செவ்வாய், 16 அக்டோபர், 2018

லீலா மணிமேகலை : வழக்கு போட்டால் சுசி கணேசனுக்குத்தான் ஆபத்து! me too..

லீனா மணிமேகலைவிகடன் -கே.ஜெரோம் கலிலுல்லா.ச : கணேசன் மேல் நான் வழக்குப் போடுவதற்குத் தயாராக இல்லை. அவர் என் மீது வழக்கு தொடர்ந்தால், அவருக்குத்தான் ஆபத்து” என எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த லீனா மணிமேகலை, ``மீடூ மூலம் சமீபத்தில் சினிமா பிரபலங்கள் தனக்கு நடந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை வெளிப்படுத்தி வருகிறார்கள்...
 பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தும் சூழல், தற்போது மீடூ மூலம் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை பாலியல் துன்புறுத்தலை வெளியே சொல்லாமல் இருப்பதற்குக் காரணம், அச்சம்தான். தற்போது இந்தச் சூழல் மாறியுள்ளது.
தான் அவமானப்பட்டதை வெளிப்படையாகச் சொல்வதற்குக் காரணம், இனி வரும் காலங்களில் வேறு எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதே. அதிகாரத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று சில அதிகாரம் படைத்தவர்கள்
நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதிகாரத்தை வைத்து பெண்களிடம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். முக்கியமாக, சினிமாத்துறையில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது.சுசி கணேசனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் பற்றிச் சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை. அதைப் பாதிக்கப்பட்ட அவர்கள்தான் தானாக வெளியே சொல்ல வேண்டும் . சுசி கணேசன் மேல் நான் வழக்குப் போடுவதற்குத் தயாராக இல்லை. அவர் என் மீது வழக்கு தொடர்ந்தால், அவர் போட்ட வழக்கு அவருக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். சினிமாத் தொழிலில் பிரபலமாக இருக்கும் ரஜினி, கமல் போன்றோர் மௌனமாக இருப்பது, தவறு செய்தோருக்கு பலமாகத்தான் அமையும். அவர்கள் மௌனத்தைக் கலைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: