ஞாயிறு, 3 ஜூன், 2018

காங்கிரஸ் : ம.பி.,யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்.. ஏற்கனவே இயந்திரத்தில் புரோகிராம் ?

தினமலர் :போபால்:மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்
சேர்க்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் ஆதாரம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி கமல்நாத் நிருபர்களிடம் பேசுகையில் : வரவிருக்கும் தேர்தலில் குளறுபடி செய்ய ஆளும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பேர் வரை போலி வாக்காளராக சேர்க்கப்பட்டுள்ளனர். போலி பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆதாரத்தை தேர்தல் கமிஷனிடம் வழங்கியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இங்குள்ள பா.ஜ., அரசை வீழ்த்த அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார் .

 பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு இதற்கிடையில் வரும் தேர்தலில் இம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்., கூட்டணி சேர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான பேச்சு மாயாவதியுடன் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ப்ரோக்ராம் செய்யப்பட்ட அல்லது இந்த வாக்குகள் நிரப்பப்பட்ட இயந்திரம் இருக்கலாம் அதாவது பெரிய மக்கள்தொகை உள்ள பகுதிகளில் இந்த இயந்திரம் யார் என்ன பிரஸ் செய்தாலும் லைட் எரிந்தாலும் உள்ளே பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வெளியே ரிசல்ட் என்று வரலாம்

கருத்துகள் இல்லை: