வியாழன், 18 அக்டோபர், 2018

அம்பானிக்காக பிரான்சை நிர்பந்தித்து மாமா வேலை பார்த்து ரபேல் விமானத்தை அதிக ...

சவுக்கு : போர்ட்ரைல் ஏவியேஷன்
வலைப்பதிவு
பிரான்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைமை செயலதிகாரி இடையிலான ஆலோசனை விவரங்களை வெளியிட்டுள்ளது
பிரெஞ்சு ஏவியேஷன் வலைப்பதிவு ஒன்று, இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும், விமானத் தயாரிப்பு நிறுவனமான, டசால்ட் ஏவியேஷன் முன்னணி அதிகாரிகள் மற்றும் இரண்டு தொழிற்சங்கள் இடையிலான ஆலோசனை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ், இந்தியா விமான படைக்கு 36 ரஃபேல் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்ததில் 2016இல் கையெழுத்திட்டன.
போர்ட்ரைல் ஏவியேஷன் எனும் வலைப்பதிவு, 2017, மே 11இல் நடைபெற்ற கூட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், டசால்ட்டின் முதன்மைச் செயல் அதிகாரி லோய்க் செகாலென், இரண்டு தொழிற்சங்கங்களிடம் விமானங்களுக்கான ஒப்பந்ததைப் பெற, இந்தியாவின் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வது கட்டயாமானது எனத் தெரிவித்தார்.

“…நாக்பூரில் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன உருவாக்கத்துடன் மேக் இன் இந்தியா தொடர்பான முழுமையான காட்சி விளக்கம் அளிக்கப்பட்டது” என்று சிஜிடி தொழிற்சங்கம் பதிவு செய்துள்ள குறிப்புகள் தெரிவிப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. “சேகலென் தகவல்படி, ரஃபேல் இந்தியா ஏற்றுமதி ஒப்பந்தத்தைப் பெற, இந்த உடன்பாட்டை ஏற்பது டசால்ட் ஏவியேஷனுக்குக் கட்டாயாமனாது எனத் தெரிவித்தார்.”
இரண்டாவது தொழிற்சங்கமான, சி.ஜி.எப்.டி பிரான்ஸ் மீது இந்தியா திணித்த ஒப்பந்தத்தின் தவிர்க்க இயலாத அம்சமாக மேக் இன் இந்தியா அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளதோடு, இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்காக டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இந்த விமானங்களைத் தயாரிக்க இருந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்த ஒப்பந்தத்தைப் பறித்துவிட்டதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டிவருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, இந்த ஒப்பந்தத்திற்காக ரிலையஸ் பெயரை இந்திய அரசு பரிந்துரைத்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலெண்டே கூறியது வலு சேர்த்துள்ளது.
கடந்த வாரம், பிரான்ஸ் புலனாய்வு செய்தி தளமான மீடியாபார்ட் வெளியிட்ட ஆவணம், ரஃபேல் விற்பனை ஒப்பந்ததை பெறுவதற்காக ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியதாக டசால்ட் ஏவியேஷன் தெரிவித்ததை சுட்டிக்காட்டியிருந்தது.
நன்றி; தி ஸ்க்ரால்
https://scroll.in/latest/898498/rafale-deal-french-aviation-blog-publishes-two-internal-dassault-union-documents

கருத்துகள் இல்லை: