந்தால் , அது ஒரு condition என்று பாருங்களேன் அன்றி மூளை அற்றவர் என நினைக்க வேண்டாம்.
அவர்கள் தமது own way புத்திசாலிகள்.
நேரம் எடுங்கள் அவர்களை புரித்து கொள்ள.
அன்பு என்ற பிரபஞ்ச பாஷை அவர்களுக்கு புரியும்.
நீங்கள் செய்வதை அவர்கள் செய்வார்கள்.
அதனால் அடிப்பது, சத்தம் போடுவது , அலட்சியம் செய்வது , தவறான வார்த்தைப் பிரயோகம் செய்வது என்பதில்
கவனமாக இருங்கள்.
எதனை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு மீண்டும் கிடைக்கும்.
மதித்து நடப்போம்.
மனதில் இடம் பிடிப்போம்.
சிந்திப்போம்
செயல்படுவோம்
நன்றி
Bamini Rajeshwaramudaliyar

கருத்துகள் இல்லை: