
தினமலர் :புதுடில்லி : 'ஹிந்து அமைப்புகளான, வி.எச்.பி., பஜ்ரங் தளம் ஆகியவை, மதவாத தீவிரவாத அமைப்புகள்' என, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பு, பல்வேறு தகவல்கள் அடங்கிய, 'வேர்ல்ட் பேக்ட்புக்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.அதில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்புகள், 'மதவாத, தீவிரவாத அமைப்புகள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, அந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன."வி.எச்.பி.,தீவிரவாத அமைப்பா?,சி.ஐ.ஏ.,கருத்து,கடும் எதிர்ப்பு" இது குறித்து, வி.எச்.பி., செய்தி தொடர்பாளர், வினோத் பன்சால், நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ள புத்தகத்தில் உள்ள தகவல்கள் போலியானவை. நடவடிக்கை : ''இதுதொடர்பாக, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ''தவறான தகவலை கூறியதற்கு, சி.ஐ.ஏ., மன்னிப்பு கோர வேண்டும்,'' என்றார்.
சொந்த நாட்டு மக்களையே அடித்து கொலை செய்தவர்கள் . பார்க் போன்ற இடங்களில் காதல் ஜோடிகளை தாக்குவது, மாட்டு இறைச்சி கொண்டு போனான் என்று கொலைசெய்வது யாரு ? மாலேகோன் குண்டு வெடிப்பு , குஜராத் கலவரம் என்றார் என்று முஸ்லீம் தீவிரவாதிகள் பாதியில் தான் இதுவும் போகிறது .இதற்க்கு முன் வெளிநாட்டு father குடுமபத்தை எரித்தது . ஒரு ஹிந்து ISKON பூஜாரியை அமெரிக்க காரன் குடும்பத்தோடு எரித்து கொன்னா எப்படி இருக்கும் ?காந்தி கொலை எல்லாத்தையும் செய்து விட்டு வேஷம் போடுவது தான் காவிகள் வேலை. இதெல்லாம் துப்பாக்கி சூடு , அனிதா கொலை போன்று செயல்கள் இல்லாதவை ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக