சனி, 9 ஜூன், 2018

நீட்’ தேர்வு ,, மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி தீவிர சிகிச்சை

‘நீட்’ தேர்வில் தோல்வி: மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி
தீவிர சிகிச்சை
நிம்மியின் திமிர் பேச்சு
தினத்தந்தி :கண்டமங்கலம், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து செஞ்சி அருகே பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, திருச்சி மாணவி சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். செஞ்சி அருகே மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி அருகே கண்டமங்கலம் அருகே மற்றொரு மாணவி அஷ்டலட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 இதுபற்றிய விவரம் வருமாறு:-
 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சேஷாங்கனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள். தம்பதியின் மகள் அஷ்டலட்சுமி (வயது 18). கண்டமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார். கடந்த மே மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான போது இவர் 738 மதிப்பெண்களே பெற்று இருந்தார்.

இந்தநிலையில் நீட் தேர்வையும் அஷ்டலட்சுமி எழுதினார். சமீபத்தில் நீட் தேர்வு வெளியானதில் மாணவி அஷ்டலட்சுமி தோல்வி அடைந்தார். இதனால் அவர் மனவேதனை அடைந்து வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். ஆனாலும் அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஷ்டலட்சுமி வீட்டில் இருந்த எலிமருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: