வெள்ளி, 8 ஜூன், 2018

குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் மேட்டூர் அணை திறப்பு இல்லை.. கண்டித்து திமுக வெளிநடப்பு

tamilthehindu : குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் மேட்டூர் அணை திறக்கப்படாது என முதல்வர் அறிவித்ததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை), விதி எண் 110-ன் கீழ், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்தாண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார். இதையடுத்து, குறுவை தொகுப்பு திட்டத்திற்காக அமைச்சர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேச சபாநாயகர் அனுமதித்தார்.
iv>
அப்போது, அமைச்சர்கள் பாராட்டிப் பேச அனுமதித்தால் தாங்கள் எதிர்த்துப் பேசவும் அனுமதிக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார். அதற்கு சபாநாயகர் மறுத்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல்வர் படித்த 110 அறிக்கையிலே விவாதம் கூடாது என சபாநாயகர் உத்தவு உள்ளது. இது ஏற்கெனவே விதிமுறையில் இருக்கக்கூடியதுதான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அமைச்சர்கள் நன்றி சொல்கின்றனர். இருந்தாலும், எதிர்க்கட்சி என்கிற முறையில் மேட்டூர் அணையை ஜுன் 12-ம் தேதி திறக்க முடியாது என முதல்வர் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்

கருத்துகள் இல்லை: