புதன், 6 ஜூன், 2018

எந்த முற்போக்கு வண்ணத்துக்கும் பயன்பட தகுதியற்ற நபர் ரஜினி

Raj Dev : ரஜினி/காலா சில உண்மைகள்.
1) ரஞ்சித்துக்காக ரஜினியை ஆதரிக்க நினைப்பவர்கள் கபாலியில் ஒரு முறை நீங்கள் ஆதரித்தது போதும். தமிழகத்தின் அரசியல் பொது மனநிலையில் கலக்கும் வாய்ப்பை தவற விட வேண்டாம். (இது வேண்டுகோள் மட்டுமே.)
2) எந்த முற்போக்கு வண்ணத்துக்கும் பயன்பட தகுதியற்ற நபர் ரஜினி. தூத்துக்குடியில் சுட்டுக் கொன்ற போலீசுக்கு ஆதரவாக ரஜினி பேசியது ஆத்திரத்தில் பேசியதல்ல. அது தான் அவரது கொள்கை. அதை அவருக்கு ஊட்டியது அவரது அரசியல் ஆசான் சோ ராமஸ்வாமி. (துக்ளக் படிப்பவர்களுக்கு அது தெரியும்.)
3) காலாவை தடை செய்ய நாம் கோரவில்லை. புறக்கணிக்க தான் கோருகிறோம். எனவே படைப்பாளியின்/கலைஞனின் படைப்புரிமையில் தலையிடுவதாக தயவு செய்து வகுப்பு எடுக்க வராதீர்கள்.
4) காலாவை பார்க்காமலே விமர்சனமா என்றும் எங்கள் புரிதலை சந்தேகிக்க வேண்டாம். இது ரஜினி என்ற நபரின் சமூகப் பாத்திரம் மீதான எதிர்வினை மட்டுமே.
5) 'எனக்கு ஒரு கட்சியும் வேண்டாம்; ஒரு கொடியும் வேண்டாம். டாங்கு டக்கர டொய்' - இது தான் தனது சினிமா பாடல் வழியாக ரஜினி முன்பு வெளிப்படுத்திய அரசியல் பார்வை. இப்படி எந்த அரசியல் சாய்மானமும் இல்லாத ஒருவன் இயல்பிலேயே வலதுசாரியாக தான் இருப்பான் என்பதற்கு ரஜினியின் இன்றைய செயல்பாடுகள் சான்று பகர்கின்றன.
6) எனவே ரஜினி ஒரு தறுதலையை புரிந்து கொள்ளும் உருமாதிரி. விமர்சனங்கள் காட்டமாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை: