
பேஸ்புக்கில் அவதூறாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக திருச்சி பெண் சூர்யாதேவிவை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மணப்பாறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யாதேவி. இவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை அவதூறாகவும் ஆபாச வார்த்தைகளிலும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலானது. இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் பலர் சூர்யா தேவிக்கு எதிராக புகார் அளித்தனர். குறிப்பாக தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி காளிதாஸ் என்பவர் சென்னை போலீஸில் புகார் அளித்தார்.
சூர்யா ஆரோ என்ற பெயரில் அந்த வீடியோவானது போஸ்ட் செய்யப்பட்டது. இது சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி திருச்சி பெண் சூர்யாதேவி வெளியிட்டது என்பதை கண்டறிந்தனர். இவர் வடபழனியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது வடபழனி போலீஸார் உதவியுடன் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையிலும் ஆபாசமாக பேசுதல் பிரிவின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக