வெள்ளி, 8 ஜூன், 2018

தினமலர் அச்சம் : நீட் தேர்வுக்கு எதிராக பிரமாண்டமான கலவரம் வெடிக்கும் என்று நடுங்கம்?

போர்வையாளர்கள்,சதி,அடுத்த பகீர்,அம்பலம் தினமலர்: தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு எதிராக களமிறங்க,
பிளஸ் 2 பள்ளிக்கே செல்லாமல் நீட் பாஸ்
போர்வையாளர்கள்' சதித் திட்டம் தீட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, கிராமங்கள் தோறும், ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஆள் திரட்டி வருவதால், மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது. சதிச் செயலை முறியடிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், மாவட்ட போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகத்தில், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் சூழல் காணப்படுகிறது. சமூக விரோதிகள், மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்பினர், சில அரசியல் தலைவர்கள் மற்றும் போர்வையாளர்கள், சமீபத்தில், துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஊடுருவினர்.
இவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள, 17க்கும் மேற்பட்ட கிராமங்களில், வாடகை வீடுகளில் தங்கி, இளைஞர்களை மூளைச்சலவை செய்தனர்.< 13 பேர் பலி :அவர்களை, வன்முறை பாதைக்கு தயார்படுத்தினர். அதன் வாயிலாக, மே, 22ல், துாத்துக்குடியில் நடந்த பேரணியில், வன்முறையை துாண்டி விட்டதால், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டு, 13 பேர் பலியாகினர். அதற்கு
முன், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி, பிரசாரத்தில் ஈடுபட்டு, கலவரத்தை துாண்டினர். அதன் தொடர்ச்சியாக, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது என, வன்முறையில் ஈடுபட்டு, போலீசார் மீது, கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
ஏற்கனவே, மதுவுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், 'டாஸ்மாக்' கடைகளை சூறையாடினர். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் போராட்டத்திலும் புகுந்தனர். தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றம் நீடிக்க வேண்டும் என்பதே, இவர்களது நோக்கமாக உள்ளது.
கடந்த, 2017ல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வில் பங்கேற்ற, அரியலுார் மாவட்ட மாணவி அனிதா, 720க்கு, 86 மதிப்பெண் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால், அவர் தற்கொலை செய்தார்.
அவரது மறைவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், போர்வையாளர்கள், பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான, நீட் தேர்வு முடிவு, 4ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், வெற்றி பெற முடியாத விரக்தியில், விழுப்புரம் மாவட்டம், பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதிபா, சில தினங்களுக்கு முன், தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், திருச்சியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ என்பவரும், தற்கொலை செய்து உயிரிழந்து உள்ளார்.
இந்த மாணவியரின் உயிரிழப்பை காரணம் காட்டி, மீண்டும், தமிழகத்தில் பதற்றமான சூழல் ஏற்படுத்த, சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக, மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். சமூக விரோதிகள், மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்பினர், சில அரசியல் தலைவர்கள் ஆதரவுடன்,
இந்த போர்வையாளர்கள், கிராமங்களில் ரகசிய கூட்டம் நடத்தி, ஆட்களை திரட்டி வருகின்றனர்.
இந்த முறை, திருச்சியை மையப்படுத்தி, வன்முறையை கட்டவிழ்த்து விட சதி நடக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும், உளவு மற்றும், 'கியூ' பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கை :

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, மாவட்ட போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: துாத்துக்குடியில், வன்முறையை துாண்டி, கலவரத்தை ஏற்படுத்திய கும்பல், சேலம் - சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக, சதி செயலில் ஈடுபட, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஊடுருவி வந்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக, அங்கிருந்து ஓடி விட்டனர்.
தற்போது, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், கலவரத்தை துாண்ட முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சதி செயலில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: