புதன், 17 அக்டோபர், 2018

மோகன் குமாரமங்கலத்தின் பிடிக்குள் சிக்கினார் எம்ஜியார். வருமானவரி பாக்கி பயமுறுத்தியது

எதிர்நீச்சல் கலைஞர்
மோகன் குமாரமங்கலம்
karuppu.thamizhstudio.com : எஸ். எஸ் சிவசங்கர் : தேர்தலில் வெற்றி பெற்ற கலைஞர் ஆசுவாசம் அடைவதற்குள், ஓராண்டிலேயே அடுத்த குடைச்சல் துவங்கியது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சித் தலைவர்களுடன் இணைந்து, காய் நகர்த்தும் அளவிற்கு தேசிய அரசியலில் கலைஞருக்கு கிடைத்த முக்கியத்துவம், இந்திரா காங்கிரஸின் கண்ணை உறுத்தியது. அடுத்து வந்தத் தேர்தலில் தி.மு க உடன் கூட்டணி அமைத்தாலும், தி.மு.கவின் மிகப் பெரும் வெற்றி இந்திரா காங்கிரஸிற்கு மண்டையை குடைந்தது.
மாநிலக் கட்சிகள் வலு பெறுவது தேசியக் கட்சிகளுக்கு ஆகாது. அதிலும் அப்போது ஒற்றைக் கட்சியாக இந்தியாவை ஆக்கிரமித்திருந்த காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டு, அதில் இந்திரா தலைமையிலான இந்திரா காங்கிரஸ் மத்திய ஆட்சியை பிடித்திருந்த சூழல். கையை விட்டுப் போன தமிழ்நாட்டை மீண்டும் கைப்பற்றும் ஆசை இந்திரா காங்கிரஸின் மாநில தலைவர்களுக்கு வந்தது.
அதற்கு தி.மு.கவை வலுவிழக்க செய்வதே, வழி என முடிவு செய்தனர். அதற்கு வலுவான ஒரு தி.மு.க தலைவரை தேடினார்கள்.  வீழ்த்தும் அளவு பலவீனம் கொண்டவராகவும் தேடினார்கள். அவர்கள் கண்ணில் எம்.ஜி.ஆர் பட்டார். மக்கள் அறிந்த ஒரு நடிகராகவும், தி.மு.கவில் பொருளாளராகவும் அவர் இருந்தார். அவருக்கு பலவீனமும் இருந்தது. திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர், வருமான வரித்துறைக்கு அஞ்சுபவராகவும் இருந்தாக வேண்டும்.

வெளிநாடுகளில் சென்று படம் எடுத்து, அமலாக்கத் துறையின் பார்வையின் கீழும் இருந்தார் எம்.ஜி.ஆர். இந்த பலவீனத்தை அன்றைய மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் கணக்கிட்டு காய் நகர்த்தினார்.
எம்.ஜி.ஆருக்கும் ஏற்கனவே ஒரு வருத்தம் இருந்தது. 1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, அமைச்சராக ஆசைப்பட்டார். அதை கலைஞரிடம் வெளிப்படுத்தினார். திரைப்படத்தில் நடித்துக் கொண்டு, அமைச்சராக பணியாற்ற கோட்பாடு இடம் கொடுக்காது என சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.  திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு, அமைச்சராக வர அழைப்பு விடுத்தார் கலைஞர். ஆனால் எம்.ஜி.ஆருக்கு நடிப்பை நிறுத்த விருப்பமில்லை. அதனால் அமைச்சர் ஆசையை கைவிட்டார். அந்த கோபமும் இப்போது சேர்ந்துக் கொண்டது.
1972 ஜனவரியில் சென்னை சிம்சன் தொழிற்சாலையில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டது. மோகன் குமாரமங்கலம் கருத்து தெரிவித்தார். தி.மு.க செயற்குழுவில் இதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பிளவு பெரிதானது.
இதற்கிடையில் இன்னொரு சம்பவமும் நடைபெற்றது. 1972 ஆகஸ்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில் தன்னோடு கதாநாயகியாக நடிக்கும் ஒருவரை கழகத்தில் இணைத்து, மேடையில் முன் வரிசையில் அமர்த்த வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். அது சாத்தியமில்லை என்றார் கலைஞர். மாநாட்டு பணிகளை கவனித்து வந்த மதுரை முத்துவும் மறுத்து விட்டார். கழக நிர்வாகிகள் எல்லோருமே ஒப்புக் கொள்ளவில்லை.
மாநாட்டில் கலந்து கொண்டு, கலைஞரை புகழ்ந்தும், கழகத்தை வலுப் பெற செய்ய வேண்டுமெனவும் பேசினார் எம்.ஜி.ஆர். மத்திய அமைச்சர்கள் ஆட்சியை கலைக்க விரும்புகிறார்கள் என்றும் மாநில சுயாட்சியை அடைய வேண்டும் என்றும் பேசினார் கலைஞர். ஆனால் விரைவிலேயே அதற்கு மாறான நடவடிக்கைகளில் இறங்கினார்.
"தி.மு கவில் எல்லோரும் சொத்துக் கணக்கு கொடுக்க வேண்டும்", என்று கிளர்ச்சி செய்தார் எம்.ஜி.ஆர். முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கணக்கு கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தால் கூட நியாயம். ஆனால் அதிலும் குற்றம் எம்.ஜி.ஆர் மீதே இருந்தது.
"சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்துக்கணக்கை சமர்பிக்க வேண்டும்", என கலைஞர் ஒரு சட்டமே கொண்டு வந்திருந்தார். அதனபடி கணக்கு கொடுக்காமல் இருந்தவர் எம்.ஜி.ஆர் தான். அதை சமர்பிக்க பத்துக்கு மேற்பட்ட நினைவூட்டுக் கடிதங்களும் சென்றிருந்தன எம்.ஜி.ஆருக்கு. ஆனால் அவர் கணக்கு கொடுக்கவில்லை. ஆனால், அவர் தான் கணக்கு கேட்டார், நியாயவான் போல.
அதிலும் கொடுமை, "தி.மு.க கிளை செயலாளர்கள் துவங்கி எல்லோரும் கணக்கு கொடுக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆர் குரல் எழுப்பியது தான். அப்போது 18,000 கிளைசெயலாளர்கள், 135 வட்ட செயலாளர்கள், 14 மாவட்ட செயலாளர்கள் இருந்தனர். இவர்கள் கணக்கை வாங்கி, ஆய்வு செய்வது என்பது நடக்காத காரியம் என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.
எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதற்கு காரணம், கலைஞர் மீதும், தி.மு க மீதும் ஊழல் குற்றக் கரையை பூச வேண்டும் என்பதால் தான். அது தான் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை.
அப்போது எதிர்கட்சிகளே தி.மு.க ஆட்சி மீது குறை சொல்ல முடியாமல் இருந்த காலக்கட்டம். காரணம் இருந்தது. 1967 ஆம் ஆண்டில் தான் தி.மு.க அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. 1969 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா மறைவுற்றார். ஆட்சியையும், கட்சியையும் சிதைவுற்றிடாமல் காப்பதில் சில காலம் கழிந்தது. அடுத்து 1971 ஆம் ஆண்டில் ஆட்சியை கலைத்து பொதுத் தேர்தலை சந்தித்தார் கலைஞர். அதில் வெற்றி பெற்றார் கலைஞர். அதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததால் தான், 184  இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது தி.மு.க.
வெற்றி பெற்று, ஆட்சி அமைந்து ஓராண்டிற்குள் தான் எம்.ஜி.ஆர் தன் கிளர்ச்சியை துவங்கியது. அந்த ஓராண்டிற்குள் ஊழல் குற்றச்சாட்டு எழுப்புவது என்பது அபத்தமானது என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை, வழிகாட்டுபவர்கள் இட்ட ஆ
 http://karuppu.thamizhstudio.com/news/ethirneechal-kalaingyar-35468ignb?fbclid=IwAR0EaEPObt-m_tnkBYNitWfpaPgiAQIu8QZ-HX_S-nDiaqhbbHaeudXzMZo

Short history : Mohan Kumaramangalam married Kalyani Mukerjee, niece of Bengali politician Ajoy Mukherjee in 1943. Ajoy Mukherjee, later, served as the Chief Minister of West Bengal. The couple had a son, Rangarajan Kumaramangalam and two daughters.[9] Rangarajan Kumaramangalam was a member of the Indian National Congress and later, the Bharatiya Janata Party and served as a minister in the Narasimha Rao and Atal Behari Vajpayee governments.[9] Mohan's daughter, Lalitha Kumaramangalam contested the 2004 and 2009 Lok Sabha elections as a Bharatiya Janata Party candidate from Tiruchirapalli and lost on both occasions. The older daughter is Uma Kumaramangalam who was Physics teacher Bal Krishan Kalra's student at Springdale Higher Secondary School in Delhi and is married to Malay Mukherjee. Mohan Kumaramangalam's brother P. P. Kumaramangalam was a distinguished army officer who served as India's Chief of Army Staff.[9] His sister, Parvathi Krishnan was a politician of the Communist Party of India and served three terms as Member of Parliament from Coimbatore.[9] Kumaramangalam's grandson, Muktesh Mukherjee, and his wife Xiaomao Bai, are among the two Canadian passengers aboard Malaysia Airlines Flight 370 which went missing since 8 March 2014.[10] Kumaramangalam's other grandson, son of Rangarajan Kumaramangalam, and sharing the name with his grandfather, is a Renewable Energy Entrepreneur and carries the family legacy, as President of All India Professional's Congress, Tamilnadu Chapters. He unsuccessfully contested the Lok Sabha polls 2014, from Salem on Congress ticket.

கருத்துகள் இல்லை: